Sunday, September 2, 2012

பூஞ்சிரிப்பூ!




 
சின்னச் சின்ன ரோஜாப்பூ!
வண்ண வண்ண ரோஜாப்பூ!
முள்ளின் நடுவே இருந்தாலும்
மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூ!

கொடியில் பாரு முல்லைப்பூ!
கொத்துக் கொத்தாய் முல்லைப்பூ!
கொஞ்ச நேரம் இருந்தாலும்
கொஞ்சிச் சிரிக்கும் முல்லைப்பூ!

குண்டு குண்டு மல்லிப்பூ!
செண்டு போல மல்லிப்பூ!
மனங்கள் மகிழ மலர்ந்தேதான்
மணம் பரப்பும் மல்லிப்பூ!

குளத்தில் பாரு தாமரைப்பூ!
குனிந்து பாரு தாமரைப்பூ!
சேற்றின் நடுவே இருந்தாலும்
சிரித்து மகிழும் தாமரைப்பூ!

பூக்கள் போல நீ இரு!
பூஞ்சிரிப்பில் மலர்ந்திடு!
சங்கடங்கள் மறந்திடு!
சந்தோஷமே பரப்பிடு!


--கவிநயா

நன்றி: வல்லமை

6 comments:

  1. அழகான வரிகள்... மனம் சந்தோசப்படுகிறது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இக்கவிதை கூட எம்முள்
    மகிழ்வினைப் பரப்பிப்போகிறது
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. arumaiyaana pappa paattu.evvalavu alagaai ullathu!

    ReplyDelete
  4. கவிதை அருமை.

    வல்லமையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பூஞ்சிரிப்பினில் நாங்களும் மகிழ்ந்தோம். அழகிய வரிகள் கவிநயா!

    ReplyDelete
  6. வாசித்து ரசித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)