Sunday, February 27, 2011

சரணாகதி



சின்னஞ் சிறிய சிறகொன்று…
தன்னந் தனியே…
காற்றின் கரத்தைப் பிடித்தபடி
நேற்றை முழுதாய் மறந்தபடி

செல்லும் திசையோ தெரியாது
போகும் வழியும் புரியாது
ஏறல் இறங்கல் அறியாது
இருந்தும் இயல்பாய் காற்றோடு
இணைந்தே நடக்குது மகிழ்வோடு

நானும் இன்னொரு பூஞ்சிறகு –

உன்றன் கரத்தைப் பிடித்தபடி
உன்றன் பெயரை ஜெபித்தபடி
உன்றன் அன்பில் திளைத்தபடி
நீயே எல்லாம், உணர்ந்தபடி...

--கவிநயா

19 comments:

  1. கவிதை நல்லாருக்கு. உன்றன் என வந்த இடங்களில் உந்தன் என வந்தால் இன்னும் எளீமையாக இருக்கும்.

    ReplyDelete
  2. நீயே எல்லாம், உணர்ந்தபடி//

    இங்கே கொஞ்சம் வேறுவிதமாய்ப் பொருள் கொண்டேன் முதலில், அப்புறம் மறுபடியும் படிச்சதும், நீயே எல்லாம் என உணர்ந்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது. என் புரிதல் சரியா? :)))))))

    ReplyDelete
  3. பூஞ்சிறகு.. மிகப் பிடித்திருக்கிறது கவிநயா.

    ReplyDelete
  4. /சின்னஞ் சிறிய சிறகொன்று…
    தன்னந் தனியே…
    காற்றின் கரத்தைப் பிடித்தபடி
    நேற்றை முழுதாய் மறந்தபடி

    செல்லும் திசையோ தெரியாது
    போகும் வழியும் புரியாது
    ஏறல் இறங்கல் அறியாது
    இருந்தும் இயல்பாய் காற்றோடு
    இணைந்தே நடக்குது மகிழ்வோடு

    நானும் இன்னொரு பூஞ்சிறகு –

    உன்றன் கரத்தைப் பிடித்தபடி
    உன்றன் பெயரை ஜெபித்தபடி
    உன்றன் அன்பில் திளைத்தபடி
    நீயே எல்லாம், உணர்ந்தபடி...

    /

    இறகு என்னும் சொல்லுக்குள்
    இறைவனின் இருப்பை
    இனிமையாக இயல்பாக‌
    எடுத்து உரைத்து வீட்டீர்கள்

    ReplyDelete
  5. 'மொத வெட்டு' க்கு நன்றி செந்தில்குமார் :)

    //உன்றன் என வந்த இடங்களில் உந்தன் என வந்தால் இன்னும் எளீமையாக இருக்கும்.//

    நீங்க சொல்றது ஒரு விதத்தில் சரியே, ஏன்னா எனக்குமே அப்படித்தான் பழக்கம் (என் பழைய கவிதைகளில் அப்படித்தான் எழுதியிருப்பேன்). பிறகு ஒரு முறை 'உன்றன்' 'என்றன்' என்பதே சரியான தமிழ் அப்படின்னு படிச்சேன், அதிலிருந்து சரியாகவே எழுதலாமேன்னு... :)

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //அப்புறம் மறுபடியும் படிச்சதும், நீயே எல்லாம் என உணர்ந்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது. என் புரிதல் சரியா?//

    சரிதான் அம்மா. அதனாலதான் ',' போட்டேன். "நீயே எல்லாம் (என்று) உணர்ந்தபடி" அப்படின்னு பொருள் வரும்படி.

    வருகைக்கு மிக்க நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  7. //பூஞ்சிறகு.. மிகப் பிடித்திருக்கிறது கவிநயா.//

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  8. //இறகு என்னும் சொல்லுக்குள்
    இறைவனின் இருப்பை
    இனிமையாக இயல்பாக‌
    எடுத்து உரைத்து வீட்டீர்கள்//

    உங்களுடைய சரியான புரிதல் மகிழ்ச்சியைத் தருகிறது, திகழ் :) மிக்க நன்றி.

    ReplyDelete
  9. yr saranaagathi made me feel as if i was floating in the air..i've never felt as light as this...the smaall feather[we] in total surrender to the breeze[HER]!!
    THIS FEELING IS REALLY FANTASTIC!!!

    ReplyDelete
  10. ஒரே மாதிரி இல்லாமல்,இது மாதிரி புதுப்புது முயற்சிகள் செய்து பார்ப்பது செய்பவருக்கும் சரி, வாசிப்பவர்க்கும் சரி, புதுமையாகத் தான் இருக்கிறது.
    அதோடு வார்த்தைகளின் எளிமை, எடுத்தாண்டிருக்கும் விஷயத்தின் மேன்மையை வெகு இலகுவாக எடுத்தோதுகிறது..

    ReplyDelete
  11. //yr saranaagathi made me feel as if i was floating in the air..i've never felt as light as this...the smaall feather[we] in total surrender to the breeze[HER]!!
    THIS FEELING IS REALLY FANTASTIC!!!//

    உங்க பின்னூட்டம் படிக்கையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது லலிதாம்மா :) மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //ஒரே மாதிரி இல்லாமல்,இது மாதிரி புதுப்புது முயற்சிகள் செய்து பார்ப்பது செய்பவருக்கும் சரி, வாசிப்பவர்க்கும் சரி, புதுமையாகத் தான் இருக்கிறது.
    அதோடு வார்த்தைகளின் எளிமை, எடுத்தாண்டிருக்கும் விஷயத்தின் மேன்மையை வெகு இலகுவாக எடுத்தோதுகிறது..//

    நீங்கள் வார்த்தைகளைக் கோர்த்திருக்கும் அழகுக்காகவே பல முறை வாசித்தேன் :) மிக்க நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  13. எளிமையான, அழகான, அர்த்தம் மிக நிறைந்த அருமையான கவிதை!!

    ReplyDelete
  14. //எளிமையான, அழகான, அர்த்தம் மிக நிறைந்த அருமையான கவிதை!!//

    வாருங்கள் தமிழன்பன். உங்களுடைய புதுவரவும், புரிதலும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது :) மிக்க நன்றி.

    ReplyDelete
  15. ...இருந்தும் இயல்பாய் காற்றோடு...
    இயல்பான வார்த்தைகளைகொண்டு
    மிக அழகாக எழுதிப்போகும் உங்கள்
    திறன் கண்டு அசந்து போனேன்
    நல்ல படைப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //நல்ல படைப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்//

    வாருங்கள் ரமணி. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  17. //இயல்பாய்.... :-))//

    உங்க comment எனக்கு கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கு, திவாஜி :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)