Monday, January 12, 2015

குன்று குடையா எடுத்தான்!

ஏரார்ந்த கண்ணி - 5


கோவர்த்தன கிரிமலையில் கோலாகலம்!
கோபர்களும் கோபிகளும் கொண்டாட்டம்!
நீல வண்ணன் திருவடிக்கு நீராஞ்சனம்!
கோல எழில் கண்ணனுடன் குதூகலம்!

தேவர்கள் தலைவன் இதனைக் கண்டான்!
தணியாத கோபம் கொண்டவன் வெகுண்டான்!

படபடவென்று வானம் இடிபட
தடதடவென்று பேய்மழை பொழிந்திட
வீசும் புயலினில் மலைகளும் அசைந்திட
மிகப் பெரும் நாசம் செய்திடத் துணிந்தான்!

குழந்தைகள், பெரியவர் அனைவரும் அரண்டனர்;
ஒதுங்க இடமின்றி தவித்தே அலைந்தனர்;
ஆவினம் யாவையும் அஞ்சி நடுங்கின;
ஓலமிட்டே எங்கும் ஓடித் திரிந்தன!

அவல நிலையிதைக் கண்டான் கண்ணவன்...
துவளும் உயிர்களைக் காக்கப் பிறந்தவன்...

அபயம் தந்திடத் திருவுளம் கொண்டான்!
சிறு இதழ் மீதினில் குறு நகை தவழ
சிற்றஞ் சிறுவிரல் நுனியின் மீதினில்
கோவர்த்தனத்தைத் தாங்கிப் பிடித்தான்!

மாபெரும் குடையொன்று செய்தான் கண்ணன்,
மக்கள், மாக்கள் அனைவரும் ஒதுங்கிட!
தஞ்சம் என்று வந்தவர்க் கெல்லாம்
அஞ்சேல் என்றே அடைக்கலம் அளித்திட!

அனைத்தும் கண்டாள், அன்னை யசோதை…
விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்


 

14 comments:

  1. ஆஹா!..கண்ணன் கோவர்த்தன கிரியைத் தாங்குவது கண்முன் வந்து விட்டது!.. என்ன தவம் செய்தாள் யசோதை?!!!...ஸ்ரீமந்நாராயணீயத்தில், "உலகில் உள்ள புண்ணியசாலிகளை எல்லாம் ஜெயித்தாள் யசோதை " என்கிறார் பட்டத்திரி!..

    ///ஆயர்குல இரத்தினத்தை
    அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
    அன்பு மீற அணைக்கின்றாள்!////

    யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்!.. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!..

    ReplyDelete
    Replies
    1. ஆமால்ல? யசோதை சொல்லுக்கெட்டாத பெருந்தவம்தான் செய்திருக்கிறாள். நன்றி பார்வதி!

      Delete
  2. இறையுணர்வில் நீங்களும் திளைத்து எங்களையும் மூழ்க செய்து விட்டீர்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வெகு அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  4. ரசித்தேன்.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்பான பொங்கல் வாழ்த்துக்கள். புதிய பகுதியை இப்பொழுது தான் பார்த்தேன். ஒவ்வொன்றாகப் படித்து விட்டு வருகிறேன். தங்கள் முயற்சிக்கு அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜீவி ஐயா!

      Delete
  6. நன்றி தனபாலன்!

    ReplyDelete
  7. அனைவருக்கும் அன்பான, (சற்றே தாமதமான) இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
  9. கண்ணனைப் போன்றே மிகவும் அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    You may like to go through this Link:

    http://gopu1949.blogspot.in/2015/01/9-of-16-43-50.html

    This is just for your information, only

    With kind regards,
    GOPU [VGK]
    gopu1949.blogspot.in

    ReplyDelete
  10. http://gopu1949.blogspot.in/2015/01/11-of-16-61-70.html
    http://gopu1949.blogspot.in/2015/01/10-of-16-51-60.html

    You may like to go though the above Links in which your name is appearing.

    Just for your information, only

    VGK

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)