Monday, April 14, 2014

ஜயம் உண்டாகட்டும்!


அனைவருக்கும் புதிய, இனிய, தமிழ் 'ஜய' வருடவாழ்த்துகள்!

கிழக்கு வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!



சித்திரம் போலவே வண்ண வண்ணப் பூக்கள் 
   சிங்காரமாகவே பூத்திருக்க…

கத்தரி வெயிலுக்குக் கட்டியம் கூறியே 
   சித்திரை மாசம் வந்ததடி…

வானில் வலம் வந்த மேகக் கூட்டம் எல்லாம் 
   மாயாஜாலம் போலே மறைஞ்சதடி…

அமாவாசை இரவில் பௌர்ணமி நிலவாய் 
   வாழ்வில் ஒளி வீச வந்ததடி…



கிழக்கு வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!



வாசலிலே பல வண்ணக் கோலமிட்டு 
    விதவிதமாகவே அழகு செய்வோம்!

பலவிதச் சுவையுள்ள வாழ்க்கையைப் போலவே 
    அறுசுவை உணவுகள் செய்திடுவோம்!

வெற்றியை இலக்காய் கொண்டிடுவோம்! நாம் 
    முயற்சிப் படிகளைக் கட்டிடுவோம்!

வாழ்வில் யாவருமே வளர்ந்து இன்பம் பெற 
     இறைவன் அடிகளைப் பணிந்திடுவோம்!



கிழக்கு வெளுத்ததடி! சூரியன் முளைத்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!


--கவிநயா

11 comments:

  1. /யாவருமே வளர்ந்து இன்பம் பெற/ப் பிரார்த்திப்போம்!

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் “ஜய” புத்தாண்டு வாழ்த்துக்கள். வழக்கம் போலவே அருமையான பாடல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தானைத் தலைவி!

      Delete
  3. கிழக்கு வெளுத்ததடி! சூரியன் முளைத்ததடி!
    புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!

    புதுவாழ்வு மலர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. புது வருடத்தில் உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ரமேஷ்! மிக்க நன்றி.

      Delete
  4. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி!

      Delete
  5. கவிதை நன்று...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சே.குமார்!

      Delete
  6. மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)