Monday, August 3, 2015

நெகிழ வைத்த வாழ்த்து


ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாள் வந்தாலே பயமா இருக்கு இப்பல்லாம்! வயசு ஏறிக்கிட்டே போகுதில்ல, அதான். ஒரே ஒரு சின்ன ஆறுதல் என்னன்னா... எல்லாருக்குமே அப்படித்தானே? ஹி…ஹி…

இந்த வருடமும் என்னோட குடும்பத்தினர் மட்டுமல்லாம, எதிர்பாராத விதமா சில மாணவிகளிடமிருந்து, சில தோழிகளிடமிருந்து, இப்படியெல்லாம் வாழ்த்துகள் கிடைச்சது. (எதிர்பாராம கிடைச்சா சந்தோஷம். எதிர்பாராமா இருக்கறதால கிடைக்கலன்னா வருத்தமும் இல்லை! அதான் நம்ம பாலிஸி)

என்னோட அன்பான நாத்தனார் சொன்னதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. “அண்ணி உங்களுக்கு அத்தனை (சொல்ல மாட்டேனே!) வயசு இல்லை… உங்களுக்கு 18 வயசுதான் + அத்தனை வருஷ அனுபவம்”, அப்படின்னு! இது எப்படி இருக்கு!

எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி ஒரு வாழ்த்து லலிதாம்மாகிட்ட இருந்து, “அம்மன் பாட்டு” தளத்தில்: எதிர்பார்க்கவே இல்லை. அழுகையா வந்திருச்சு…

கவிநயத்தேனூறுந் தமிழ்ப்பாமலர் தூவி
சிவையே!செவ்வாய்தோறும் உனைப் பாடி உருகும்
ஆணிப்பொன்மகள் பிறந்த நன்னாளாம் இன்று
ஆடிபெருக்காய் நீ அருள்பெருக்கு அவள்மேல் !


கோடிகோடிச் செவ்வாய்கள் அவள் பார்க்க வேண்டும் !
 பாடலால் பக்தரைப் பரவசமாக்க வேண்டும்  !
பொங்கும் நல்வளத்தோடு அவள் வாழ வேண்டும் !
எங்கிருப்பினும் அவளை நீ காக்க வேண்டும் !


அன்புமகள் கவிநயாவுக்கு இனியபிறந்தநாள்  வாழ்த்துக்கள் !



அன்பைப் பொழிகிற அனைவரையும் அன்னையின் உருவாகவே காண்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

10 comments:

  1. ஹி....ஹி.... ரொம்ப லேட்டா நானும் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கிறேன். ஆடி பதினெட்டு தான் உங்க பிறந்த நாளா இனிமே ஞாபகம் வச்சுக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தானைத் தலைவி!

      Delete
  2. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  3. தாமதமாக, என் நல்வாழ்த்துகளும் :)!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!..தாமதமான வாழ்த்து தான் இந்த வருஷம்..(இனி நினைவில் வைச்சுக்கிறேன்)..ஆடிப்பெருக்கிலே பிறந்த கவிநயா பல்லாண்டு பல்லாண்டு தேனூறும் கவி வழங்கி நீடுழி வாழ்வாங்கு வாழ, மதுராபுரியாளும் ராஜமாதங்கியை வேண்டிப் பணிகிறேன்!!!!!!...

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)