Sunday, April 3, 2011

அம்மாவுக்கு ஒரு ஆரிரரோ


அம்மா இங்கே வாயேன் – என்
மடியில் தாச்சுக் கோயேன்
பாப்பா நானும் தாலாட்டுறேன்
கண்ணை மூடிக் கோயேன்

தினமும் நிறைய வேலை
ஓய்வே உனக்கு இல்லை
அப்பா முதல் எல்லாருமே
தர்றோம் உனக்கு தொல்லை

பொறுமை உனக்கு அதிகம்
பொறுப்புகளும் அதிகம்
அம்மா உன்மேல் நாங்க வெச்ச
பிரியமும் ரொம்ப அதிகம்

சின்னக் கையால் உன் கூந்தல்
கோதிடுவேன் நானே
பட்டுப் போல கன்னத்திலே
முத்திடுவேன் நானே

செல்ல அம்மா உன்னை இறுக
கட்டிக்குவேன் நானே
குட்டி பாப்பா போல உன்னை
பார்த்துக்குவேன் நானே!

--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்

22 comments:

  1. //அப்பா முதல் எல்லாருமே
    தர்றோம் உனக்கு தொல்லை//

    பாட்டு சூப்பர்-க்கா!
    ஆனா, குழந்தைக்கு அப்பாவை இழுத்து விட்டு, பாடச் சொல்லிக் கொடுத்தது அதை விடச் சூப்பர்! :)

    ReplyDelete
  2. படமும் வரிகளும் அழகோ அழகு.

    ReplyDelete
  3. //அப்பா முதல் எல்லாருமே
    தர்றோம் உனக்கு தொல்லை//

    good communication technique.

    subbu

    ReplyDelete
  4. இந்த இளந்தளிர் பாடும் தாலாட்டைக்கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து கரகரவென்று கண்ணீர் வடித்த (என்னைப்போன்ற)அன்னையர் எத்தனையோ?லேப் டாப்பை நகர்த்திவச்சிட்டேன்....கண்ணீர்பட்டு கெட்டுடுமோன்னு.

    ReplyDelete
  5. //ஆனா, குழந்தைக்கு அப்பாவை இழுத்து விட்டு, பாடச் சொல்லிக் கொடுத்தது அதை விடச் சூப்பர்! :)//

    ஹாஹா :) இந்த காலக் குழந்தைகளுக்கு எதுவும் சொல்லி வேற தரணுமா என்ன? :)

    வராதவங்களையெல்லாம் வரவழைச்சிடுச்சே குட்டிப் பாப்பா :) வருகைக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  6. //படமும் வரிகளும் அழகோ அழகு.//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  7. //good communication technique.//

    great minds think alike :)

    நன்றி சுப்பு தாத்தா :)

    ReplyDelete
  8. //இந்த இளந்தளிர் பாடும் தாலாட்டைக்கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து கரகரவென்று கண்ணீர் வடித்த (என்னைப்போன்ற)அன்னையர் எத்தனையோ?லேப் டாப்பை நகர்த்திவச்சிட்டேன்....கண்ணீர்பட்டு கெட்டுடுமோன்னு.//

    ச்சோ ச்வீட்மா நீங்க. நன்றி அம்மா :)

    ReplyDelete
  9. //very nice :-))//

    நன்றி உழவன் :)

    ReplyDelete
  10. /சின்னக் கையால் உன் கூந்தல்
    கோதிடுவேன் நானே
    பட்டுப் போல கன்னத்திலே
    முத்திடுவேன் நானே

    செல்ல அம்மா உன்னை இறுக
    கட்டிக்குவேன் நானே
    குட்டி பாப்பா போல உன்னை
    பார்த்துக்குவேன் நானே!/

    உங்களின் பாடலால் என்
    உள்ளத்திற்கு இதம்

    அம்ம்மா என்றாலே
    மனம் கமகமக்கும்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  11. //அம்ம்மா என்றாலே
    மனம் கமகமக்கும்//

    உண்மை, திகழ்.

    //உங்களின் பாடலால் என்
    உள்ளத்திற்கு இதம்//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  12. enna alagaana kavithai! Migavum rasithen.
    Natarajan.

    ReplyDelete
  13. மிகவும் ரசித்தேன் அக்கா!! எல்லா வரிகளுமே அருமை!..:)

    ReplyDelete
  14. //நல்லா இருக்கு கவிநயா//

    நன்றி செந்தில்வேலன்.

    ReplyDelete
  15. //enna alagaana kavithai! Migavum rasithen.//


    நன்றி திரு.நடராஜன்.

    ReplyDelete
  16. //மிகவும் ரசித்தேன் அக்கா!! எல்லா வரிகளுமே அருமை!..:)//

    ரொம்ப நன்றி தக்குடு கோந்தே :)

    ReplyDelete
  17. பொறுமை உனக்கு அதிகம்
    பொறுப்புகளும் அதிகம்
    அம்மா உன்மேல் நாங்க வெச்ச
    பிரியமும் ரொம்ப அதிகம்//
    சூப்பர்! :)

    ReplyDelete
  18. வாசித்து முடித்ததும், நானும் குழந்தையாய் உணர்ந்தேன்...

    ReplyDelete
  19. //சூப்பர்! :)//

    மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  20. //வாசித்து முடித்ததும், நானும் குழந்தையாய் உணர்ந்தேன்...//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் இசக்கிமுத்து.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)