Friday, September 30, 2011

கனக தாரை - 9, 10

Vishnu- Lakshmi - Garuda

9.
த(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்
அஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே
து(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்
நாராயணப்ரணயினீ நயனாம்பு(3)வாஹ:


அலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல
பாலையாய் வறண்ட பூமி பசுமையாய் ஆக மழையாய்
சாதகப் பறவை தன்னின் தாகத்தைத் தீர்க்கும் பொழிவாய்
அன்னை நின் கருணை என்னும் காற்றினை வீசச் செய்வாய்
நாரணன் நங்கை உன்றன் கார்மேக விழிகள் பட்டால்
வினையெல்லாம் நிமிடம் கூட நிற்காமல் ஓடும் தாயே!


10.
கீ(3)ர்தே(3)வதீதி க(3)ருட(3)த்(4)வஜ ஸுந்த(3)ரீதி
சா(H)கம்ப(4)ரீதி ச(H)சி(H)சே(H)கர வல்லபே(4)தி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரிபு(4)வனைக கு(3)ரோஸ்தருண்யை


கருடனைக் கொடியில் கொண்ட குமுதனின் காதல் தேவீ
நீயேதான் ஞானம் கல்வி அனைத்தையும் ஆளும் ராணி
பிறைதனை முடியில் கொண்ட பித்தனின் மனையும் ஆவாய்
யுகமது முடியும் போது அழிக்கின்ற சக்தியும் ஆவாய்
ஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்
உலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே!

--கவிநயா

8 comments:

 1. ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயி

  ஆக்கல் அழித்தல் காத்தல் போன்ற தொழில்களை விளையாட்டாக செய்கிறாய் அம்மா.இத்தனையையும் நீஅதில் இருந்துகொண்டே செய்வதுதான் ஆச்சர்யம்.மற்ற விளையாட்டுகளுக்கு அலகு அல்லது அளவுகோல் உண்டு ஆனால் உனக்கு அது கிடையாது
  உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெருத்தலும் நீக்கலும் நீங்கிலா அலகிலா விளையாட்டுடயாய்

  ReplyDelete
 2. இன்றுதான் கனக தாரையின் அனைத்து பதிவுகளையும் படிக்கும் வாய்ப்புக்கிட்டியது. கண்ணதாசனுக்கு ஒன்றும் சளைத்தவர் இல்லை தாங்கள். மொழிபெயர்ப்பும் அருமை. படங்களும் அருமை. பன்னக சனயனுக்கு பாற்கடல் படமும், கருடக்கொடிக்கு கருடன் மேல் தாயார் பெருமாள் படமும் அருமை. இந்த படத்தை அடியேனும் சிறிது பயன்படுத்திக்கொள்கின்றேன்.

  ReplyDelete
 3. //அலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல//

  ஆரம்பமே அழகு.

  //ஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்உலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே!//

  வணங்கி வாழ்த்த எங்களையும் உடன் அழைத்துச் செல்லும் உங்களுக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 4. அலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல
  பாலையாய் வறண்ட பூமி பசுமையாய் ஆக மழையாய்
  சாதகப் பறவை தன்னின் தாகத்தைத் தீர்க்கும் பொழிவாய்
  அன்னை நின் கருணை என்னும் காற்றினை வீசச் செய்வாய்//

  அன்னைதான் தன் இனிமையான கருணைக்காற்றை வீச வேண்டும்; படம் வெகு அழகு. எங்கே இருந்து எடுக்கிறீர்களோ தெரியவில்லை; சம்ஸ்கிருத அறிவும் அபாரமாய் இருக்கு; தமிழைப் போலவே அதிலும் சரளமாகப் பேசி எழுதுவீர்கள் போல!

  ReplyDelete
 5. பின்னூட்டங்களுக்கு இனிமேதான் பதில் எழுதணும்... ஆனா கீதாம்மாவுடைய பின்னூட்டுக்கு பதில் சொல்லிடறது அவசியம்னு தோணுச்சு :)

  எனக்கு சமஸ்கிருத அறிவு பூஜ்யம், அம்மா. பி.ஆர்.ராமசந்தர் என்பவர் நிறைய சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு ஆங்கிலத்தில் பொருள் எழுதியிருக்கார். ஆன்லைனில் கிடைக்குது.

  http://www.celextel.org/adisankara/kanakadharastotra.html

  அதை வெச்சுதான் எழுதினேன். பிறகு தக்குடுவுக்கு அனுப்பி, சரி பார்த்துக்கிட்டேன்.

  படங்களெல்லாம் கூகுளாண்டவர்தான் தரார். நிறைய படங்கள் flickr-லிருந்து... படத்தைக் க்ளிக்கி பார்க்கலாம்.

  தொடர்ந்து வாசித்து ஆசிகள் அளிப்பதற்கு மிக்க நன்றிகள், கீதாம்மா.

  ReplyDelete
 6. //ஆக்கல் அழித்தல் காத்தல் போன்ற தொழில்களை விளையாட்டாக செய்கிறாய் அம்மா.இத்தனையையும் நீஅதில் இருந்துகொண்டே செய்வதுதான் ஆச்சர்யம்.மற்ற விளையாட்டுகளுக்கு அலகு அல்லது அளவுகோல் உண்டு ஆனால் உனக்கு அது கிடையாது//

  இன்னும் எல்லா வரிகளுக்கும் எழுதுங்கள் தி.ரா.ச ஐயா. அருமையாக இருக்கிறது.

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. //இன்றுதான் கனக தாரையின் அனைத்து பதிவுகளையும் படிக்கும் வாய்ப்புக்கிட்டியது. கண்ணதாசனுக்கு ஒன்றும் சளைத்தவர் இல்லை தாங்கள்.//

  ஆத்தாடி, போட்டீங்களே ஒரு போடு :) இதை உங்களுடைய அன்பான ஆசிகளாக எடுத்துக்கறேன். மிக்க நன்றி.

  //மொழிபெயர்ப்பும் அருமை. படங்களும் அருமை. பன்னக சனயனுக்கு பாற்கடல் படமும், கருடக்கொடிக்கு கருடன் மேல் தாயார் பெருமாள் படமும் அருமை.//

  ரசித்து வாசிப்பதற்கு மிக்க நன்றி. அவள் தந்ததுதான்.

  //இந்த படத்தை அடியேனும் சிறிது பயன்படுத்திக்கொள்கின்றேன்.//

  கூகுளார், flickr, இவங்கள்லாம் தான் தந்ததுதான். பயன்படுத்திக்கோங்க :)

  ReplyDelete
 8. //ஆரம்பமே அழகு.//

  நன்றி ராமலக்ஷ்மி. எனக்குமே பிடித்த பாடல் இது :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)