Sunday, April 10, 2011

ஸ்ரீ ராமஜெயம்

அனைவருக்கும் இனிய ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!ன்பரைக் காத்திட அவனிக்கு வந்தது
ழகிய திருநாமம்!

தவன் மரபினில் பூமிக்கு வந்திட்ட
ண்டவன் திருநாமம்!

ருள்தனை விரட்டிடும் ஒளியதை ஊட்டிடும்
னியனின் திருநாமம்!

சனும் ஓதிடும், இகபர சுகந்தரும்
டில்லா திருநாமம்!

ண்மையின் வடிவத்தை இதயத்தில் நிறுத்திடும்
த்தமன் திருநாமம்!

ழ்வினை அகற்றிடும், நாடிடும் நெஞ்சினில்
ன்றிடும் திருநாமம்!

ன்றென்றும் பக்தர்க்கு உறுதுணை யாய்வரும்
ந்தையின் திருநாமம்!

ங்கிடும் உள்ளத்தை தாங்கிட வருவது
கனின் திருநாமம்!

ம்புலன் அடக்கிய அனுமனும் உரைப்பது
யனின் திருநாமம்!

ருமன தாகவே தினம்பாடி டுவோம்
ருவனின் திருநாமம்!

திடும் உள்ளத்தின் உள்நின்று ஒளிர்ந்திடும்
வியத் திருநாமம்!

வியம் தீர்த்திடும் அன்புடன் காத்திடும்
டதத் திருநாமம்

அதுவே எங்கள் ஜானகி ராமனின்
அழகிய திருநாமம்!

ராமராம என அடியவர் ஜெபித்திடும்
அற்புதத் திருநாமம்!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg


அடுத்த வாரம் முதல் விடுமுறையில் போறேன். கணினியைத் தொட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். விடுமுறை எனக்கு, விடுதலை உங்களுக்கு! :) பிறகு பார்க்கலாம்...

எல்லோரும் நல்லா இருக்கணும்!

16 comments:

  1. அகர வரிசையில் ஓர் அழகிய படைப்பு
    விடுமுறைக்கு கடிதம் கொடுப்பவர்கள்
    அந்த கடைசி சொற்றோடரை சேர்ப்பதில்லை
    தயவு செய்து அதை நீக்கி விட்டு
    சந்தோஷமாக விடுமுறையை அனுபவித்துவிட்டு வந்து
    நல்ல பதிவுகள் தரவும்

    ReplyDelete
  2. வாங்க ரமணி. ரசனைக்கு நன்றி.

    negative-ஆன பொருளில் எழுதலை. நம் கையில் என்ன இருக்கு, எல்லாமே அவன் விருப்பப்படி - அப்படின்னு சொல்லி (நம்பி) பழகிடுச்சு :) இருந்தாலும் நீங்க சொன்னதுக்காக மாத்திட்டேன் :)

    ReplyDelete
  3. அக்கா, உங்களுக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள் சரியா!..:)

    //விடுமுறை எனக்கு, விடுதலை உங்களுக்கு! // அதுகூட கவி நயத்தோடதான் வருது பாரேன்!!..:PP

    ReplyDelete
  4. ராம பக்தியில் சொக்கிப்போன அந்த அனுமந்தனின் கண்ணை நோக்கினாலே போதும்; நாஸ்திகனும் ஆஸ்திகனாகிடுவான்!இந்தபஜனையும் பாடினால் நாமே ராம மயமாகிடலாம் அவனைப்போல்!

    யாராவது 'குரங்கே!'என்று திட்டினால் பாராட்டுபோலத் தோணும்!    மெட்டு போடலையா?சுப்புசார் பாடி இணைக்குமுன் நீ ஓடிடுவாயா?

    அடுத்தவருகை எப்போ?

    ReplyDelete
  5. அருமையான பாடலுக்கு நன்றி கவிநயா.

    விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  6. A vil aarambithu auv vil varai alagaana kavithai.
    Natarajan.

    ReplyDelete
  7. இராமப்பிரானை நினைக்கையிலேயே ஆஞ்சநேயரும் மனதில் கூட வந்து விடுவார். பிரானிடம் அவ்வளவு நெருக்கமும் நேசமும் அவருக்கு.

    ReplyDelete
  8. //அக்கா, உங்களுக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள் சரியா!..:)//

    நன்றி தக்குடு :)

    // அதுகூட கவி நயத்தோடதான் வருது பாரேன்!!..:PP//

    :)))

    ReplyDelete
  9. //ராம பக்தியில் சொக்கிப்போன அந்த அனுமந்தனின் கண்ணை நோக்கினாலே போதும்; நாஸ்திகனும் ஆஸ்திகனாகிடுவான்!//

    ரொம்ப சரி, லலிதாம்மா :)

    எனக்கு பிடிச்ச படம், அதனாலதான் அங்கேயும், இங்கேயும் :)

    //மெட்டு போடலையா?சுப்புசார் பாடி இணைக்குமுன் நீ ஓடிடுவாயா?//

    இன்னும் நாலஞ்சு நாள் இருப்பேன் அம்மா. சுப்பு தாத்தா அதற்குள் அனுப்பினா, இணைக்கிறேன்...

    //அடுத்தவருகை எப்போ?//

    இன்னும் ஒரு மாதமாவது ஆயிடும்... உங்கள் பதிவுகளும், இன்னும் நிறைய பதிவுகளும் இப்பவே வாசிக்க முடியலை... இனிமே வந்துதான்...

    வருகைக்கு நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  10. //அருமையான பாடலுக்கு நன்றி கவிநயா.

    விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்:)!//

    நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  11. //A vil aarambithu auv vil varai alagaana kavithai.
    Natarajan.//

    நன்றி திரு.நடராஜன்.

    ReplyDelete
  12. //இராமப்பிரானை நினைக்கையிலேயே ஆஞ்சநேயரும் மனதில் கூட வந்து விடுவார். பிரானிடம் அவ்வளவு நெருக்கமும் நேசமும் அவருக்கு.//

    ஆம், ஜீவி ஐயா.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. @Kavinaya aunty: ovuru line-um avvalavu azhagaa irundhadhu!
    beautiful post... :)

    ReplyDelete
  14. //@Kavinaya aunty: ovuru line-um avvalavu azhagaa irundhadhu!
    beautiful post... :)//

    மிக்க நன்றி கள்வனின் காதலி!

    ReplyDelete
  15. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html

    ReplyDelete
  16. //உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... //

    ஊருக்கு போயிருந்தேன், இப்பதான் பார்க்க முடிந்தது. அன்புக்கு மிக்க நன்றி அ.தங்கமணி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)