Sunday, July 8, 2012

கண்மணியே கண்ணுறங்கு!



சுப்பு தாத்தா ஒரு பழைய ஹிந்தி பாடல் மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் :) மிக்க நன்றி தாத்தா! 

சுப்பு தாத்தா, மீண்டும் கேதாரம் ராகத்திலும் பாடியிருக்கிறார். அவருக்கு ரொம்பப் பிடிச்சிட்டது போல :) எனக்கும் இந்த ராகத்தில் ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்களும் கேட்டுப் பாருங்க! மீண்டும் நன்றிகள் பல, தாத்தா!

என்னுலகே என்னுயிரே ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு ஆரிரரோ
பொன்னழகே பூவிழியே ஆரிரரோ
பூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ

உன் முகத்தைப் பார்த்திருப்பேன்
ஊனுறக்கம் மறந்திருப்பேன்
உலகாள வந்தவளே ஆரிரரோ
அந்த உமையவளே நீதானோ ஆரிரரோ

மூச்சு விடும் முழு நிலவே
முத்தமிடும் முத்தமிழே
முத்து முத்துப் புன்னகையில் ஆரிரரோ
மூவுலகும் மயங்கிடுமே ஆரிரரோ

சேர்த்து வைத்த தவமனைத்தும்
சேர்ந்து உன்னைத் தந்ததுவோ
சின்னஞ்சிறு மலரே நீ ஆரிரரோ
சித்திரம் போல் கண்ணுறங்கு ஆரிரரோ!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://organicfamilycircle.com/baby-cradles.html

14 comments:

  1. அழகான தாலாட்டு ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. அழகான தாலாட்டு. சொக்க வைக்கிறது, கவிநயா.

    ReplyDelete
  3. //உலகாள வந்தவளே ஆரிரரோ
    அந்த உமையவளே நீதானோ ஆரிரரோ //

    //மூச்சு விடும் முழு நிலவே
    முத்தமிடும் முத்தமிழே //

    //சேர்த்து வைத்த தவமனைத்தும்
    சேர்ந்து உன்னைத் தந்ததுவோ //

    -- கவிநயா முத்திரை பதித்திட்ட, எளிமையில் ஆற்றல் பொதிந்த வரிகள். நெஞ்சில் பதிந்து விட்ட வார்த்தைச் சரங்கள்.


    //பொன்னழகே பூவிழியே ஆரிரரோ
    பூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ.. //

    இந்த வரிகளை மட்டும்,

    பொன்னழகே பொக்கிஷமே ஆரிரரோ
    பூத்து வந்த பூவிழியே ஆரிரரோ..

    -- என்று பல தடவைகள் மாற்றி வாசிக்கத் தோன்றியது. ஏனென்று தெரியாத, மனதின் தன்வயப்பட்ட போக்கு.

    ReplyDelete
  4. "moochchuvidum muzhunilave"
    soooooppero soooopper!!!!

    ReplyDelete
  5. //அழகான தாலாட்டு ! வாழ்த்துக்கள் !//

    நன்றி தானைத் தலைவி!

    ReplyDelete
  6. //அழகான தாலாட்டு. சொக்க வைக்கிறது, கவிநயா.//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  7. //அட்டகாசம் ;))//

    நன்றி கோபி!

    ReplyDelete
  8. //எளிமையில் ஆற்றல் பொதிந்த வரிகள். நெஞ்சில் பதிந்து விட்ட வார்த்தைச் சரங்கள்.//

    மிக்க நன்றி ஜீவி ஐயா!

    //பொன்னழகே பொக்கிஷமே ஆரிரரோ
    பூத்து வந்த பூவிழியே ஆரிரரோ..

    -- என்று பல தடவைகள் மாற்றி வாசிக்கத் தோன்றியது. ஏனென்று தெரியாத, மனதின் தன்வயப்பட்ட போக்கு.//

    அப்படி வாசித்தாலும் அழகாக இருக்கிறது ஜீவி ஐயா! மோனை அழகால் உங்களுக்கு இயல்பாக அப்படித் தோன்றியது போலும் :)

    வருகைக்கும், வாசிப்பிற்கும் மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  9. //"moochchuvidum muzhunilave"
    soooooppero soooopper!!!!//

    நன்றி லலிதாம்மா!

    ReplyDelete
  10. சுப்பு தாத்தா பாடித் தந்ததை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்! அந்தக் கால ஹிந்திப் பாடல் ஒன்றின் மெட்டில் பாடியிருப்பதாகச் சொன்னார். உங்களுக்குக் கண்டு பிடிக்க முடிகிறதா? :)

    ReplyDelete
  11. அருமை. சுப்புத் தாத்தா பாடியது அப்படியே சொக்க வைக்கிறது. கண்ணை மூடிக் கொண்டுக் கேட்டால் தூக்கம் கண்களைத் தழுவுகிறது.
    மூச்சுவிடும் முத்தமிழே --- மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  12. மெட்டு கேட்டது தான் நினைவுக்கு வரவில்லை. கேட்டுச் சொல்லுங்கள்

    ReplyDelete
  13. வாங்க சிவகுமாரன். உங்களை இந்தப் பக்கம் பார்த்ததில் மகிழ்ச்சியும் நன்றியும் :) மூச்சு விடும் முழுநிலவே', ஆனா நீங்க சொன்னதும் அழகாகவே இருக்கு :) சுப்புத்தாத்தா பாடியதைக் கேட்டதற்கும் மிகவும் நன்றி. உங்க கேள்விக்கு அவர் அளித்த பதிலை எல்லோருக்காகவும் இங்கே இடறேன்...

    சுப்பு தாத்தா சொன்னது:
    //அறுபதில் வந்த அற்புத கவிதை அது. இந்த மெட்டு தான் என் மனதில் இருந்தது. ஆனால் அதுவே வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. முகேஷ் பாடுகிறார் ராஜ் கபூருக்காக. பர்வரிஷ் எனும் படத்தில் 1958 லே வந்த படம். ஒரு கிளாசிக் மார்வெல்.
    http://youtu.be/9UE-LcQ5NNg
    aansu bari hai mere jeevan ki rahein
    koyee unse kah de muje bool jaaye
    முதல் இருவரிகளை, சற்று மொழி பெயர்த்தல் இது போல் வரும்.

    கண்ணீரில் மிதக்குதே நான் கால் மிதிக்கும் இடம் எல்லாம் - என்னைக்
    கவர்ந்தளிடம் செய்தி சொல்லேன் - என்னைக்
    காணாது எங்கேனும் மறந்து போயேன். //

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)