Tuesday, February 23, 2016

மாறும் மனம்

மாற்றம் ஒன்றே மாறாதது-ன்னு சொல்வாங்க. மனுஷங்களுக்கும், அவங்க மனசுக்குமே இது பொருந்தும்னு நானே உணர்ந்துகிட்டு வரேன். சரி, அதைப் பற்றி அப்புறம் பேசலாம்…

இப்பதான் ஊருக்கு போயிட்டு வந்தேன். நிஜமாவே ‘flying visit’ தான். ஆனா முடிஞ்ச வரை கோவில்களுக்குப் போனேன். எங்க அம்மா வீட்டு பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவில், மாங்காடு காமாக்‌ஷி, வட பழனி முருகன், கற்பகாம்பாள் (கபாலீஸ்வரர் கோவில்) மதுரை மீனாக்‌ஷி, திருப்பரங்குன்றம், அம்மா வீட்டு பக்கத்தில் இருக்கிற ஆஞ்சநேயர் கோவில், அவ்ளோதான்.

வடபழனியில் முருகனுக்கு சந்தனக்காப்பு, வெள்ளிக் கவசம்.

மதுரையில் அம்மாவுக்குத் தங்கக் கவசம்.

மாங்காட்டிலும் கூட்டத்துக்கு முன்னாடியே போனதால ரொம்ப நேரம் பக்கத்தில் நின்னு தரிசனம்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, சிந்தூரக் காப்பு.


சரி, இப்ப மாற்றத்துக்கு வருவோமா.  முன்னல்லாம் எழுதாம இருக்க முடியாது. பிறகு மனசின் பக்குவத்துக்குத் தகுந்த மாதிரி, எழுதற விஷயம் மாறிக்கிட்டே இருந்தது. உணர்வு பூர்வமான கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பொது விஷயங்கள், பக்திப் பாடல்கள், இப்படி…இப்பல்லாம் எழுதறதுக்கோ, பகிர்ந்துக்கறதுக்கோ ஒண்ணுமே தோணறதில்லை. சொல்றதுக்கு என்ன இருக்கு அப்படின்னுதான் தோணுது. பேசாம இருக்கலாம் போல இருக்கு. அதுக்குன்னு வாழ்க்கை சலிப்பா இருக்குன்னோ, மன அழுத்தத்தில் (depressed) இருக்கேன்னோ பொருள் இல்லை. மௌனத்தில் ஒரு சுகம். அதைக் கலைக்க மனசு வரதில்லை. நிறைய யோசிக்காம இருக்கறதும் ஒரு விதத்தில் நல்லதுதானே…

எப்படியோ ப்ளாக் எழுதாம இருக்க காரணம் கண்டு பிடிக்கிறேன்னு தோணுதா? ஆனா உண்மையிலேயே மனநிலை இப்ப அப்படித்தான் இருக்கு. ஒரு வேளை சோம்பேறித்தனமாக் கூட இருக்கலாம். எனக்கே தெரியலை. எப்படியும் மாறிக்கிட்டே இருக்கற மனசுதானே… சீக்கிரமே இத்தை எழுது, அத்தைச் சொல்லுன்னு தொந்தரவு பண்ணினாலும் பண்ணும். அப்படி ஏதாச்சும் சொல்றப்ப மறுபடியும் வரேன்… உருப்படியா ஏதாச்சும் சொல்ல முடியும்ணு தோணினா அப்பவும் வருவேன்…

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

9 comments:

  1. மனம் சொல்வதைக் கேட்க வேண்டியது அவசியமே. இனிதாக அமையட்டும் இந்த இடைவெளி.

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி ராமலக்ஷ்மி :)

      Delete
  2. வணக்கம்
    எழுதுங்கள் ஒரு வித திருப்திதான் மனதில்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உண்மமைதான், தவறாத வருகைக்கு நன்றி ரூபன்.

      Delete
  3. //இப்பதான் ஊருக்கு போயிட்டு வந்தேன். நிஜமாவே ‘flying visit’ தான். // !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சுக்கோங்க கீதாம்மா. இந்த முறை பேச முடியலை. இருந்த கொஞ்ச நாள்ல உடம்பு சரியில்லாம வேற போயிடுச்சு...அதான்...

      Delete
  4. மனம் சொல்வதை அப்படியே எழுதுங்க கவிநயா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜெஸ்வந்தி!! ரொம்ப நாளாச்சு பார்த்து... நீங்க சொல்றது சரிதான்...சொல்லும்போது சொல்றபடி எழுதறேன்!

      Delete
  5. சுய சக்தி
    சுய ஈர்ப்பு (சேர்த்தி)
    சுயம் உயர்த்தி
    சுய ஆர்த்தி
    சுய நேர்த்தி
    சுயம் செலுத்தி
    சுய பூர்த்தி
    சுய கீர்த்தி
    சுயம் மூர்த்தி

    பிரபஞ்ச இரகசியம்
    எண்ணத்தின் எழுச்சி
    ஒருமுகப் பயிற்சி
    இடைவிடா முயற்சி
    ஈடில்லா தொடர்ச்சி
    ஈட்டித்தரும் முதிர்ச்சி

    பாவனை செய்யுங்கள்
    பாவனை செய்ய செய்ய
    பரம நிலையும் வந்து சேரும்.

    ஆனந்தம் பரமானந்தம்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)