Sunday, January 4, 2015

தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!

ஆருத்ரா தரிசனச் சிறப்புப் பதிவு...

சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள்! சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!



தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம் தரிகிட தித்தித் தோம்!

ஆடும் பதம் தூக்கி நாடும் அடியவர்க்கு
  தேடி அருள் புரியும் நடராஜா!
பாடி வந்துந்தன் பாதம் பணிந்தோர்க்கு
  ஓடி வர மருளும் அருள்நேசா!

தாவித் தாவி உந்தன் பதங்கள் நடமாட
  தேவி சிவகாமி உடனாட
கொன்றை மலரணிந்த செஞ்சடைகளாட
  கொத்தும் அரவுகள் கூத்தாட

கையில் தீயாட காலிற் சிலம்பாட
  காற்றும் வெளியும் சேர்ந்தாட
கண்ணில் கனலாட கங்கைப் புனலாட
  மண்விண்ணும் தம்மை மறந்தாட

மெய்யில் நீறாட வையம் புகழ்ந்தாட
  மெய்யா உன்னைப் பணிந்தோமே!
வெய்யும் துயரோட ஐயம் பறந்தோட
  ஐயா உன்னடி அடைந்தோமே!

தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம் தரிகிட தித்தித் தோம்!


--கவிநயா


படத்துக்கு நன்றி:  http://dwarak82.blogspot.com/2012/09/blog-post_9739.html


9 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  2. அற்புதம் ! நாங்களும் ஆடுகின்றோம் உங்கள் பாட்டுக்கு. ஆதிரையானும் ஆடியிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. நான் வரும்போது நேரில் பார்க்கிறேன், உங்க ஆட்டத்தை :) நன்றி தானைத் தலைவி.

      Delete
  3. தாளலயத்துடன் மிக அருமையான பாடல், கவிநயா. இரசித்தேன்.

    ReplyDelete
  4. பாடலைப் பாடும் போதே ஆடும் அம்பலத்தானின் திருக்கூத்து கண்முன் தோன்றுவது போலுள்ளது!...

    ///வெய்யும் துயரோட ஐயம் பறந்தோட
    ஐயா உன்னடி அடைந்தோமே!///

    தற்செயலாக வந்து விழுந்த வார்த்தைகள் போலில்லை!... இறையருளே இன்சொல்லாய்... நன்றி சொல்ல வார்த்தைகளில்லை!.. ஆதிரையான் அடிமலர்கள் போற்றுவோம்!..

    ReplyDelete
    Replies
    1. அவனருளாலே அவன் தாள் வணங்கி... எனக்கும் பிடித்த வரி. மிக்க நன்றி பார்வதி!

      Delete
  5. ஆஹா... கவிதையில் அற்புதமான நடனம்...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)