Tuesday, October 5, 2010

உங்களுக்கு எத்தனை அம்மா?



ஹையோ…. நீங்க நினைக்கிறாப்ல இது ஒண்ணும் வில்லங்கமான கேள்வி இல்லீங்க :) "அன்னை எத்தனை அன்னையோ" அப்படிங்கிற ஆன்மீகக் கேள்வியும் இல்லை!

அம்மான்னாலே ரொம்ப சிறப்பில்லையா? அம்மா-பிள்ளை உறவுக்கே தனி மதிப்பு; தனிச் சிறப்பு. பிள்ளைன்னா அதுல ஆம்புளப் புள்ள, பொம்பளப் புள்ள, எல்லாப் புள்ளையும் அடக்கம் :) எத்தனைதான் தவறு செஞ்சாலும் திரும்பத் திரும்ப மன்னிச்சு ஒரே மாதிரி அன்பு செலுத்த அம்மாவால் மட்டுமே முடியும்.

என்னைப் பொறுத்த வரை தன்னலமில்லாம, எதிர்பார்ப்பில்லாம, கலப்படமில்லாம, அன்பு செலுத்தறவங்க எல்லோருமே அம்மாதான்!

உதாரணத்துக்கு என் உயிர்த்தோழி. பல சமயங்களில் ஏன்தான் என் மேல இவ்ளோ அன்பு வச்சிருக்காங்களோ, இவங்களுக்கு நான் என்ன செய்திருக்கேன்னு நினைச்சு நினைச்சு வியப்பதுண்டு. அவங்க அளவு எனக்கு அவங்க மேல அன்பிருக்கான்னும் கேட்டுக்கறதுண்டு. அந்த அளவுக்கு என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவாங்க :) (touchwood!)

அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும். அதனாலதான் உங்களுக்கு எத்தனை அம்மான்னு கேட்டேன்!

சரி, எல்லா அம்மாவையும் சொல்லிட்டு, எல்லாருக்கும் அம்மாவை சொல்லாம விட்டுட்டேன்னா, அவ என்னை மன்னிக்கவே மாட்டா! குருவாய் திருவாய் உருவாய் அருவாய் திகழும் அவளைப் பற்றி சொல்லாம விட்டா எப்படி! இன்னும் சொல்லப் போனா அன்புக்கு ஏங்குபவர் யாராய் இருந்தாலும், ஏதோவொரு ரூபத்தில் வந்து அந்த அன்பை அள்ளித் தரும் அம்மா அவள்தானே! அவளை நவராத்திரிக்கு வரவேற்க உங்களைப் போலவே நானும் ஆயத்தமாகிக்கிட்டிருக்கேன்…

அனைவருக்கும் முன் கூட்டிய நவராத்திரி வாழ்த்துகள்!

அம்மா

தொப்புள் ‘கொடி’யை அறுத்தாலும்
தொடரும் உறவோ 'ஆலா'கும்
அம்மா என்ற ஒரு சொல்லில்
அன்(பு) ஆலயமே உருவாகும்

உதரத்தில் சுமப்பாள் சிலகாலம்
இதயத்தில் சுமப்பதோ பலகாலம்
குதறிடும் துன்பம் துளைத்தாலும்
கதறிடச் சுக(ம்)அவள் மடியாகும்

பதறும் மனமும் பதமாகும்
சிதறும் உணர்வும் சீராகும்
மதுரமாம் அவளின் மொழிகேட்டால்
கதிரொளி யாய்க்களி உருவாகும்!

--கவிநயா

பி.கு. இப்ப என்ன Mother’s Day கூட இல்லையே, ஒரே அம்மா புராணமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அதாங்க, என் பெற்றோர் நேற்று ஊருக்கு போயிட்டாங்களா… அவங்களை ரெண்டு கண்ணிலும் தே…டி வருதா… அதுக்குத்தான் இந்த (புலம்பல்) பதிவு…


படம் இங்கேர்ந்து சுட்டேன்: http://www.jesus-christ-channel.com/mary-mother-of-jesus-christ.html

14 comments:

  1. சுருக்கமாக அழகாக சொல்லிட்டிங்க ;)

    \\என்னைப் பொறுத்த வரை தன்னலமில்லாம, எதிர்பார்ப்பில்லாம, கலப்படமில்லாம, அன்பு செலுத்தறவங்க எல்லோருமே அம்மாதான்!\\

    உண்மை ;))

    ReplyDelete
  2. //அவளை நவராத்திரிக்கு வரவேற்க உங்களைப் போலவே நானும் ஆயத்தமாகிக்கிட்டிருக்கேன்//

    ஓ! கொலு முன்னோட்டப் பதிவோ-ன்னு நினைச்சேன்! :)

    //என் பெற்றோர் நேற்று ஊருக்கு போயிட்டாங்களா… அவங்களை ரெண்டு கண்ணிலும் தே…டி வருதா//

    உம்ம்ம்ம்...
    நிறைய உங்களுக்குச் சமைச்சு வச்சிட்டுப் போனாங்களா-க்கா? :)

    //குதறிடும் துன்பம் துளைத்தாலும்
    கதறிடச் சுக(ம்)அவள் மடியாகும்//

    சூப்பர்!
    என் முருகன் மடி கூட அப்படித் தான்!

