Thursday, August 11, 2011

வரலக்ஷ்மி தேவி!

வரலக்ஷ்மி விரத சிறப்புப் பதிவு.



லலிதாம்மா மூலமாக அறிமுகமான கலா அவர்கள் இந்தப் பாடலை தன் மிக இனிமையான குரலில் பாடித் தந்திருக்காங்க. கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி கலா, மற்றும் லலிதாம்மா!

வரலக்ஷ்மி தேவி வரவேண்டும் அம்மா!
வேண்டும் வரம் அத்தனையும் தர வேண்டும் அம்மா
(வரலக்ஷ்மி தேவி)

மறைக ளெல்லாம் போற்ற அலைகடலில் உதித்தாய்
மரகத வண்ணனை மன்னவனாய் வரித்தாய்!
(வரலக்ஷ்மி தேவி)

மாலவன் மார்பினிலே மணியெனவே ஒளிர்வாய்
தாளிணைகள் பணிகின்றோம் தயக்கமின்றி அருள்வாய்
கோல எழில் தாமரையில் கொஞ்சும் வடிவுடனே
கோலம் கொண்ட திருமகளே தஞ்சம், அருள் தருவாய்!
(வரலக்ஷ்மி தேவி)

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/search/label/Goddess%20Lakshmi%20Images

17 comments:

  1. பண்டிகை கொண்டாட தோழி வீட்டுக்கு இதோ போய்க்கிட்டு இருக்கேன்.

    வரலக்ஷ்மி வருவாயம்மா........

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  2. வரலட்சுமியை வரவழைதுவிட்டாய்;நீயே பாடி இணைத்துவிடு;காதாலும் கேட்டு ரசிக்கனும்போல் ஆசை!

    ReplyDelete
  3. வீட்டில் பூஜை நடந்துகொண்டிருக்க
    உங்கள் பதிவைத் திறந்தேன்
    பதிவில் அழகான வரலெட்சுமி தரிசனம்
    திரு உருவப் படமும்
    பதிவும் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வரலக்ஷ்மி எல்லார் வீட்டிலும் வந்து எல்லா நலன்களும் வளங்களும் வழங்கிட வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  5. வரலக்ஷ்மியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். படமும் வரிகளும் அருமை. நன்றி.

    ReplyDelete
  6. "செந்தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம், அம்மா பாட வந்தோம்" னு ஒரு பாட்டு வரும்... ஸ்கூல் நாட்களில் அதிகம் கேட்டது... அது போல இந்த பாடலும் அழகா இருக்குங்க...

    ReplyDelete
  7. உங்களுக்கும், இங்கு வந்த, வர இருக்கும் நண்பர்களுக்கும் வர லக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. romba nallaairukkuaval atul ellorukkum kidaikkattum.
    natarajan

    ReplyDelete
  9. //பண்டிகை கொண்டாட தோழி வீட்டுக்கு இதோ போய்க்கிட்டு இருக்கேன்.

    வரலக்ஷ்மி வருவாயம்மா........

    இனிய வாழ்த்து(க்)கள்.//

    நன்றி துளசி அம்மா. பண்டிகைக் கொண்டாட்டம் நல்லபடி முடிஞ்சதா?

    ReplyDelete
  10. //வரலட்சுமியை வரவழைதுவிட்டாய்;நீயே பாடி இணைத்துவிடு;காதாலும் கேட்டு ரசிக்கனும்போல் ஆசை!//

    கலா அழகா பாடித் தந்ததை இடுகையில் சேர்த்துட்டேன் அம்மா. கேட்டு ரசிங்க :) கலாவிடம் என் வேண்டுகோளை அனுப்பித் தந்தமைக்கு மிக்க நன்றி உங்களுக்கு!

    ReplyDelete
  11. //வீட்டில் பூஜை நடந்துகொண்டிருக்க
    உங்கள் பதிவைத் திறந்தேன்
    பதிவில் அழகான வரலெட்சுமி தரிசனம்
    திரு உருவப் படமும்
    பதிவும் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்//

    மிக்க மகிழ்ச்சி, ரமணி. நன்றி.

    ReplyDelete
  12. //வரலக்ஷ்மி எல்லார் வீட்டிலும் வந்து எல்லா நலன்களும் வளங்களும் வழங்கிட வேண்டுகின்றேன்.//

    மிக்க நன்றி கைலாஷி.

    ReplyDelete
  13. //வரலக்ஷ்மியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். படமும் வரிகளும் அருமை. நன்றி.//

    மிக்க நன்றி, ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  14. //"செந்தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம், அம்மா பாட வந்தோம்" னு ஒரு பாட்டு வரும்... ஸ்கூல் நாட்களில் அதிகம் கேட்டது... அது போல இந்த பாடலும் அழகா இருக்குங்க...//

    வாங்க புவனா. நீங்க குறிப்பிட்டது
    மாணிக்க வீணையேந்தும் அப்படின்னு தொடங்கற பாடல்... இந்தப் பாடலையும் ரசிச்சதுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  15. //உங்களுக்கும், இங்கு வந்த, வர இருக்கும் நண்பர்களுக்கும் வர லக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்//

    நன்றி மௌலி.

    ReplyDelete
  16. //romba nallaairukkuaval atul ellorukkum kidaikkattum.//

    மிக்க நன்றி திரு.நடராஜன்.

    ReplyDelete
  17. வருகை தந்த அனைவரும் மீண்டும் ஒரு முறை வந்து, கலா அவர்கள் பாடித் தந்ததை கேட்டு ரசிக்க வேண்டுமென கேட்டுக்கறேன்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)