Monday, June 6, 2011

நீ இல்லாத போதும்...

(100-வது கவிதை)



கடற்கரை மணலில்
கால் பதித்து நடக்கிறேன்
கூடவே பதிகின்றன
உன் பாதச் சுவடுகளும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

தனிமையின் அமைதியிலும்
இரைச்சலில் அமிழ்கையிலும்
தெளிவாய் ஒலிக்கிறது,
உன்னுடைய இன்குரல் மட்டும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

தெருவின் வெறுமையிலும்
திருவிழாக் கூட்டத்திலும்
புன்னகையுடன் பளிச்சிடுகிறது,
அன்பொளிரும் உன் வதனம் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/eaglella/246690652

பி.கு.: பாத யாத்திரை செய்வதை விட, அதைப் பற்றி எழுதறது கஷ்டமா இருக்கும் போல! போன வாரம் முழுக்க எழுதறதுக்கு போதிய நேரம் கிடைக்காததால இந்த வாரம் கவிதை. கூடிய விரைவில் யாத்திரையை தொடர்கிறேன்...

7 comments:

  1. //என்னருகில் நீ இல்லாத போதும்//

    அருகில் இல்லாத போது தானே அதிகமாய்...நல்லா இருக்குங்க

    ReplyDelete
  2. //அருகில் இல்லாத போது தானே அதிகமாய்//

    அழகாச் சொன்னீங்க! ஒற்றை வரிக் கவிதை :)

    நன்றி, அ.தங்கமணி :)

    ReplyDelete
  3. அருமையான கவிதை. புவனா சொன்னதையே வழிமொழிகிறேன்.

    யாத்திரையை தொடரும் போது கூடவே எங்கள் பாதச்சுவடுகள் வரும், பாருங்க:)! நேரம் வாய்க்கும் போது எழுதுங்கள். காத்திருப்போம்.

    ReplyDelete
  4. //அருமையான கவிதை. புவனா சொன்னதையே வழிமொழிகிறேன்.//

    நன்றி ராமலக்ஷ்மி!

    //யாத்திரையை தொடரும் போது கூடவே எங்கள் பாதச்சுவடுகள் வரும், பாருங்க:)!//

    ச்வீட்! :) ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி :)

    ReplyDelete
  5. ithuvarai yaaththiraiyum nice!
    kavithaiyum sweet;waiting for the next partof yaathrai.

    ReplyDelete
  6. //ithuvarai yaaththiraiyum nice!
    kavithaiyum sweet;waiting for the next partof yaathrai.//

    மிக்க நன்றி லலிதாம்மா!

    ReplyDelete
  7. என்னருகில் நீ இல்லாத போதும்…//
    Nice..

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)