Sunday, January 3, 2010

புன்னகையின் பொருள்நீங்க கடவுளை திட்டறதுண்டா?

நான் நிறையவே திட்டுவேன். “இத்தனை துயரத்தையும் வேதனைகளையும் குடுத்திட்டு, நீ மட்டும் ஒண்ணும் தெரியாத மாதிரி எல்லாத்தையும் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு, எப்பப் பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே வேற இருக்கியே. உனக்கே நியாயமா இருக்கா?” அப்படின்னு. எதிர்பாரா விதமா இந்தக் கேள்விக்கு விடை மாதிரி சமீபத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.

குழந்தை முதல் முதலா நடக்க முயற்சி செய்யும் போது, நாம அதோட ரெண்டு கையையும் பிடிச்சுக்கிட்டு மெதுவா நடத்தி கூட்டிட்டுப் போவோம். திடீர்னு ஒரு நொடி கையை விட்டுருவோம். குழந்தை பயந்துக்கும். நாம அதைப் பார்த்து சிரிப்போம். அதுக்காக, நாம குழந்தை பயப்படறதைப் பார்த்து சிரிச்சு ஆனந்தப் படறோம்னு பொருள் இல்லை. அந்த நொடி நேரம் பிடியை விட்டாலும், குழந்தை விழற மாதிரி இருந்தா நாம உடனே பிடிச்சுக்குவோம்னு நமக்கே தெரியும். குழந்தை தானா எவ்வளவு தூரம் சமாளிக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் வேடிக்கையா அப்படி செய்து பார்க்கிறோம்.

அதே போலத்தான் அன்னை பராசக்தியும். நம்மோடு எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கா. நம்மை எத்தனையோ துன்பத்திலும் இன்பத்திலும் உழல விட்டாலும், நம்மை இறுதியில் தாங்கிக் கொள்ளப் போகிறவள் அவள்தான்னு அவளுக்கே தெரியும். அதனாலதான் சிரிச்சிக்கிட்டே தன் குழந்தைகளை, நம்மை, அவ பார்த்துக்கிட்டிருக்கா. நாமதான் அவ தாங்கிப்பான்னு தெரியாமலோ, அல்லது நம்பாமலோ, பல சமயங்களில் தடுமார்றோம்.

திரு. ரா. கணபதி அவர்களின் ‘நவராத்திரி நாயகி’ என்ற புத்தகத்தின் முகவுரையில் அவர் சொல்லுகின்ற உவமைதான் இது. நல்லாருக்குல்ல?

என் புரிதலில், சொந்த வார்த்தைகளில் தந்திருப்பதால், செய்தியில் ஏதேனும் குற்றமிருந்தால் அது என்னுடையதே.


அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://babyanimalz.com/community/sites/default/files/images/PolarBears_02a-Mom_N_Baby-S.jpg

19 comments:

 1. அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் ரா. கணபதி அவர்களின் கருத்தை. பகிர்வுக்கு மிக்க நன்றி கவிந்யா.

  ReplyDelete
 2. நம்ம வீட்டுலேயும் சரி, கோவிலுக்குப் போனாலும் சரி....நான் சாமியோடு பேசி/சண்டை போட்டு/ செல்லம் கொஞ்சி/ சிலசமயம் எரிச்சலா என்னவோ எதிரில் நிக்கறவனோடு பேசும் ஸ்டைல்தான்.....

  கோபால்வேற....போதும். வா.... திட்டிக்கிட்டே நிக்காதேன்னுவார்:-)

  ReplyDelete
 3. ///திரு. ரா. கணபதி அவர்களின் ‘நவராத்திரி நாயகி’ ///

  உங்க எழுத்தும் அவரோட கருத்தும் நல்லா இருக்குங்க, மிக நல்லாவே சொல்லி இருக்காருங்க.

  ReplyDelete
 4. உவமை நல்லாருக்கு.

  ReplyDelete
 5. நாம் ஒரு விளையாட்டு பொம்மை அந்த ஜகன் நாயகிக்கு.

  ReplyDelete
 6. அழகாக சொல்லியிருக்கார்..பகிர்வுக்கு நன்றி ;)

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு கவிநயா.
  உங்கள் நடை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 8. நாம திட்டறதையும், பொருமுவதையும் அவள் ரசிச்சுக் கேட்கிறாள்னு தெரிஞ்சு இன்னும் அதிகமாத் திட்ட முயற்சி பண்ணுங்க!

  அருணகிரி நாதர் இதைத் தான் அனுபவிச்சு (திட்டி) சொன்னார் போல இருக்கு!

  "செந்தமிழால் அங்கு வைதாரையும் வாழ வைப்போன்" !

  :-))

  ReplyDelete
 9. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. பதில் எழுத ஆகும் தாமதத்திற்கு மன்னிக்கணும். சீக்கிரம் வரேன்...

  ReplyDelete
 10. 'சொல்லடி, சிவசக்தி!' என்று உரிமையுடன் விளித்து,
  '..... இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?' என்று கேட்டவன்
  இல்லையா, மஹாகவி?..

  ReplyDelete
 11. //பகிர்வுக்கு மிக்க நன்றி கவிநயா.//

  வாங்க ராமலக்ஷ்மி. நன்றி.

  ReplyDelete
 12. //என்னவோ எதிரில் நிக்கறவனோடு பேசும் ஸ்டைல்தான்.....//

  அதுதான் சரி அம்மா. இறைவனிடம் எல்லா உரிமையும் நமக்கு உண்டு. அப்படின்னு நான் சொல்லல, ஸ்ரீராமகிருஷ்ணர்தான் சொல்றார் :)

  வருகைக்கு நன்றி துளசிம்மா.

  ReplyDelete
 13. //உங்க எழுத்தும் அவரோட கருத்தும் நல்லா இருக்குங்க, மிக நல்லாவே சொல்லி இருக்காருங்க.//

  வாங்க கேசவன். முதல் பின்னூட்டமான்னு தெரியலை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 14. //உவமை நல்லாருக்கு.//

  வாங்க உழவன். நன்றி.

  ReplyDelete
 15. //நாம் ஒரு விளையாட்டு பொம்மை அந்த ஜகன் நாயகிக்கு.//

  ஆம் கைலாஷி :) வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 16. //அழகாக சொல்லியிருக்கார்..பகிர்வுக்கு நன்றி ;)//

  வாங்க கோபி. நன்றி.

  ReplyDelete
 17. //நல்ல பகிர்வு கவிநயா.
  உங்கள் நடை நன்றாக இருக்கிறது.//

  நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 18. //நாம திட்டறதையும், பொருமுவதையும் அவள் ரசிச்சுக் கேட்கிறாள்னு தெரிஞ்சு இன்னும் அதிகமாத் திட்ட முயற்சி பண்ணுங்க!//

  முயற்சியே வேணாம், கிருஷ்ணமூர்த்தி சார். அதெல்லாம் தானா.... வரும் :)

  //அருணகிரி நாதர் இதைத் தான் அனுபவிச்சு (திட்டி) சொன்னார் போல இருக்கு!

  "செந்தமிழால் அங்கு வைதாரையும் வாழ வைப்போன்" !//

  ஆமாம், நல்லா சொன்னீங்க.

  வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 19. //'சொல்லடி, சிவசக்தி!' என்று உரிமையுடன் விளித்து,
  '..... இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?' என்று கேட்டவன்
  இல்லையா, மஹாகவி?..//

  ஆமாம் ஜீவி ஐயா. அவனைப் போலவே நமக்கும் உரிமை உண்டு :)

  வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)