Monday, December 24, 2012

தேவ மைந்தன் பிறந்த நாள்!




பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்.  அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் என்றால் எக்கச்சக்க கொண்டாட்டம். நவம்பர் இறுதியில் Thanksgiving (நன்றி நவிலல்) தினம் கொண்டாடி முடித்த கையோடு, கிறிஸ்துமஸுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விடுவார்கள். கிறிஸ்துமஸ் மரம் வைப்பதில் தொடங்கி, வீடு முழுக்க, வீட்டின் முன்புறம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து, ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிசுப் பொருள் வாங்கி, விதவிதமான உணவுப் பண்டங்கள் செய்து, இப்படியாக கிறிஸ்துமஸ் நவம்பரிலேயே களை கட்டத் தொடங்கி விடும்.

அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு டிசம்பர் என்றால் ஜாலிதான். நாள் தவறாமல் ஏதாவது தின்பண்டங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்! கேக் என்றும், சாக்லேட் என்றும், குக்கீ (கும்கி இல்லீங்கோ!) என்றும்…  (டிசம்பரில் சாப்பிட்டதை எல்லாம் ஜனவரி முதல் கரைக்க வேண்டும் என்பது வேறு விஷயம் :) டிசம்பர் இறுதியில் அலுவலகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட காலியாக இருக்கும்! என்னைப் போல சில பேர்தான் இருப்போம்!

கிறிஸ்துமஸ் சமயத்தில் எல்லோருமே ஒருவித மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும், இருப்பார்கள். பலருக்கும் பலவிதமான உதவிகள் செய்வது, முடிந்த வரை இன்முகமாக இருப்பது, அன்போடு அனைவரையும் நடத்துவது, இதெல்லாம் இயல்பாகவே நடக்கும். நற்குணங்கள் எல்லாம் இந்த சமயத்தில் உச்சத்தில் இருக்கும். இதுவே தினப்படி என்றால் எப்படி இருக்கும்!

நற்குணங்கள் அனைவரிடமும் நிறையட்டும். 
ஆனந்தம் எங்கும் நிலவட்டும். 
Christmas Spirit நிரந்தரமாகட்டும்!

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: http://zeospot.com/10-wonderful-christmas-outdoor-lights-decorations/nice-boston-home-outdoor-christmas-lights/

6 comments:

  1. நற்குணங்கள் எல்லாம் இந்த சமயத்தில் உச்சத்தில் இருக்கும். இதுவே தினப்படி என்றால் எப்படி இருக்கும்!//

    உலகமே இனிமையாக இருக்கும். அப்படிப் பட்ட உலகுக்குப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாம்மா. நன்றி :)

      Delete
  2. அருமையான பகிர்வு. ஆம், உங்கள் ஊரில் விடுமுறையும் சேர்ந்து கொண்டாட்டம் பலமாக இருக்கும்:)!

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி :)

      Delete
  3. நற்குணங்கள் அனைவரிடமும் நிறையட்டும்.
    ஆனந்தம் எங்கும் நிலவட்டும்.
    Christmas Spirit நிரந்தரமாகட்டும்

    இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)