Sunday, July 24, 2011

பருவத்தால் அன்றிப் பழா!


ஸ்ரீ ஞானானந்த சுவாமிகளை தரிசிக்க இரு அயல் நாட்டுப் பெண்மணிகள் வந்திருந்தனர். சுவாமிகளின் அருகில் அமர்ந்து அவரை நன்கு தரிசனம் செய்தனர். அவர்களில் ஒரு பெண்மணி, “சுவாமி, நடமாடும் தெய்வமாய் தங்களை நேரில் தரிசித்து, தங்களது திவ்ய கமலங்களில் சிரம் தாழ்த்தி வணங்கி, தங்கள் அமுத மொழிகளைக் கேட்டு அதில் திளைத்திருக்கும் எங்களுக்கு, தங்களது தரிசனப் ப்ராப்தியினாலேயே ஏன் இன்னும் ஆத்ம ஞானம் சித்திக்கவில்லை?” என்று மிக வருத்தத்துடன் வினவினார்.

குருநாதர், தம் அருகில் இருந்த வாழைப்பழச் சீப்பிலிருந்து இரு வாழைப்பழங்களை எடுத்து, தம் கையில் ஏந்தியவாறு கூறினார்: “இந்தப் பழம் ஒரு காலத்தில் பச்சையாகவும், துவர்ப்பாகவும், கடினமாகவும் இருந்தது. காலக் கிரமத்தில், பச்சை மஞ்சளாகவும், கடினம் மென்மையாகவும், துவர்ப்பு இனிமையாகவும் மாறி நிற்கின்றது. இந்தப் பச்சையில் மஞ்சளைப் பூசியவர் யார்? இந்த காடின்யத்தில் மென்மையைப் புகுத்தியவர் யார்? இந்த துவர்ப்பில் இனிமையைப் புகுத்தியது யார்? ‘பருவத்தாலன்றி பழா’ என்பதே போல் அப்பெண்மணி கேட்டதெல்லாம் தக்க காலத்தில் இனிது நிறைவேறும். இது குறித்துக் கவலைப்பட வேண்டாம்”.

பி.கு.: ஸ்ரீ ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் வெளியிடும் ‘ஞான ஒளி’ என்ற ஆன்மீக மாத இதழிலிருந்து…


அன்புடன்
கவிநயா

16 comments:

  1. பருவத்தால் அன்றிப் பலா! = பலாப் பழம் தரீங்களாக்கும் நினைச்சி ஓடியாந்தேன்!
    பருவத்தால் அன்றிப் பழா! :)

    ReplyDelete
  2. நன்றி. ஞாநாநந்தர் பெயரைப் பார்த்ததும் ஓட்டமாய் ஓடி வந்தேன். படிச்சது தான் என்றாலும் நன்றி. :D

    ReplyDelete
  3. அருமையான கருத்தை
    பதிவாக்கிக் கொடுத்தமைக்கு
    நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பருவத்தால் அன்றிப் பழா. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அருமையான பகிர்வு. நன்றி கவிநயா!

    ReplyDelete
  5. பருவம் என்பது யாது?
    வயதா? பக்குவமா?
    கொண்டு வந்த மூட்டைகளா? அல்லது

    இறக்கி வைத்த அல்லது ஏற்றிக் கொண்ட சுமைகளா? இல்லை, இவை எல்லாவற்றின் கலவையா?
    யாரறிவார் ஞானத்தங்கமே?

    ReplyDelete
  6. பச்சையில் மஞ்சளைப் பூசியவர் யார்? இந்த காடின்யத்தில் மென்மையைப் புகுத்தியவர் யார்? இந்த துவர்ப்பில் இனிமையைப் புகுத்தியது யார்? ‘பருவத்தாலன்றி பழா’ //

    அழகான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றிகள் கவிக்கா....பதிவுடன் ஜீவாவின் பின்னூட்டமும் சேர்கையில் இன்னும் கொஞ்சம் சிந்தனை அதிகமாகிறது.

    ReplyDelete
  8. //பலாப் பழம் தரீங்களாக்கும் நினைச்சி ஓடியாந்தேன்!//

    வருக கண்ணா. பலாப் பழம் வேணும்னா மதுரைக்கு வாங்க! இங்கே அதெல்லாம் கிடையாது :( ஏமாற்றம் தந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க.

    ReplyDelete
  9. //நன்றி. ஞாநாநந்தர் பெயரைப் பார்த்ததும் ஓட்டமாய் ஓடி வந்தேன். படிச்சது தான் என்றாலும் நன்றி. :D//

    வாங்க கீதாம்மா. நீங்க படிக்காதது போடணும்னா, நான் என் வாழ்நாள் பூரா படிச்சாலும் கிடைக்காது :)

    வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  10. //அருமையான கருத்தை
    பதிவாக்கிக் கொடுத்தமைக்கு
    நன்றி.வாழ்த்துக்கள்//

    வாசித்தமைக்கு மிக்க நன்றி ரமணி.

    ReplyDelete
  11. //பருவத்தால் அன்றிப் பழா. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அருமையான பகிர்வு. நன்றி கவிநயா!//

    நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  12. //பருவம் என்பது யாது?
    வயதா? பக்குவமா?
    கொண்டு வந்த மூட்டைகளா? அல்லது

    இறக்கி வைத்த அல்லது ஏற்றிக் கொண்ட சுமைகளா? இல்லை, இவை எல்லாவற்றின் கலவையா?//

    நல்ல கேள்வி(கள்).

    //யாரறிவார் ஞானத்தங்கமே?//

    நல்ல பதில் :)

    கொண்டு வந்த, மற்றும் சேர்த்துக் கொண்டிருக்கும் சுமைகளை இறையருளால் இல்லாமல் செய்து விட்டால், அவனருளாலேயே பச்சை மஞ்சளாகும் பருவம் விரைவில் வந்து விடக் கூடும்...

    வெகு நாளுக்குப் பின் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜீவா. வருகைக்கும், சிந்திக்க வைத்த பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. //அழகான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

    நன்றி, இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  14. //நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றிகள் கவிக்கா....பதிவுடன் ஜீவாவின் பின்னூட்டமும் சேர்கையில் இன்னும் கொஞ்சம் சிந்தனை அதிகமாகிறது.//

    மௌலி, திரும்பவம் வலை வலம் வருவது குறித்து ரொம்ப சந்தோஷம் :) ஜீவாவின் பின்னூட்டம் பற்றி நீங்கள் சொல்வது உண்மையே. வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. //short bt very meaningful!//

    நன்றி லலிதாம்மா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)