Friday, August 20, 2010

வருவாய் வருவாய் வரலக்ஷ்மி!

அனைவருக்கும் வரலக்ஷ்மி நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகள்.




வருவாய் வருவாய் வரலக்ஷ்மி
தருவாய் தருவாய் வரம் லக்ஷ்மி

ஆழியில் அலைகளில் உதித்தவளே - எங்கள்
ஊழ்வினை அழித்து காப்பவளே
செல்வங்கள் அனைத்துக்கும் அரசியளே – உன்னை
சொல்கொண்டு பாடிட மகிழ்பவளே

எட்டென நின்று அருள் புரிவாய் - நீ
எட்டாப் பொருளையும் தந்திடுவாய்
உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
விட்டு விடாமல் காத்திடுவாய்!


--கவிநயா

9 comments:

  1. //உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
    விட்டு விடாமல் காத்திடுவாய்!//

    சேர்ந்து துதிக்கிறோம்.

    ReplyDelete
  2. //பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
    விட்டு விடாமல் காத்திடுவாய்!//

    நல்லா இருக்கு-க்கா!
    சரணம் என்று உண்மையாக நினைத்த மாத்திரத்தில்...வராத லட்சுமியும், வர லட்சுமியாய் வந்து விடுவாளே!

    சரி, சரி, என்னென்ன பலகாரம் செஞ்சீங்க? எடுத்து டேபிள்-ல்ல வைங்க! :)

    ReplyDelete
  3. வந்தேன் வந்தேன் ராமலக்ஷ்மி:)!

    பெற்றேன் பெற்றேன் வரலக்ஷ்மியின் அருளினை தங்கள் பாடலின் மூலமாக. நன்றி கவிநயா. நலமா?

    ReplyDelete
  4. Very nice picture and alagaana kutti kavithai,Iam also joining in your prayer.

    Natarajan.

    ReplyDelete
  5. 'rராவே மா இண்டிகி' என்பதை எளிமையாக, அழகாகச் சொல்லிவிட்டீர்கள் :)

    கொஞ்ச நாட்களாக இப்பக்கம் வரல்லை, பேஜ் செட்டிங் எல்லாம் மாற்றிட்டீங்க போல?....:)

    ReplyDelete
  6. /எட்டென நின்று அருள் புரிவாய் - நீ
    எட்டாப் பொருளையும் தந்திடுவாய்
    உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
    விட்டு விடாமல் காத்திடுவாய்!/

    அருமை

    ReplyDelete
  7. படமும் துதியும் அருமை

    ReplyDelete
  8. வருகை தந்து ஸ்ரீலக்ஷ்மி தேவியின் ஆசிகள் பெற்ற ஜீவி ஐயா, கண்ணன், ராமலக்ஷ்மி, திரு.நடராஜன், மௌலி, திகழ், பூங்குழலி, அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)