Monday, December 31, 2012

வருக, புத்தாண்டே!


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!




புத்தாண்டை வரவேற்போம்!
புதுவாழ்க்கை அமைத்திடுவோம்!
புத்துணர்வு பெற்றிடுவோம்!
புதுமைபல செய்திடுவோம்!

கவலைகளைக் கழற்றி வைப்போம்!
தன்னம்பிக்கை தக்க வைப்போம்!
முயற்சிகளை முடுக்கிடுவோம்!
அயர்ச்சிகளைத் தள்ளி வைப்போம்!

அன்பாலே கோவில் செய்வோம்!
அறிவொளியால் விளக்கிடுவோம்!
அவனியெல்லாம் ஒளியேற்றி
ஆனந்தமய மாக்கிடுவோம்!

இயற்கையைப் பேணிடுவோம்!
இச்சகத்தைப் போற்றிடுவோம்!
இறையவனின் தாள்பணிந்து
இன்பமுடன் வாழ்ந்திடுவோம்!


--கவிநயா

நன்றி: வல்லமை

10 comments:

  1. மிக அற்புதமான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி.தங்களுக்கு என் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி பார்வதி!

      Delete
  2. அருமையான வாழ்த்து! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  3. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிநயா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கைலாஷி!

      Delete
  4. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபி! :)

      Delete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கவிநயா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜீவி ஐயா!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)