Monday, November 26, 2012

பொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை



நீ ஏதும் பேச மறுத்தால்…
என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி
அதனை அடைகாத்து வைத்திருப்பேன்.
சிறிதளவும் அசையாமல்
தலை குனிந்து விழிப்புடனே காத்திருக்கும்
நட்சத்திரங்கள் நிறைந்த இரவைப் போல
மிகப் பொறுமையுடன் நானிருப்பேன்.
காலை நிச்சயம் மலரும்,
கவிந்திருக்கும் காரிருள் மறையும்,
வானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்
பொன்னருவியாகப் பொழியும்.
சிறகு முளைத்த உன்னுடைய சொற்கள்
என் குருவிக் கூடுகள் ஒவ்வொன்றிலிருந்தும்
இனிய கானங்களாய் ஒலிக்கும்,
என் காடுகளில் அடர்ந்த மரங்களுக்கிடையில்
உனது இன்னிசை புகுந்து,
வண்ணப் பூக்களாய்ப்
பூத்துச் சொரியும்.

--கவிநயா

Original in English by Rabindranath Tagore:
Patience
If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
I will keep still and wait like the night with starry vigil
and its head bent low with patience.
The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky.
Then thy words will take wing in songs from every one of my birds' nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.

படத்துக்கு நன்றி: http://www.idlehearts.com/patience-with-others-is-love/32454/
நன்றி: வல்லமை

3 comments:

  1. வரிகளில் நல்ல குணங்கள்...

    மொழிப்பெயர்ப்புக்கு நன்றி....

    ReplyDelete
  2. /காலை நிச்சயம் மலரும்,
    கவிந்திருக்கும் காரிருள் மறையும்,
    வானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்
    பொன்னருவியாகப் பொழியும்./

    சிறப்பான கவிதை. மிக அழகான மொழியாக்கம்.

    ReplyDelete
  3. தனபாலன், ராமலக்ஷ்மி, உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)