Thursday, August 15, 2013

தாமரை மலர் மேலே...

அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!


சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடிப் பரவசமடைந்திருப்பதை நீங்களும் கேட்டு ஆனந்தியுங்கள்!


தாமரை மலர்மேலே தானொரு மலர்போலே
திகழ்ந்திடும் திருத்தேவியே!
மாதவன் மணி மார்பில் மங்கையுன் திருக்கோலம்
கொண்டதோர் எழிற்காட்சியே!

செல்வத்துக் கதிபதி நீயென்பார், எனக்கு
செல்வத்தைத் தாராயோ?
பக்தி செல்வத்தைத் தாராயோ?
அழகின் திருவுருவம் நீயென்பார், எனக்கு
அழகினைத் தாராயோ?
அழகு மனதினைத் தாராயோ?

வரலக்ஷ்மி தேவியே வரமருள் ராணியே
வந்தருள் திருத்தேவியே!
சிரமுன்றன் பதம்வைத்தேன் சிந்தையுள் உனைவைத்தேன்
திசையெங்கும் எழிற்காட்சியே!

தாமரைக் கரங்களில் தாமரைகள் தவழ…
பூவெழில் வதனத்தில் புன்னகையோ மலர…
கார்முகில் கருவிழிகள் கருணைமழை பொழிய…
கடைவிழிப் பார்வையிலே கர்மவினை கழிய!


--கவிநயா

6 comments:

  1. நீயொரு பொழுதிலும் நீங்காது மார்பிலே
    நித்தமும் திகழ் தேவியே!
    சேயொரு பிள்ளையைச் சேர்ப்பியோ வீட்டிலே
    சித்தமோ சொல் தேவியே?

    வரம்தரு மரத்தினை வலம்வந்து கேட்டிடில்
    வாழ்வுதான் வாழ வருமோ?
    கரம்தரு அன்னையே நீதரும் வாழ்வில்நான்
    வாழுவேன் வர லட்சுமியே!!

    ReplyDelete
    Replies
    1. //சேயொரு பிள்ளையைச் சேர்ப்பியோ வீட்டிலே
      சித்தமோ சொல் தேவியே?//

      சித்தமில்லைன்னு வேற சொல்வாளா என்ன? :) (அப்படின்னு நம்பிதான் நானும் போய் விழறேன்).

      வருகைக்கும், அழகான வரிகளுக்கும் நன்றி கண்ணா.

      Delete
  2. ஆனந்த பைரவியில் பாடிப் பரவசமடைந்திருப்பதை கேட்டு ஆனந்தித்தோம்..பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி அம்மா! மிக்க நன்றி.

      Delete
  3. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சே.குமார்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)