Thursday, September 29, 2011

கனக தாரை - 7, 8

Lord Vishnu and Goddess Laxmi

7.
விச்(H)வாமரேந்த்(3)ர பத(3)விப்(4)ரமதா(3)த(3)க்ஷ-
மானந்த(3) ஹேதுரதி(4)கம் மது(4_வித்(3)விஷோ(அ)பி
ஈஷன்னிஷீத(3)து மய க்ஷணமீக்ஷணார்த(4)-
மிந்தீவரோத(3)ர ஸஹோத(3)ர மிந்தி(3)ராயா:


நீலத்தா மரைகள் அனைய நிகிலத்தைக் காக்கும் விழிகள்
நிமிடத்தைக் கோர்க்கும் சின்ன நொடியேனும் மேலே பட்டால்
சுவர்க்கத்தை ஆளும் வாழ்வும் சுலபத்தில் வந்தே சேரும்
மதுவென்னும் அசுரனை வென்ற மாதவனை மகிழச் செய்யும்
சுரபதியைக் காத்த விழிகள் சற்றேனும் என்னைப் பார்த்தால்
எண்ணில்லாச் செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்வேன் தாயே!


8.
இஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்
த்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே
த்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


பக்தர்கள் போற்றிப் பணியும் பெருநிதி ஆன தேவீ
பரிவோடு கனிவும் மிகுந்து பொங்கிடும் பார்வை யாலே
எத்தனை தவம் செய்தாலும் எளிதினில் கிட்டா சுவர்க்கம்
இகபர சுகம் எல்லாமே அடியார்க்கு அருள்வாய் நீயே
மலர்ந்திட்ட பதுமம் ஒத்த மங்கையுன் விழிகள் பட்டால்
உலகத்தில் யாவும் பெற்று உவப்பேன்நான் கமலத்தாயே!


--கவிநயா

(தொடரும்)

10 comments:

  1. கவிநயா அழகான பதிவு நான் கூட எழுதவேண்டும் என் நினத்து ஆரம்பித்தேன்.கம்பரது ராமயணத்தைப் பார்த்த ஒட்டகூத்தர் தான் எழுதிய ராமாயணத்தை கிழித்துபோட்டகதைதான் என்னுடையதும்
    அருமையாண மொழிபெயர்ப்பு கவிங்கர்களின் மின்னால் கற்றவர்களும் ஒரு மாத்து கம்மிதான்
    அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

    ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்

    அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா

    மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா


    மலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வண்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.

    ReplyDelete
  2. தி ரா ச சங்கரரைப்பற்றி கூறியிருப்பது போலவே இன்னும் பல மகான்கள் தமக்காக வேண்டாமல் மற்றவர்களுக்காக திருமகளை பொருள் யாசித்த கதைகள் நானும் படித்திருக்கிறேன் இப்போ உடனடியா நினைவுக்கு வருவது வேதாந்த தேசிகர் ஸ்ரீ ஸ்துதி பாடியதன் பின்னணிக்கதையும்,வேதாரண்யர்

    அரிஹரன்,புக்கர் என்ற ஏழைச்சிறுவரைக்கொண்டு விஜயநகர சாம்ராஜ்யம்

    ஸ்தாபித்த கதையும் !

    உன் தமிழாக்கம் மிகவும் அருமை!இப்பத்தான் எனக்கு இன்டர்நெட் கிடைத்தது!

    அதனால் இவ்வளவு லேட்டாக பின்னூட்டம்

    ReplyDelete
  3. அருமையான மொழியாக்கம்.

    ReplyDelete
  4. மற்றவர்கள் பாராட்டியதை விடவும் நான் எதுவும் சொல்வதற்கில்லை; புலியைப் பார்த்துப்பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக நானெல்லாம் ஏதோ எழுதுகிறேன். அருமையான மொழியாக்கம், சரளமான நடை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. தி ரா சா சார் சொன்ன மாதிரி மத்தது எல்லாமே வெறும் மொழியாக்கம் தான்.மேதாவிலாசத்தை பிரகடனம் பண்ணிக்க மொழியாக்கம் பண்ணலாம். ஆனால் ஆத்மவிலாசத்தோட அந்த எழுத்து அமையனும்னா அதுக்கு அவளோட காலை 'சிக்'கென பிடிச்சா தான் வரும்! வெறும் வார்த்தை விளையாட்டா இல்லாமல் ஆழ்மனதில் எழுந்த ரசிப்பின் கோர்வையா வந்துண்டு இருக்கு!! செளக்கியமா இருக்கனும்!!

    ReplyDelete
  6. //நான் கூட எழுதவேண்டும் என் நினத்து ஆரம்பித்தேன்.கம்பரது ராமயணத்தைப் பார்த்த ஒட்டகூத்தர் தான் எழுதிய ராமாயணத்தை கிழித்துபோட்டகதைதான் என்னுடையதும்//

    நீங்க உரைநடையில் ரொம்ப அழகாக எழுதறீங்களே...

    //மலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வண்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.//

    மிக அழகு. இதைப் போல சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு பொருள் சொன்னால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி, தி.ரா.ச ஐயா.

    ReplyDelete
  7. வாங்க லலிதாம்மா. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி :) மிக்க நன்றி.

    ReplyDelete
  8. //அருமையான மொழியாக்கம்.//

    நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  9. //மற்றவர்கள் பாராட்டியதை விடவும் நான் எதுவும் சொல்வதற்கில்லை; புலியைப் பார்த்துப்பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக நானெல்லாம் ஏதோ எழுதுகிறேன்.//

    அடடா, கீதாம்மா, நீங்களே இப்படில்லாம் சொன்னா என்ன ஆகறது? உங்க range-ஏ வேற. உங்க பொறுமையும் சிரத்தையும் எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. உங்களைப் போல பலதையும் படிச்சு விஷயங்களை கிரகிச்சு எழுதறது எனக்கு நினைச்சே பார்க்க முடியாத அசாத்தியமான விஷயம். அவள் அருளால் ஏதோ கொஞ்சம் கவிதை மட்டும் ஒட்டிக்கிட்டிருக்கு, அவ்வளவே.

    //அருமையான மொழியாக்கம், சரளமான நடை. வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  10. //தி ரா சா சார் சொன்ன மாதிரி மத்தது எல்லாமே வெறும் மொழியாக்கம் தான்.மேதாவிலாசத்தை பிரகடனம் பண்ணிக்க மொழியாக்கம் பண்ணலாம். ஆனால் ஆத்மவிலாசத்தோட அந்த எழுத்து அமையனும்னா அதுக்கு அவளோட காலை 'சிக்'கென பிடிச்சா தான் வரும்! வெறும் வார்த்தை விளையாட்டா இல்லாமல் ஆழ்மனதில் எழுந்த ரசிப்பின் கோர்வையா வந்துண்டு இருக்கு!! செளக்கியமா இருக்கனும்!!//

    கொஞ்சம் கூட தளராமல் அவள் காலைப் பிடிச்சிக்கணும் என்பதே என்னுடைய வேண்டுதலும். மனம் நெகிழ வெச்ச பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தக்குடு.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)