Monday, July 14, 2014

யாரு தெச்ச சட்டை?



உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை பார்த்தீங்களா? அப்படின்னா அந்த விளையாட்டு வீரர்கள் போட்டிருக்கிற சீருடைகளைக் கவனிச்சீருக்கீங்களா? அவங்க போட்டிருக்கறது யாரு தெச்ச சட்டை, சொல்லுங்க? பாட்டி தெச்ச சட்டையா, அல்லது தாத்தா தெச்ச சட்டையா?

ரெண்டும் இல்லை! அவங்க போட்டிருக்கிறதெல்லாம் ‘பாட்டில்’ல தெச்ச சட்டையாம்! அதாவது, “recycled bottles”-ல இருந்து தயாரிச்சவையாம்!

Time பத்திரிகையைப் புரட்டிக்கிட்டிருந்த போது தற்செயலா இந்தச் செய்தி கண்ல பட்டுது. உலகக் கோப்பையில் பங்கு பெற்றிருக்கிற, 9 அணிகள், இந்த மாதிரி தயாரிச்ச சட்டைகளைப் பயன்படுத்தறாங்களாம். இந்த மாதிரி, உருவாக்கக் கடினமா இருக்கிற பொருளிலிருந்து (hard plastic) சுலபமா உருவாக்கிற பொருள் (soft breathable cloth) உற்பத்தி செய்யறதை “downcycling” அப்படின்னு சொல்றாங்க.

Recycle பண்ணும்போது (bottle –ல இருந்து bottle) தேவைப்படற சக்தி(energy)யை  விட, downcylce பண்ணும்போது (bottle-ல இருந்து சட்டை) தேவைப்படற சக்தி அதிகமாம். அதனால சட்டை தயாரிக்க 100% bottles பயன்படுத்தறதை சில நாடுகள் தவிர்ப்பதாகச் சொல்றாங்க.

ஆனா இந்த சட்டைகளும் biodegradable-ஆ இருக்காதுதானே? அவற்றையும் மறுபடி recycle மட்டும்தானே பண்ண முடியும்? அதைப் பற்றி கட்டுரையில் ஒண்ணும் போடலை...

இருந்தாலும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரிச்சிக்கிட்டே இருக்கிற நிலைமையில், bottle-களை இப்படியும் பயன்படுத்தறாங்கன்னு தெரிஞ்ச போது ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது!

இந்த சட்டைகள் ரொம்ப ரொம்ப மென்மையா ரொம்ப சுகமா இருக்குமாம் போட்டுக்கிறதுக்கு… நாமும் ‘பாட்டில்'ல செய்த சட்டை வாங்கி மாட்டிக்கலாமா?… என்ன சொல்றீங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

மேலும் வாசிக்க விரும்புபவர்களுக்காக: http://content.time.com/time/magazine/article/0,9171,1995859,00.html


Picture Credit: http://en.wikipedia.org/wiki/2014_FIFA_World_Cup

8 comments:

  1. வியப்பான அறியாத தகவல்... நன்றி...

    ReplyDelete
  2. இப்பத்தான் இத தெரிஞ்சுக்கிட்டேன்.. நிசமா மென்மையா இருக்குதாமா?! அப்ப கட்டாயம் ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அப்படித்தான் கேள்வி... நன்றி பார்வதி!

      Delete
  3. முதல்ல பிளாஸ்டிக்கை உருவாக்குவானேன் அப்புறம் அதை எப்படி ரீசைக்கிள் பண்ணறதுன்னு யோசிப்பானேன். எப்படியோ, இந்த அளவுக்காவது இருக்காங்களே ரொம்ப சந்தோஷம். அதோட ஆச்சர்யம், நீங்க இந்த மாதிரி ஒரு போஸ்டை போட்டது. :)

    ReplyDelete
    Replies
    1. அதானே... என்ன செய்யலாம். மனுஷங்களோட புத்தியே அப்படித்தான் போல.

      இயற்கை, சுற்றுப்புறச் சூழல் பற்றிய கவலை எப்போதும் உண்டு தலைவி...அதான் இதைப் படித்ததும் பதிவிடத் தோன்றியது :)

      நன்றி தானைத் தலைவி!

      Delete
  4. வியப்பான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)