Sunday, June 17, 2012

தேடிப் பாரு!



மழை மழை மழை மழை பாரு!
மேகத்துல போயி ஓட்டை போட்டதாரு?

சிலு சிலு சிலு சிலு காத்து பாரு!
காத்துக்குள்ள ஏசியை வெச்ச தாரு?

பள பள பள பள மின்னல் பாரு!
வானத்துல வெள்ளிக் கோடு போட்டதாரு?

டம டம டம டம இடி பாரு!
மேலே போயி பட்டாசு வெச்சதாரு?

பகலுக்கு சூரியனைத் தந்ததாரு?
இராத்திரிக்கும் கூட நிலா உண்டு பாரு!

காடெல்லாம் மரஞ்செடி நட்டதாரு?
கடலெல்லாம் உப்பக் கொட்டிப் போட்டதாரு?

பூவுக்குள்ள தேனை வெச்சுப் பாத்ததாரு?
பூமிக்குள்ள மூச்சுக் காத்த வெச்சதாரு?

சிப்பிக்குள்ளே முத்தக் கொண்டு சேத்ததாரு?
சிந்திச்சாக்க பதில் உண்டு தேடிப் பாரு!


--கவிநயா 

நன்றி: வல்லமை


6 comments:

  1. இங்க இருக்கிற வெயிலுக்கு ஏற்ற பாட்டு ;-)

    ReplyDelete
  2. ஆமால்ல? நன்றி கோபி! :)

    ReplyDelete
  3. இரசித்தேன்

    உங்கள் எழுத்து வல்லமைக்கு
    எப்பொழுதும் ஈடு இணையில்லை

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  4. வாங்க திகழ்! பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி :) உங்களை ரொம்ப நாளுக்குப் பிறகு பார்த்ததிலும்... :) நன்றி திகழ்.

    ReplyDelete
  5. திவாஜி! வாங்க வாங்க! மிகவும் நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)