Sunday, December 5, 2010

என்ன நடக்குது இங்கே?

நாளைக்கு அலுவலகத்தில் முக்கியமான தலைகளோட ஒரு மீட்டிங் இருக்கு. கொஞ்சம் பார்க்கிற மாதிரி ட்ரஸ் பண்ணிக்கணும். நாளன்னிக்கு கோவில்ல பூஜைக்கு மாலை கட்டணும். கடைக்கு எழுதற லிஸ்ட்ல மறக்காம பூ எழுதணும். ஆங்! கடைக்கு போகும்போது ராத்திரி சாப்பிட ரெடி மேடா ஏதாச்சும் வாங்கிட்டு வந்துரலாமா? இல்லன்னா காலைல சீக்கிரம் எழுந்து என்னவாச்சும் சமைக்கணும். காய் என்ன இருக்குன்னு தெரியல. அச்சோ! அவங்களுக்கு குழந்தை பிறந்தாச்சுன்னு சொன்னாங்களே! எப்ப அவங்கள பார்க்க போலாம்? கடைக்கு போய் குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போகணும். இன்னிக்குக் காலைல எழுந்திருக்கும் போது ஒரு அழகான கவிதை வரி வந்துச்சே, அது என்ன? சே, எவ்வளவு பொருத்தமான உவமையோட வார்த்தைகளும் கோர்வையா அழகா வந்து விழுந்துச்சு! இப்ப மறந்து தொலைச்சிருச்சே. என்ன பண்றது? வேலையில இருந்து வரும்போது காருக்கு பெட்ரோல் வேற போடணும். அப்புறம் டான்ஸ் க்ளாஸ் போகும் போது போட நேரம் இருக்காது. டான்ஸ் வேற ப்ராக்டிஸ் பண்ணனுமே. பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுக்கிற டான்ஸை வேற ஒரு தரமாவது ஆடிப் பார்க்கணும். எதுக்கும் காலைல சீக்கிரம் எழுந்திரிச்சாதான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் படம் நல்லாதான் இருந்தது. அதில் ரிப்போர்ட்டரா வந்த பொண்ணு பேரு என்ன? எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. புதுசு யாரையும் தெரியல. நாளைக்காச்சும் ஏதாச்சும் சமைச்சே ஆகணும். ரெண்டு நாளா பழசை வச்சே ஓட்டியாச்சு. என்ன பண்றது? சப்பாத்தி பண்ணலாமா? பில்லெல்லாம் வேற கவனிக்கணும். இராத்திரி ப்ளாக் போஸ்ட் பண்ண நேரமிருக்குமான்னு தெரியலையே?

“க்ர்ர்ர்ர்ரிங்”. அலாரம் அடிக்குது.

பத்து நிமிஷம் ஆயாச்சு!

இன்னிக்கு நம்ம ‘தியானம்’ பண்ணி முடிஞ்சாச்சு!

--கவிநயா

பி.கு. வேடிக்கையா சொன்னாலும், மனசு இப்படித்தான் அலைஞ்சுகிட்டே இருக்கு :( உங்களுக்கு?

18 comments:

  1. //உங்களுக்கு?//

    அங்கே நடப்பதுதான் நடக்கு இங்கே:))!

    ReplyDelete
  2. எனக்கு அந்த பிரச்சனையெல்லாம் கிடையாது. தியானம்-ன்னு உக்காந்தாத்தானே இதெல்லாம் :))))

    ReplyDelete
  3. தியானம்ன்னு என்ன தனியா இருக்கு?.. ஈடுபாட்டோடு ஈடுபடுகின்ற வேலையும் அதில் தன்னை மறந்து செலுத்துகிற கவனமும் தியானம் தான் என்று யாரோ சொல்லியிருக்காங்களே?.. யார்ன்னு ஞாபகம் வரல்லேயே?..

    ReplyDelete
  4. \\பி.கு. வேடிக்கையா சொன்னாலும், மனசு இப்படித்தான் அலைஞ்சுகிட்டே இருக்கு :( உங்களுக்கு?\\

    அக்கா உங்களுக்குள்ள அலைஞ்சுகிட்டு இருக்கிறதை இப்படி பதிவு போட முடியுற அளவுக்கு இருக்கு...எனக்கு எல்லாம் இதையும் தாண்டி இருக்கு...;)))

    ReplyDelete
  5. முக்காலே மூணு வீசம் பேருக்கு அப்படிதான்! :-))

    ReplyDelete
  6. மாலா தோ கர் மேம் பிரை, ஜீப் பிரை முக் மாம்ஹி
    மனுவாம் தோ தஸு திசி பிரை, யஹ் தோ சுமிரன் நாம்ஹி

    என்று கபீர் சொன்னார். உத்திராட்ச மாலையின் கொட்டைகள் கையிலே உருண்டு கொண்டே இருக்கின்றன.
    வாயில் நாவோ உதடுகளுடன் உராசிக்கொண்டே ஜெபம் என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.
    அதே சமயம் மனம் பத்து திசைகளிலும் உலாவிக்கொண்டு இருக்கிறது.
    இதுவா தெய்வ ஸ்மரணை ? இல்லை.

