Monday, September 26, 2011

கனக தாரை

ஓம் கம் கணபதயே நம:

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பற்றி அறியாத பக்தர்கள் மிகவும் குறைவு. அந்த ஸ்தோத்திரத்தையும், அதன் பொருளையும் வாசிக்க வாசிக்க, அதனைத் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 'பொன்மழை' என்ற பெயரில் ஏற்கனவே இதனை மொழியாக்கம் செய்திருப்பதும் பெரும்பாலானோர் அறிந்ததே. அதனாலேயே ஒரு தயக்கமும் இருந்தது. இருந்தாலும் ஆசை யாரை விட்டது? அம்மாவுக்கு ஒரு (கவியரசு)பிள்ளை பிரமாதமான பரிசு அளித்து விட்டதால், இன்னொரு குட்டிப் பிள்ளை ஏதும் செய்யக் கூடாதென்று இருக்கிறதா என்ன? அதைப் போலத்தான் இந்தச் சிறியவள் தன்னால் இயன்ற அளவில் அம்மாவுக்காக நவராத்திரிக்கெனச் செய்த அன்புக் காணிக்கை, இது.

கிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் தந்தாலும், உடனடியாக பொருளை சரி பார்த்து, சரியான நேரத்தில் பேருதவி செய்த என் அன்புக்குரிய தம்பி தக்குடுவிற்கு, என் மனமார்ந்த நன்றிகள். தக்குடுவிற்கும், மற்றும் இதனை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்னை எல்லா நலன்களும் அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.


"வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் 
நின் திருநாமங்கள் தோத்திரமே"




கனகதாரா ஸ்தோத்திரம், தமிழில்...

1.
அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:


ஆனந்தத் தேவி நீயே அணியாக மார்பில் மின்ன
அதனாலே அங்கம் எல்லாம் இன்பத்தில் பொங்கித் ததும்பும்
தமால மலரை யொத்த மாலவன் மேனி தன்னை
மையலால் மகிழ்ந்து நோக்கும் பொன்வண்டை யொத்த விழிகள்
சற்றே திசைமாறி என்மேல் தொட்டுச்சென் றாலும்கூட
செல்வங்கள் யாவும் பெற்று சகத்திலே உய்வேன் தாயே!

2.
முக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி க(3)தாக(3)தானி
மாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய


நீலத்தா மரையின் மேலே பாகொக்கும் தேனைப் பருக
தரிகெட்டு அலைந்து திரியும் தேனீக்கள் போலே தாமும்
நாணத்தால் தயங்கிப் பின்னர் நெஞ்சத்தின் காதல் மீற
முராரி முகத்தின் எழிலைப் பருகும்உன் விழியிரண்டும்
நேயத்தால் சற்றே என்மேல் நிலைத்திடு மாயின் நானும்
பாக்கியம் செய்தே னாவேன் பாற்கடல் பிறந்த தாயே!


--கவிநயா

(தொடரும்)

16 comments:

  1. மிக அழகாக மொழி மாற்றம் செய்து
    பதிவிட்டிருக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்(தக்குடுக்கும்)
    த.ம 1 (தறி )

    ReplyDelete
  2. நல்ல ஆரம்பம்...நவராத்ரி வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  3. ஆஹா அற்புதம் ! படித்து சிலிர்த்து போனேன்.தொடருங்கள்,நான் நவராத்திரி முடிந்து வந்து படிக்கிறேன்.கொஞ்சம் பிஸிப்பா, தப்பா நினைச்சுகாதீங்க!

    ReplyDelete
  4. அழகான மொழியாக்கம். சிறப்பான பதிவு.

    ReplyDelete
  5. கரும்பு சாப்பிட கூலியா?? இந்த சத்காரியத்துல கலந்துண்டதுக்கு அடியேன் தான் நன்றி சொல்லனும். உங்களோட அன்பான பிரார்த்தனைகளுக்கும் ஒரு நன்றி! ஒவ்வொரு சுலோகத்தோட தமிழாக்கமும் மெய்மறக்க வச்சது! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு!
    சுலபமா ட்ரான்ஸ்லிடரெட் பண்ண :
    http://www.virtualvinodh.com/aksharamukha

    ReplyDelete
  7. மிக அருமை கவிநயா. தொடரக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  8. //மிக அழகாக மொழி மாற்றம் செய்து
    பதிவிட்டிருக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்(தக்குடுக்கும்)//

    மிக்க நன்றி ரமணி. தக்குடு சார்பிலும் :)

    ReplyDelete
  9. //நல்ல ஆரம்பம்...நவராத்ரி வாழ்த்துக்கள். :)//

    வருகைக்கு மிக்க நன்றி மௌலி! உங்களுக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. //ஆஹா அற்புதம் ! படித்து சிலிர்த்து போனேன்.தொடருங்கள்,நான் நவராத்திரி முடிந்து வந்து படிக்கிறேன்.கொஞ்சம் பிஸிப்பா, தப்பா நினைச்சுகாதீங்க!//

    மெதுவா வாங்க, பரவாயில்லை. முதலில் அவளை கவனிப்பதுதானே முக்கியம் :) முதல் பதிவிற்கு வந்ததே மகிழ்ச்சி தருகிறது. நன்றி தானைத் தலைவி.

    ReplyDelete
  11. //அழகான மொழியாக்கம். சிறப்பான பதிவு.//

    வருகைக்கு மிக்க நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  12. //கரும்பு சாப்பிட கூலியா?? இந்த சத்காரியத்துல கலந்துண்டதுக்கு அடியேன் தான் நன்றி சொல்லனும். உங்களோட அன்பான பிரார்த்தனைகளுக்கும் ஒரு நன்றி! ஒவ்வொரு சுலோகத்தோட தமிழாக்கமும் மெய்மறக்க வச்சது! வாழ்த்துக்கள்!!!//

    ஏற்கனவே வாசிச்சிருந்தாலும், மறுபடியும் நீங்க இங்கே வந்ததுல ரொம்ப சந்தோஷம் தக்குடு :) மிக்க நன்றி.

    ReplyDelete
  13. //நல்லாயிருக்கு!
    சுலபமா ட்ரான்ஸ்லிடரெட் பண்ண :
    http://www.virtualvinodh.com/aksharamukha//

    வாங்க திவாஜி. ஏற்கனவே காப்பி பண்ணி வெச்சிருக்கதைத்தான் போடறேன். சுட்டிக்கு நன்றி; இனிமேதான் எப்படி பயன்படுத்தறதுன்னு பார்க்கணும். வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. //மிக அருமை கவிநயா. தொடரக் காத்திருக்கிறோம்.//

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  15. Miga kashtamaana velai.Annai arulinaal yhan ithellaam nadakkirathu!
    Natarajan.

    ReplyDelete
  16. //Annai arulinaal yhan ithellaam nadakkirathu!//

    உண்மையே.
    நன்றி திரு. நடராஜன்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)