Monday, August 25, 2014

போயே போச்சு!

வணக்கம். நல்லாருக்கீங்களா? வர வர அடிக்கடி பார்க்க (எழுத) முடியறதில்லை... இப்பவும் ஒங்களக் கொஞ்சம் வெரசாவாச்சும் பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்...

உடம்பு இருக்கே... அதுல இருக்கிற உறுப்புகளெல்லாம் "நான் இருக்கேன்", "நான் இருக்கேன்" அப்படின்னு அப்பப்ப... இல்லையில்லை... அடிக்கடி ஞாபகப்படுத்திக்கிட்டிருக்கு. காலம் போறதுக்குள்ள எல்லா வலியும் அனுபவிச்சாதான் அதுக்கு திருப்தியா இருக்கும் போல!



அந்த மாதிரி இப்ப சமீபத்துல என்னை வந்து சந்திச்ச வலி - இடுப்பு வலி. (back pain இல்லை; hip pain). எப்படி வந்துச்சுன்னு எனக்கே புரியலை. புதுசு... அங்கெல்லாம் கூட வலிக்கும்னு இப்பதான் தெரியும்! எப்பப் பார்த்தாலும் 'அங்க வலிக்குது', 'இங்க வலிக்குது'ன்னு யார்கிட்டயும் சொல்லவே கூடக் கூச்சமா இருக்கு. ஏன்னா, இப்பதான் 'back pain' வந்து போயி, வந்து போயி, வந்து போயி, ஒரு வழியா வழி அனுப்பி வச்சேன். உடனடியா இவங்க வந்து நிக்கிறாங்க! எப்படி இருக்கும்! எனக்கே எரிச்சலா இருந்தது. வீட்ல சொன்னா லக்ஷார்ச்சனைதான் நடக்கும். என்னடா பண்றதுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். நமக்கு உதவறதுக்குன்னுதான் ஒத்தர் எப்பவும் தயாரா இருக்காரே... அவரைத்தான் கேட்டேன். அதாங்க கூகுளாண்டவர்!

இந்த குறிப்பிட்ட விடீயோ எப்படியோ என் கண்ல பட்டது (என் அம்மாவோட அருள்தான்).  அவ்வளவு எளிமையான சுலபமான ஒரு விஷயத்தால உடனடியா மந்திரம் போட்டது மாதிரி இடுப்பு வலி போயே போச்சு! அதையும் free-யா you-tube-ல ஏற்றினவங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.

உங்களுக்கும் இடுப்பு வலி இருந்தா உதவுமேன்னு சொல்றதுக்காக வந்தேன்...

https://www.youtube.com/watch?v=DAHWDr2XF2w

எல்லாரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

4 comments:

  1. உடல் நலம் பேணவும்.

    ReplyDelete
  2. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்...
    எல்லாரும் நல்லாயிருக்கணுங்கிற உங்க நல்ல மனசுக்கு இடுப்பு வலி விரைவில் குணமாகட்டும்.

    ReplyDelete
  3. பயனுள்ள போஸ்ட் ! எப்போ வரீங்க ? உடம்பை பார்த்துக்கோங்க.

    ReplyDelete
  4. மற்றவருக்கும் பயனாகும் நல்ல பகிர்வு.

    உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)