Saturday, November 17, 2012

துள்ளி வருகுது வேல்!


அனைவருக்கும் இனிய கந்த சஷ்டித் திருநாள் நல்வாழ்த்துகள்!




சுப்பு தாத்தாவும், மீனாட்சி பாட்டியும் துள்ளி வரும் கும்மி மெட்டில் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்!
 

துள்ளி வருகுது துள்ளி வருகுது வேல்வேல்!
அதைத் துதித்துப்பாடிக் கும்மியடிங்கடி வேல்வேல்!
                                                           
பச்சை மயில்மீதில் பாலகன் கைகளில் வேல்வேல்!
உங்கள் இச்சைகளை அவன் பாதத்தில் வைங்கடி வேல்வேல்!

புள்ளி மயில் மீதில் புங்கவன் கைகளில் வேல்வேல்!
அந்த வள்ளி முருகனை விட்டுப் பிரியாத வேல்வேல்!

சித்தம் நிறைந்திட்ட சக்தி அன்னை தந்த வேல்வேல்!
அந்தப் பித்தன்மகன் கையில் வித்தைகள் செய்திட்ட வேல்வேல்!
                                                           
பட்டுக் கரங்களில் பாந்தமாய் அமர்ந்த வேல்வேல்!
அந்தக் கெட்ட சூரன் தன்னைத் தொட்டுப் பிளந்திட்ட வேல்வேல்!
                                                           
சுற்றி வருகின்ற வினைகள் விரட்டும் வேல்வேல்!
தன்னைப் பற்றிக் கொள்ளுகின்ற பக்தரைக் காத்திடும் வேல்வேல்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: மாலைமலர்

4 comments:

  1. அருமை...

    இனிய கந்த சஷ்டித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முருகவேள் கை வேலின் அத்தனை பரிமாணங்களும் அற்புதம்!

    ReplyDelete
  3. அருமையான பாடல். தாளமிட்டு இனிமையாகப் பாடியிருக்கிறார்கள்:)!

    ReplyDelete
  4. தனபாலன், ஜீவி ஐயா, ராமலக்ஷ்மி, வாசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)