Tuesday, September 27, 2011

கனக தாரை - 3, 4


3.
ஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்
ஆனந்த(3)கந்த(3) மனிமேஷ-மனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்
பூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:


பாதியாய் மூடித் திறந்த விழிகளால் தலைவன் தன்னை
பார்த்தும்பா ராதது போலே பார்க்கின்ற பத்தினிப் பெண்போல்
பிரியமும் ஆசையும் கூட நாணமும் அதனுடன் சேர
பாம்பணை மீதில் துயிலும் முகுந்தனை நோக்கும் விழியை
சாடையாய் என்றன் மேலே சற்றேவைத் தாலும்கூட
பொழிகின்ற செல்வத்தாலே பொலிவுற்று வாழ்வேன் தாயே!


4.
பா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா(4)தி
காமப்ரதா(3) ப(4)க(3)வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா


கௌஸ்துபம் என்னும் மணியை மார்பினில் அணிந்த மாயன்
மதுவென்னும் அரக்கன் தன்னை வதைத்தவன் மகிழும் வண்ணம்
மரகத மேனியின் மேலே மற்றொரு மாலை போலே
இந்திர நீல ஜாலம் காட்டிடும் உன்றன் பார்வை
கொஞ்சமே கொஞ்சம் என்மேல் கனிவுடன் பட்டால் கூட
கற்பனைக் கெட்டா பேறால் களிப்பேன்நான் கமலத் தாயே!


--கவிநயா

(தொடரும்)

8 comments:

  1. அழகுத் தமிழில் மொழியாக்கம் அருமை கவிநயா. நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  2. உள்ளேனம்மா! (மஹா லக்ஷ்மிக்கு மட்டுமல்ல, கவிக்காவுக்கும் சேர்த்தே தான் இந்த உள்ளேனம்மா ).

    ReplyDelete
  3. நல்லா இருக்கு அக்கா.

    ReplyDelete
  4. கொஞ்சமானும் அவள் பார்வை மேலே படட்டும்.

    ReplyDelete
  5. //அழகுத் தமிழில் மொழியாக்கம் அருமை கவிநயா. நன்றி. தொடருங்கள்.//

    நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  6. //உள்ளேனம்மா! (மஹா லக்ஷ்மிக்கு மட்டுமல்ல, கவிக்காவுக்கும் சேர்த்தே தான் இந்த உள்ளேனம்மா ).//

    நல்லது மௌலி :) நன்றி.

    ReplyDelete
  7. //நல்லா இருக்கு அக்கா.//

    நன்றி குமரா!

    ReplyDelete
  8. //கொஞ்சமானும் அவள் பார்வை மேலே படட்டும்.//

    ஆமாம் :) ஆசிகளுக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)