Wednesday, October 5, 2011

கனக தாரை - 19, 20, 21


19.
தி(3)க்(3)க(3)ஸ்திபி(4): கனககும்ப(4) முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாலுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜக(3)தாம் ஜனனீமசே(H)ஷ
லோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்


பாரெல்லாம் ஓர்குடை யின்கீழ் பரிவுடன் காக்கும் தாயே
பாற்கடல் அமுதாய் வந்து பரமனை மணந்தாய் நீயே
எண்திசை யாவும் காத்து நிற்கின்ற இபங்கள் சேர்ந்து
தங்கக் குடங்கள் தளும்ப கங்கை நீர் முகர்ந்து வந்து
வைகறைப் பொழுதில் உன்னை மங்கள நீராட்டுங்காலை
சென்னியில் பாதம் சூடி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்!


20.
கமலே கமலாக்ஷ வல்லபே(4)த்வம்
கருணாபூர தரங்கி(3)தைர பாங்கை:
அவலோகய மாம் அகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:


செய்யக் கமலத்தின் மேலே சிரிக்கின்ற கமலம் உன்னை
கண்பார்த்த அரியும் கமலக் கண்ணனாய் ஆனான்போலும்
கடல்போலக் கருணைபொங்கும் உன்கரிய விழிகள் என்மேல்
பட வேண்டும் அம்மா சற்றே ஏழை நான் உய்வதற்கே
இரக் கின்ற பிள்ளைக்காக இரங்கிடுவாய் அம்மா நீயே
பரந்த உன்கருணைக் கென்னை பாத்திரமாய்ச் செய்வாய் தாயே!


21.
ஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபு(4)வனமாதரம் ரமாம்
கு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:
ப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:


ஆகம வேதப் பொருளின் அற்புத வடிவாம் தேவி
அன்னையாய் அன்புதந்து அகிலங்கள் காக்கும் ராணி
திருமகள் அவளைப் போற்றி தோத்திரம் இதனைப் பாட
கற்பனைக் கெட்டா செல்வமும், அற்புத ஞானக் கல்வியும்
கற்றவர் போற்றும் வாழ்வும், மற்றவர் போற்றும் குணமும்
மட்டிலா இன்பமும் பெற்று மகிழ்வுடன் வாழ்வார் உண்மை!


***சுபம்***


தோஹாவில் நம்ம தக்குடு அமர்க்களமா நவராத்திரி உற்சவம் நடத்திக்கிட்டிருக்கார். ஒன்பது நாள்ல பூர்த்தி பண்ற மாதிரி குங்குமலக்ஷார்சனை, தேவி மஹாத்மிய பாராயணம், ப்ரத்யக்ஷ நவகன்யா பூஜை, இப்படி எல்லா விதமான உபசாரங்களோட உற்சவம் நடந்துகிட்டிருக்கு. அதில் குங்கும லக்ஷார்ச்சனைக்கு அமைஞ்ச உம்மாச்சி யாருன்னு நினைக்கிறீங்க! இங்கே கனக தாரை பொழிஞ்சிக்கிட்டிருக்கிற சாக்ஷாத் நம்ம மஹாலக்ஷ்மி தாயாரேதான்! படத்தில் பாருங்க! கனக தாரைக்கு உதவினதோட இல்லாம, இப்போ வெகு பொருத்தமாக இந்தப் படத்தையும் அனுப்பித் தந்த தக்குடுவிற்கு நன்றி... நன்றி... நன்றி!!!


கனகதாராவின் மொழியாக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. வருகை தந்த அனைவருக்கும் அன்னையின் பேரருள் என்கிற மழை தாரை தாரையாகப் பொழிய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்!


--கவிநயா

10 comments:

 1. எண்திசை இபங்கள்! ம்ம்ம்! அருமை அக்கா!

  ஒவ்வொரு பாடலின் மொழிபெயர்ப்பும் மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது அக்கா! மொத்தமாக அனைத்துப் பாடல்களையும் எடுத்து அம்மன் பாட்டில் இடவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 2. மிக அருமையாக மொழியாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டுமாக!

  ReplyDelete
 3. என்னதான் ஒரு குழந்தை பாக்கர்த்துக்கு நன்னா லக்ஷணமா இருந்தாலும் பலபேரோட கை மாறி கடைசியா அதோட அம்மா கைக்கு போனதுக்கு அப்புறம் அதோட அழகே அழகு தான், அதே மாதிரி உங்களோட போஸ்ட்ல வந்ததுக்கு அப்புறம் நம்ப மஹாலக்ஷ்மி ரொம்ப 'பளிச்'னு இருக்காளோ?னு தோனர்து!! :))

  சத்காரியத்தை ஆரம்பிச்சு நல்லபடியா பூர்த்தி பண்ணியிருக்கேள் அக்கா!! எல்லாவிதமான ஐஸ்வர்யத்தையும் அவள் நமக்கு தரட்டும்!!!

  ReplyDelete
 4. Really great; I pray Goddess Lakshmi for her blessings to one and all.
  Natarajan.

  ReplyDelete
 5. //எண்திசை இபங்கள்! ம்ம்ம்! அருமை அக்கா!//

  சுவையான பண்டம் சாப்பிட்டுட்டு yum yum னு சொல்ற மாதிரி :) அவ்ளோ ரசிச்சதுக்கு நன்றி குமரா.

  //ஒவ்வொரு பாடலின் மொழிபெயர்ப்பும் மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது அக்கா! மொத்தமாக அனைத்துப் பாடல்களையும் எடுத்து அம்மன் பாட்டில் இடவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.//

  குமரனே சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. அம்மன் பாட்டில் கண்டிப்பா இடறேன். மீண்டும் நன்றி!

  ReplyDelete
 6. //மிக அருமையாக மொழியாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டுமாக!//

  தவறாது வருகை தந்த உங்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 7. //என்னதான் ஒரு குழந்தை பாக்கர்த்துக்கு நன்னா லக்ஷணமா இருந்தாலும் பலபேரோட கை மாறி கடைசியா அதோட அம்மா கைக்கு போனதுக்கு அப்புறம் அதோட அழகே அழகு தான், அதே மாதிரி உங்களோட போஸ்ட்ல வந்ததுக்கு அப்புறம் நம்ப மஹாலக்ஷ்மி ரொம்ப 'பளிச்'னு இருக்காளோ?னு தோனர்து!! :))//

  ஆஹா! தக்குடுவுக்கு மட்டும் எப்படி இப்படில்லாம் தோணறது! :) ச்சோ ச்வீட்.

  //சத்காரியத்தை ஆரம்பிச்சு நல்லபடியா பூர்த்தி பண்ணியிருக்கேள் அக்கா!!//

  அவள் அருளாலே அவள் தாள் வணங்கி... ரொம்ப நன்றி தக்குடு.

  //எல்லாவிதமான ஐஸ்வர்யத்தையும் அவள் நமக்கு தரட்டும்!!//

  ததாஸ்து!

  ReplyDelete
 8. //Really great; I pray Goddess Lakshmi for her blessings to one and all.//

  மிக்க நன்றி திரு.நடராஜன்!

  ReplyDelete
 9. ஒவ்வொரு பாடலின் மொழிபெயர்ப்பும் மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது அக்கா! மொத்தமாக அனைத்துப் பாடல்களையும் எடுத்து அம்மன் பாட்டில் இடவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  yes that is my request also

  ReplyDelete
 10. மிக்க நன்றி தி.ரா.ச. ஐயா. அப்படியே செய்யகிறேன்.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)