Monday, November 17, 2014

பொல்லாச் சிறகு!


 
ஒரு சுஃபி ஞானியும், அவருடைய சீடரும் நடந்து போயிட்டிக்கிருந்தாங்க. அன்றைக்குன்னு பார்த்து அப்படியொரு வெயில். அப்படியே உடம்பெல்லாம் எரியுது. சீடரால தாங்கவே முடியலை. ஆறா வழியற வியர்வையைத் துடைச்சுக்கிட்டே, “அப்பப்பா! இந்த வெயில் என்னமா சுட்டெரிக்குது!” அப்படின்னாரு. உடனே சுஃபி ஞானிக்கு கோபம் வந்திடுச்சு. “இறைவன் ஒவ்வொண்ணையும் ஏதோ ஒரு காரணத்தோடுதான் அமைச்சிருக்கான். அதெப்படி நீ இறைவனோட ஏற்பாட்டைக் குறை சொல்லலாம்?”, அப்படின்னு சொல்லி அந்தச் சீடனையே வேண்டான்னு அனுப்பிச்சிட்டாரு.


சன் தொ.கா.யில் வருகிற “ஆன்மீகக் கதைகளில்”, திரு.சிவகுமார் சொன்ன கதை இது.

இதே கருத்தை ஒட்டி சுகிசிவம் ஐயா அவர்கள் பேசறதையும் கேட்க நேர்ந்தது… ஔவைப் பாட்டியுடைய பாடல்கள்ல, “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி” அப்படிங்கிற பாட்டு ரொம்பப் பிரபலம். அந்தப் பாட்டைப் பற்றித்தான் சுகிசிவம் ஐயா கடுமையா விமர்சனம் செய்தாரு. அதெப்படி ஔவைப் பாட்டி வான்கோழியோட சிறகை “பொல்லாச் சிறகு” அப்படின்னு கிண்டலடிக்கலாம்? அதுக்கு இயற்கையா அமைஞ்சது அதுதான். அதுல அதனோட தப்பு என்ன இருக்கு? மயில் இறக்கையை விரிச்சு ஆடுதுன்னா, அது அதனோட இணையைக் கவர்றதுக்காக ஆடுது. அது என்ன மனுஷங்க சந்தோஷப்படட்டும்னா ஆடுது? வான் கோழியும், தன்னோட இணைக்காக தன் சிறகை விரிச்சு ஆடுது. அது என்ன மயிலைப் பார்த்து, அதே போல அழகா இருக்கணும்னா ஆடுது? அப்படின்னு பொரிஞ்சு தள்ளிட்டாரு.


அவர் சொல்ல வந்தது என்னன்னா, ஒருத்தரை எதுக்காச்சும் பாராட்டணும்னா, அவரைப் பாராட்டறதோட நிறுத்திக்கணும். அவரைப் பாராட்டணும்கிறதுக்காக, மத்தவங்களை மட்டந்தட்டறது சரியில்லை, அப்படிங்கிறதுதான்.


சுஃபி ஞானி கதையும், பொல்லாச் சிறகு விளக்கமும் வேற வேற கருத்துகளுக்காகச் சொல்லப்பட்டதுன்னாலும், எனக்கென்னவோ ரெண்டுமே ஒரே கருத்தை விளக்கற மாதிரி பட்டது… அதாவது கிட்டத்தட்ட சுஃபி ஞானி மாதிரியே சுகிசிவம் ஐயாவுக்கும் இறைவனோட (அல்லது இயற்கையோட) படைப்பைக் கிண்டல் பண்றது பிடிக்கலை!


உலகத்தில் உள்ள ஜடப் பொருட்களையும் மனுஷங்களையும், “என்னுடையது, என்னுடையது”ன்னு சொல்லிக் கொண்டாடறோம். அதனாலதான் அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா மனசு பதறிப் போயிடுது. அதே போல இறைவனையும், “இவன் என்னுடையவன்”ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டா, மற்றதெல்லாமே “என் இறைவனுடையது”ன்னு ஆகிடும் தானே?


விவேகானந்தர் சொல்லுவார், “முதலில் இறைவனை நேசிக்கக் கற்றுக் கொள், பிறகு உலகத்தை நேசிப்பது தானாக நடக்கும்”, அப்படின்னு. அது இப்பதான் இலேசா புரியற மாதிரி இருக்கு…




எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்

கவிநயா


படத்துக்கு நன்றி... http://images.travelpod.com/tripwow/photos/ta-00cd-d3c4-16cc/one-friendly-peacock-at-the-bird-park-kuala-lumpur-malaysia+1152_12952380932-tpfil02aw-8497.jpg


3 comments:

  1. HATS OFF!.....EXCELLENT POST!!.....THANKS A LOT!.. (SORRY..TAMIL FONT PROBLEM!!..).

    ReplyDelete
  2. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி...
    சுகி சிவம் பொறிஞ்சு தள்ளினது சரியின்னுதான் தோணுது...
    நல்ல பகிர்வு...

    ReplyDelete
  3. வருகைக்கு மிக்க நன்றி, பார்வதி, மற்றும் சே.குமார்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)