Saturday, December 31, 2011

2012 - வாழ்த்துகள்!



புத்தம் புது வருஷமிங்கே பூத்துக் குலுங்குது;
சித்தமெல்லாம் அதில் நிறைந்து சிரித்து மகிழுது!
வித்தை போலவே உலகில் வளமும் கூடட்டும்;
சத்தியமே நமது வாழ்வில் சிந்து பாடட்டும்!

கத்தி போல மாந்தர் அறிவு கூர்மையாகட்டும்! – நல்ல
சக்தி கொண்ட மக்களோடு நாடு வளரட்டும்!
இச்சகத்தில் இந்தியாவைப் போல நாடுண்டோ! - என்று
மிச்சமுள்ள ஊருலகம் வாழ்த்து பாடட்டும்!

பிணக்குகளை மறந்து நாட்டின் ஒற்றுமை காப்போம்! - மன
ஊக்கத்துடன் நேர்மைமிகும் வாழ்வினை அமைப்போம்!
கலக் கங்கள் எதுவரினும் தளர்ந்திட மாட்டோம்! - நம்
இலக்கைமட்டும் நோக்கிவீறு நடையைப் போடுவோம்!

--கவிநயா

நன்றி: அதீதம்


11 comments:

  1. கவிக்கோ கவிநயா மற்றும் அவரது குடும்பத்தாருக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.:-)

    ReplyDelete
  2. புத்தாண்டு சிறப்புப் பதிவு அருமை
    வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிநயா.

    ReplyDelete
  4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;-)

    ReplyDelete
  5. அருமையான பாடல்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பிணக்குகளை மறந்து நாட்டின் ஒற்றுமை காப்போம் - மனச்
    சுணக்கமிலா நேர்மைமிகு வாழ்வுதனை அமைப்போம்!'

    -- கனவு மெய்ப்பட வேண்டும்.

    சீர்மிகு சிந்தனை சிறக்கப் புத்தாண்டை
    வரவேற்றிருக்கிறீர்கள். தங்களுக்கும் இனிய மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புத்தாண்டில் வந்து வாழ்த்திய மௌலி, ரமணி, கைலாஷி, கோபி, ராமலக்ஷ்மி, மற்றும் ஜீவி ஐயா, அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும்!

    ஜீவி ஐயா, உங்களுடைய 'மனச் சுணக்கமிலா' என்ற பிரயோகத்தையும் ரசித்தேன், நன்றி.

    ReplyDelete
  8. தாமதமே ஆனாலும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் கவிநயா! வாழ்வில் எல்லா வளமும் கிடைத்து சிறப்போடு வாழ வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. நல்ல கவிதை ! ஜனவரி முதல் தேதியிலேயே ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி வந்துடுதே! :))) தேச பக்தியை சொன்னேன். :))

    ReplyDelete
  10. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஷைலஜாக்கா!

    ReplyDelete
  11. வாங்க தானைத் தலைவி! தேச பக்தி எப்பவும் இருக்க வேண்டியதுதானே :) கவிதையை பொறுத்த வரை, 26-ம் தேதியும் இதையே வாசிச்சுக்கோங்க! Two in one :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)