Sunday, October 10, 2010

பங்கயம் அமர்ந்தவள்!

நவராத்திரி சிறப்புப் பதிவு.


தாமரைப் பூவினில் உதித்தவளாம்
தரணி யெல்லாம்தொழ முகிழ்த்தவளாம்
பாற்கடல் அலைகளில் பனிமலர்போல்
பார்ப்பவர் மயங்கிட பூத்தவளாம்!

மாலவன் மார்பினில் குடியிருப்பாள்
மன்னுயிர் பணிந்திட மகிழ்ந்திருப்பாள்
கோலஎழில் மிக திகழ்ந்திருப்பாள்
கொஞ்சிடும் குறுநகை புரிந்திருப்பாள்!

நான்கு கரங்களைக் கொண்டிருப்பாள்
நானிலம் நலம்பெற வரமளிப்பாள்
பாங்குடன் பங்கயம் அமர்ந்திருப்பாள்
பக்தரின் அன்பினில் களித்திருப்பாள்!!

--கவிநயா

8 comments:

  1. பாங்குடன் பங்கயம் அமர்ந்த மஹா லக்ஷ்மி மலர்ப்பதம் பணிவோம்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி, கைலாஷி.

    ReplyDelete
  3. "தாமரைப் பூவினில் உதித்த"
    லக்சுமி தேவி பாடல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. வாருங்கள் மாதேவி. நன்றி.

    ReplyDelete
  5. அருமை.

    நானிலமும் நலம் பெறட்டும் அவள் அருளால்.

    ReplyDelete
  6. அக்கா.



    சிறு குழந்தைகள் எளிதாகப் பாடும் வகையில் சந்தம் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலைப் பாடுவதற்கே என் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. //நானிலமும் நலம் பெறட்டும் அவள் அருளால்.//

    ததாஸ்து.

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. //சிறு குழந்தைகள் எளிதாகப் பாடும் வகையில் சந்தம் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலைப் பாடுவதற்கே என் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது//

    கேட்கும்போதே சந்தோஷமா இருக்கு குமரா. கத்துக் கொடுத்துட்டா பரம சந்தோஷம் :) முயற்சி வெற்றி பெற அன்னை அருள்வாள்.

    வருகைக்கு நன்றி குமரா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)