    ReplyDelete
  3. தலைப்பு எவ்வளவோ பேசுது!

    //அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும்.//

    அருமை. அன்பென்றாலே அம்மா என அதனால்தான் சொன்னார்கள் போலிருக்கிறது.

    நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லியபடியே கவிதையினை ரசித்து வாசித்து விட்டுக் கடைசிப் பத்திக்கு வந்தால்... கண்ணை துடைச்சுக்கோங்க:)! உங்க கண்ணு ரெண்டும் தேடிக்கிட்டே இருந்தால் அவங்களுக்கும் அப்படியே!

    ReplyDelete
  4. நீங்க நேத்தே எழுதியிருந்தாலும் எனக்கு இன்னைக்குத் தான் படிக்கணும்ன்னு இருந்திருக்கு. என் அம்மாவோட நினைவு நாள் இன்னைக்கு. சாயங்காலம் பசங்ககிட்ட 'பாட்டி செத்து போயி 23 வருஷம் ஆச்சு'ன்னு சொன்னேன். அப்ப சேந்தன் அவனோட புரிதலை அழகா சொன்னான் - தொர அம்போ தேவ் ஜோல் ஜீ தேவ் ஹொய்யிரியோ' (உன்னோட அம்மா சாமிகிட்ட போயி சாமி ஆயிட்டாங்க'. :-) பூஜையறையில் அவனுக்குப் பிடித்த கணேசனையும் கிருஷ்ணனையும் அவன் எப்போதாவது கும்பிடும் போது அதே அறையில் இருக்கும் தாத்தா பாட்டி படத்தைக் காண்பித்து அவர்களையும் வணங்கச் சொல்வேன். அப்போதும் சொல்வான் - தாத்தா பாட்டி சாமியாயிட்டாங்கன்னு.

    - நினைவின் விளிம்பில் குமரன்... :-)

    ReplyDelete
  5. வாங்க கோபி :) மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //நிறைய உங்களுக்குச் சமைச்சு வச்சிட்டுப் போனாங்களா-க்கா? :)//

    கொஞ்சம் கொஞ்சம் :)

    //சூப்பர்!
    என் முருகன் மடி கூட அப்படித் தான்!//

    :) நன்றி கண்ணா.

    ReplyDelete
  7. //அருமை. அன்பென்றாலே அம்மா என அதனால்தான் சொன்னார்கள் போலிருக்கிறது.//

    ஆமாம்!

    //நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லியபடியே கவிதையினை ரசித்து வாசித்து விட்டுக் கடைசிப் பத்திக்கு வந்தால்... கண்ணை துடைச்சுக்கோங்க:)! உங்க கண்ணு ரெண்டும் தேடிக்கிட்டே இருந்தால் அவங்களுக்கும் அப்படியே!//

    உண்மைதான் ராமலக்ஷ்மி.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. //நீங்க நேத்தே எழுதியிருந்தாலும் எனக்கு இன்னைக்குத் தான் படிக்கணும்ன்னு இருந்திருக்கு. என் அம்மாவோட நினைவு நாள் இன்னைக்கு.//

    பொருத்தமாக அமைந்தது நெகிழ வைத்தது.

    //சேந்தன் அவனோட புரிதலை அழகா சொன்னான் - தொர அம்போ தேவ் ஜோல் ஜீ தேவ் ஹொய்யிரியோ' (உன்னோட அம்மா சாமிகிட்ட போயி சாமி ஆயிட்டாங்க'. :-)//

    ச்சோ ச்வீட் :) அவனுக்கு சுத்திப் போடுங்க!

    //- நினைவின் விளிம்பில் குமரன்... :-)//

    ரசித்தேன் :)

    நன்றி குமரா.

    ReplyDelete
  9. படிக்கும் போது கண் கலங்கி விட்டேன்.

    /வெகு நாளாக‌
    வெளிநாட்டு வாசம் அல்லவா/

    ReplyDelete
  10. //வெகு நாளாக‌
    வெளிநாட்டு வாசம் அல்லவா//

    ஆமாம். வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி திகழ்.

    ReplyDelete
  11. மிகவும் நெகிழ்ச்சியோடு படித்தேன்...:(

    இப்படிக்கு,
    இன்னொரு அம்மா பைத்தியம்

    ReplyDelete
  12. //மிகவும் நெகிழ்ச்சியோடு படித்தேன்...:(

    இப்படிக்கு,
    இன்னொரு அம்மா பைத்தியம்//

    வாங்க தக்குடு. நல்ல பைத்தியம்தான் உங்களுக்கு; கவலையில்லை :) அம்மா எப்பவும் அருகில்தான். மனசுக்குள்.

    ReplyDelete
  13. அன்பு கவிநயா,லின்க் கொடுத்த ராமலக்ஷ்மிக்கு நன்றி. இவ்வளவு அழகாக அம்மாவை யார் சொல்ல முடியும்.மகளிர்தின வாழ்த்துகள் மா.

    ReplyDelete
  14. வாங்க வல்லிம்மா! உங்களை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :) கூட்டிக்கிட்டு வந்த ராமலக்ஷ்மிக்கு நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)