Sunday, March 28, 2010

நிலவு



வட்ட வட்ட நிலவைப் பார்!
வானைச் சற்றே நிமிர்ந்து பார்!
குட்டிக் குட்டி விண் மீன்கள்
சுற்றி நிற்கும் அழகைப் பார்!

விண்ணில் நீந்தி மிதக்கும் பார்!
விளக்கைப் போல ஜொலிக்கும் பார்!
கண்ணில் மின்னும் மணியைப் போல்
விண்ணில் மின்னும் நிலவைப் பார்!

இருளை நீக்கி உதவும் பார்!
வெளிச்சம் தந்து மகிழும் பார்!
கருணை மிக்க அன்னை போல்
குளிர்ந்து இன்பம் நல்கும் பார்!

தேய்ந்து குறையும் போதி லும்
சோர்ந் திடாத உறுதி பார்!
மீண்டும் மீண்டும் வளரும் பார்!
வளர்ந்து மிளிரும் அழகைப் பார்!

நிலவைப் போல நீ இரு!
பலரும் போற்ற வாழ்ந் திரு!
அறிவொளி யை ஏற் றிடு - அறி
யாமை தன் னை அழித் திடு!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/isfppoet/4394138578/sizes/m/


12 comments:

  1. படமும் கவிதையும் அருமை அழகு. மனதுக்கு அமைதியைத் தருகின்றன.

    ReplyDelete
  2. அருமை .
    பகிர்வுக்கு நன்றி!
    தொடருங்கள் ..........

    ReplyDelete
  3. //நன்று ;)//

    நன்றி கோபி!

    ReplyDelete
  4. //படமும் கவிதையும் அருமை அழகு. மனதுக்கு அமைதியைத் தருகின்றன.//

    மகிழ்ச்சியும் நன்றியும் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  5. //அருமை//

    நன்றி திகழ்.

    ReplyDelete
  6. //அருமை .
    பகிர்வுக்கு நன்றி!
    தொடருங்கள் ..........//

    ரசித்தமைக்கு நன்றி பனித்துளி சங்கர்.

    ReplyDelete
  7. //தேய்ந்து குறையும் போதி லும்
    சோர்ந் திடாத உறுதி பார்!
    மீண்டும் மீண்டும் வளரும் பார்!
    வளர்ந்து மிளிரும் அழகைப் பார்!//

    கவிதையின் ஜீவன் இந்த வரிகளில்
    மிளிர்கிறது.
    ஒன்றைக் காட்டி ஒன்றைச் சொல்லல்,
    கவிதைகளின் அழகைக் கூட்டும்.
    அதுவும் நல்ல கருத்துக்களை, குழந்தைகளுக்காக அமைந்திருக்கிற மாதிரியான இந்தக் கவிதையில் சொல்லியிருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று. குழந்தைகளுடன் அவர்கள் மனத்தில் பதிகிற மாதிரி பேசுவதற்கு குழந்தை உள்ளம் வேண்டும். அதை
    நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள், கவிநயா!

    ReplyDelete
  8. வாருங்கள் ஜீவி ஐயா.

    //குழந்தைகளுடன் அவர்கள் மனத்தில் பதிகிற மாதிரி பேசுவதற்கு குழந்தை உள்ளம் வேண்டும். அதை
    நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.//

    எனக்கு பிடித்தமான பாராட்டு :) மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  9. பங்குனி உத்திரத்தன்னைக்கு வந்த முழு நிலவைப் பார்த்து எழுதினீங்க போல இருக்கு. எனக்கு அன்னிக்கு முழு நிலவைப் பார்க்க ரொம்ப பிடிச்சுச்சு. :-)

    ReplyDelete
  10. //பங்குனி உத்திரத்தன்னைக்கு வந்த முழு நிலவைப் பார்த்து எழுதினீங்க போல இருக்கு. எனக்கு அன்னிக்கு முழு நிலவைப் பார்க்க ரொம்ப பிடிச்சுச்சு. :-)//

    அதுக்கு முன்னாடியே எழுதியது குமரன் :) வாசிச்சதுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)