    நாவை அடக்கவல்லார்க்கும் கூட மனத்தை அடக்க முடியாது. இது உண்மையே
    அது ஏதோ சொல்லிக்கொண்டிருக்கட்டுமே. நாம் நம் வழிச்செல்வோம் என்று இருக்கவும் முடியாது.
    மனம் ஒரு குரங்கு.
    மனிதர்கள் நாம் அக்குரங்கினிடம் அகப்பட்ட‌
    மாலை.    சுப்பு ரத்தினம்
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  7. எப்டியெல்லம் பதிவு போட்டு சம்மளிக்குறாங்கய்யா....

    ReplyDelete
  8. //அங்கே நடப்பதுதான் நடக்கு இங்கே:))!//

    பரவாயில்லை, எனக்கு துணைக்கு ஆள் இருக்கு :) நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  9. //KABEER ANBAN said...

    எனக்கு அந்த பிரச்சனையெல்லாம் கிடையாது. தியானம்-ன்னு உக்காந்தாத்தானே இதெல்லாம் :))))//

    இது நல்லாருக்கே! :)

    ReplyDelete
  10. //தியானம்ன்னு என்ன தனியா இருக்கு?.. ஈடுபாட்டோடு ஈடுபடுகின்ற வேலையும் அதில் தன்னை மறந்து செலுத்துகிற கவனமும் தியானம் தான் என்று யாரோ சொல்லியிருக்காங்களே?.. யார்ன்னு ஞாபகம் வரல்லேயே?..//

    ஆஹா, ஜீவி ஐயா கரெக்டா பிடிச்சிட்டீங்களே... நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு :) சிலவற்றைச் செய்யும்போது அவற்றில் ஈடுபடுதல் பரவாயில்லாமல் வருது; ஆனால் "சும்மா" இருப்பதுதான் சிரமமா இருக்கு.

    ReplyDelete
  11. //அக்கா உங்களுக்குள்ள அலைஞ்சுகிட்டு இருக்கிறதை இப்படி பதிவு போட முடியுற அளவுக்கு இருக்கு...எனக்கு எல்லாம் இதையும் தாண்டி இருக்கு...;)))//

    அது சரி... :) அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வந்துரும்... 'சிந்திக்க' பகுதியில் சுவாமி சிவானந்தா அவர்கள் சொல்லியிருப்பதைப் படிச்சீங்களா?

    ReplyDelete
  12. //முக்காலே மூணு வீசம் பேருக்கு அப்படிதான்! :-))//

    ஆனா உங்களுக்கு அப்படிக் கிடையாதுன்னு எனக்குத் தெரியுமே! ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, திவாஜி :)

    ReplyDelete
  13. //மனம் ஒரு குரங்கு.
    மனிதர்கள் நாம் அக்குரங்கினிடம் அகப்பட்ட‌
    மாலை.//

    உண்மை. கபீர் சொன்னதை பொருத்தமாக எடுத்துக் காட்டினதுக்கு நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete
  14. //அதே//

    நன்றி திகழ் :)

    ReplyDelete
  15. //எப்டியெல்லம் பதிவு போட்டு சம்மளிக்குறாங்கய்யா....//

    இது சமாளிப்பில்லை; உண்மையான ஆதங்கம்தாங்க. முதல் வருகைக்கு நன்றி வார்த்தை.

    ReplyDelete
  16. super super super..200% correct

    அதான் நான் மூணு முடிச்சு விழுந்தப்புறம் அதெல்லாம் விட்டாச்சு...ஹும்...

    ReplyDelete
  17. //super super super..200% correct

    அதான் நான் மூணு முடிச்சு விழுந்தப்புறம் அதெல்லாம் விட்டாச்சு...ஹும்...//

    :) வாங்க அ.தங்கமணி. துணைக்கு இன்னொருத்தர் :) வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)