Tuesday, October 4, 2011

கனக தாரை - 17, 18


17.
யத் கடாக்ஷ ஸமுபாஸனாவிதி(4):
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத(3):
ஸந்தனோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே!


கற்பகத் தருவே உன்றன் கடைக்கண் பார்வை வேண்டி
விருப்புடன் ஓர்நொடி யேனும் கருத்துடன் தொழுது நின்றால்
அளவில்லா பொருளும் வளமும் இன்பமும் அவர்க்குத் தருவாய்
அகிலத்தைக் காக்கும் அரங்கன் இதயத்தை ஆளும் தேவி
மனதாலும் வாக்காலும் செய்கின்ற செயல்கள் அனைத்தாலும்
அடிபணிந்து வணங்கு கின்றோம் அற்புதமே போற்றி போற்றி!



18.
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
த(3)வளத(3)மாம்சு)(H)க க(3)ந்த(4)மால்ய சோ(H)பே(4)
ப(4)க(3)வதி ஹரிவல்லபே(4) மனோக்ஞே
த்ரிபு(4)வன பூ(4)திகரி ப்ரஸீத(3)மஹ்யம்


பங்கயத்தில் பாங்காய் அமர்ந்து பங்கயங்கள் கரத்தில் ஏந்தி
பால் வெள்ளைப் பட்டுடுத்தி பதுமம் போல் வீற்றிருப்பாய்
மார்பினில் மாலைகள் தாங்கி மணக்கின்ற சந்தனம் பூசி
மாலவன் மனையாள் அடியார் மனமெல்லாம் மணம்பரப் பிடுவாய்
முடிவில்லா செல்வம் தந்து மூவுலகும் காக்கும் தேவீ
என்மேலும் கருணை வைத்தால் என்றும்நான் மகிழ்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

2 comments:

  1. பஞ்சத்துல அடிபட்டவனோட கண்ணுல ஒரே சமயத்துல மூனு விதமான அபூர்வ பதார்த்தம் பட்டதுன்னா அவன் எப்பிடி அலைபாய்வானோ அதே மாதிரி உங்களோட மொழியாக்கம், மூலம்(ஸ்லோகம்) & மனசு நிறையும் அம்பாளோட படம் பார்த்து எதை விடர்துன்னு தெரியாம அலைபாயர்து மனசு!! :))

    ReplyDelete
  2. :) தக்குடுவுக்குதான் இதைப் போலல்லாம் சொல்ல வரும் :) தக்குடு மனசை அலைபாயறதில் எனக்கு பரம சந்தோஷம் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)