Sunday, October 24, 2010

கண்ணாமூச்சி


மழைப்பெண் ஒருத்தி
கருமேகத் திரைக்குப்பின்
குறும்பாய் ஒளிந்திருக்க

விண்மீன் குழந்தைகள்
தங்கள் பங்குக்கு
வானெங்கும் மறைந்து கொள்ள

நீண்ட கதிர்களுடன்
ஒளிய வழியின்றி கதிரவன்
நாணத்தில் சிவந்திருக்க

இடிகள் ஒவ்வொன்றும்
மின்னல் விளக்கெடுத்து
விண்ணெங்கும் தேடி வர

உதவிக்குக் காற்றன்னை
தாவரங்கள் தம்மை
தலை கோதி அனுப்பித் தர

நீல மயில்கள் தங்கள்
தோகை விரித்தாடி
மழைப் பெண்ணைக் கவர எண்ண

அந்திப் பொழுதில் ஓர்
கண்ணாமுச்சி ஆட்டம்
அழகாய் நடக்கிறது...


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/danielmohr/4590740748/sizes/z/in/photostream/

4 comments:

  1. கண்ணாமூச்சி ஆட்டத்தை எத்தனை ரசனையோடு விவரித்திருக்கிறீர்கள்.

    மிக அருமை கவிநயா.

    ReplyDelete
  2. வாங்க ராமலக்ஷ்மி. நீங்க ரசிச்சது பற்றி சந்தோஷமா இருக்கு :) மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு

    நன்றி
    தமிழ்த்தோட்டம்
    http://tamilthottam.nsguru.com

    ReplyDelete
  4. //அருமையான பகிர்வு //

    வாருங்கள் தமிழ்த்தோட்டம். ரசனைக்கு நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)