Sunday, June 15, 2014

என்று வருவாயென...

http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481

காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!



நீண்டு கிடக்கும்

காலமெனும் பாதையில்

விழிகள் பதித்து –

முரண்டு பிடிக்கும்

புத்திக்குள் வித்தாக

உன்னை விதைத்து -

துவண்டு கிடக்கும்

மனக் குடிலின் வாயிலில்

மலர்கள் விரித்து –

வண்டு குடிக்கும்

மதுவாக உன்

அன்பை நினைத்து -



மண்ணூடே ஓடி

நீர் தேடும் வேர் போல -

மரம் தேடி ஓடி

கிளை சுற்றும் கொடி போல -

மடி தேடி ஓடும்

பாலுக் கழும் கன்றாக -

கடல் தேடி ஓடும்

காதல் மிகு நதியாக -

உனைத் தேடி நானும்என்

உயிர் களைத்துப் போன பின்னே…



இன்று,

என் மனக் கதவின்

ஒரு ஓரத்தில்…



காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481


11 comments:

  1. உங்கள் காத்திருப்பு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்! அழகான வார்த்தைகள்! :)

    ReplyDelete
  2. வணக்கம்

    அழகு தமிழில் ஆயிரம் கவிவடித்தாலும்
    காத்திருப்பிலும் ஒரு சுகம் இருக்கு...
    கவியை நான் இரசித்தேன்
    காத்திருங்கள் காத்திருங்கள்
    நல்லது நடக்கும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல வார்த்தை சொன்னதற்கு நன்றி, ரூபன் :)

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  4. அழகான கவிதை! உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடலாமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தானைத் தலைவி!

      புத்தகம் வெளியிடலாம்னு உங்களைப் போல சிலரும் சொல்லியிருக்காங்க. ஏனோ எனக்கு இன்னும் அந்த முனைப்பு வரலை. என்னோடதெல்லாம் யார் வாங்கிப் படிக்கப் போறாங்கன்னு ஒரு எண்ணமும் உண்டு... பார்க்கலாம்...:)

      Delete
  5. நல்ல கவிதை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அட! அப்படி சொல்லாதீங்க ! நிறைய பேரோட கவிதை நூல்களையெல்லாம் படிச்சுப்பார்த்தேன். அப்போ, இவங்கள்ளாமே புத்தகம் வெளியிடும் போது, நம்ம கவிநயா ஏன் வெளியிடக்கூடாதுன்னு தோணிச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, ச்சோ ச்வீட் :) நன்றி தானைத் தலைவி.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)