Monday, October 3, 2011

கனக தாரை - 15, 16


15.
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூ(4)த்யை பு(4)வனப்ரஸூத்யை
நமோஸ்து தே(3)வாதி(3)பி(4): அர்ச்சிதாயை
நமோஸ்து நந்தா(3)த்மஜ வல்லபா(4)யை


கதிரவனின் காதலியாம் கமலத்தில் வசிப்பவளே போற்றி
கமலத்தின் நடுவினிலே கதிரவன் போல் ஒளிர்பவளே போற்றி
புவி யாக்கும் அன்னையே பூ தேவியே போற்றி
புவி காக்கும் அன்னையே ஸ்ரீ தேவியே போற்றி
வான வரெல்லாம் வணங்கும் வசுந் தரியே போற்றி
நந்த கோபன் மருமகளே திருமகளே போற்றி போற்றி!



16.
ஸம்பத்கராணி ஸகலேந்த்(3)ரிய நந்த(3)னானி
ஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி
த்வத்(3)வந்த(3)னானி து(3)ரிதாஹரணோத்(3)யதானி
மாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே


அளவில்லாச் செல்வங்களைஅருள்கின்ற அன்னையே போற்றி
ஆண்டியையும் அரசனாக்கும் அற்புதத் தேவியே போற்றி
ஐம்புலனுக்கும் இன்பந் தரும் அஞ்சுக மொழியாளே போற்றி
பதுமங்களும் நாணும் எழில் பங்கய விழியாளே போற்றி
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் திருவே போற்றி
மாறாத அன்பைத் தந்தருளும் தாயே போற்றி போற்றி!


--கவிநயா

(தொடரும்)

4 comments:

  1. திருமகளைப் போற்றித் துதித்தோம். நன்றி.

    ReplyDelete
  2. தொடர்ந்த வருகைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  3. நானும் வணங்கிக்கறேன்.

    ReplyDelete
  4. நன்றி கீதாம்மா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)