Wednesday, December 2, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 3

நேற்றைய பதிவின் தொடர்ச்சி...


சில காலத்திற்குப் பிறகு பல காரணங்களால் குழுமத்திற்கு தொடர்ந்து போக முடியலை. அப்படியே படிப்படியா குறைஞ்சிடுச்சு. சில மாதங்கள் எங்கேயுமே எழுதலை.

ஆன்மீகத்திலும், அதன் காரணமா பக்தி இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு
வ(ள)ர ஆரம்பிச்ச நேரமும் அதுதான். குமரனோட ‘அபிராமி அந்தாதி’ வலைப்பூதான் அப்பல்லாம் அடிக்கடி படிப்பேன். கண்ணனோட (கேயாரெஸ்) ‘பிள்ளைதமிழை’யும் விரும்பிப் படிச்சேன். அப்படித்தான் வலைப்பூக்களின் அறிமுகம் தொடங்கியது.

‘அன்புடனி’ல் மதச் சார்பான விஷயங்கள் எழுதக்கூடாது என்பது கொள்கை. அதில் தவறொன்றுமில்லை. நூற்றுக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் அதனால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம் என்பதால் அப்படி வச்சிருந்தாங்க.

எனக்கு இதுவும் எழுதணும், அதுவும் எழுதணும், எல்லாம் எழுதணும்னு இருந்தது :) கருத்து பரிமாறல்களும் சாத்தியமாகணும். ஏற்கனவே, எழுதுவதையெல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைக்கணும்கிற எண்ணம் வேறு இருந்தது.

ஒரு இணைய தளம் கூட ஆரம்பிச்சுட்டு, நேரமின்மை காரணமா அதைத் தொடர்ந்து பராமரிக்க முடியாம விட்டுட்டேன். வலைப்பூ பற்றி தெரிஞ்சதும், அட, இது நம்மைப் போல சோம்பேறி + அறிவிலிக்கு சுலபமா இருக்கேன்னு தோணிச்சு :)

முதல்ல எங்க ஊர் தமிழ்ச்சங்க வலைப்பூவில் தான் அவ்வப்போது எழுதிக்கிட்டிருந்தேன். என்ன இருந்தாலும் சொந்த வீடுன்னா கொஞ்சம் சௌகர்யம்தானேன்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான் இந்தப் பூ! என்னுடைய “என்று வருவான்?” என்கிற கவிதையில் இருந்தே வலைப் பூவிற்கு பெயரும் சூட்டினேன்.

அப்புறமா, 'அம்மன் பாட்டு', மற்றும் 'கண்ணன் பாட்டு' பூக்களின் குழுவில் குமரனும் கண்ணனும் அன்போடு என்னை சேர்த்துகிட்டாங்க. கண்ணன் பாட்டில் அவ்வப்போதும், அம்மன் பாட்டில் தொடர்ந்தும் எழுதிக்கிட்டிருக்கேன்.

கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி எழுதிய என் கவிதை ஒன்றை இங்கே படிக்கலாம் :)

கவிதை, வாழ்க்கையின் பல கடினமான தருணங்களைக் கடக்க எனக்கு ரொம்ப உதவியிருக்கு. இப்பவும் அப்படித்தான். அதோட, உங்களோட சகிப்புத் தன்மையால, இப்ப உரைநடை எழுதவும் பழகிக்கிட்டிருக்கேன்!

என்னோடு இதுவரை வந்தவங்களுக்கும், வருகிறவர்களுக்கும், வரப்போகிறவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை எழுத வைக்கின்ற, உங்களை வாசிக்க வைக்கின்ற, எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும், என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.

எழுத்துக்கலையும் நடனக்கலை மாதிரிதான். பார்க்கிறாப்ல இருக்கோ இல்லையோ (!), நடனம் ஆடுவதே ஆடுபவருக்கு தனி ஆனந்தம் தரும். நடனம் ஆடுவதற்காவது வயசும் தோற்றமும் கொஞ்சம் வேணும். (நிறையவே வேணும்னு யாரோ சொல்றது காதில் விழுது! :)

ஆனால் எழுத்துக்கு இதெல்லாம் அவசியமில்லை! எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம்! அதனால உங்களுக்கெல்லாம் மீண்டும் நன்றி!

அனைவருக்கும் நன்றி சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அன்பு கோபிக்கு சிறப்பு நன்றிகள்.

வலையுலகில் என் பூவும் மலர்ந்த கதை இதுதான். பாவம், நீங்கல்லாம் என்கிட்ட மாட்டிக்கிட்ட கதையும் இதுவேதான்!

நிஜம்ம்மாவே ரொம்ம்ம்ப பொறுமையா படிச்ச அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

அப்பாடி! கதையும் முடிஞ்சது; கத்தரிக்காயும் காய்ச்சது! நினைச்சதை விட ரொம்பவே நீண்டுடுச்சு, மன்னிச்சுக்கோங்க. இத்தனைக்கும் உங்க மேல இரக்கப்பட்டு நிறைய்ய்ய்யவே கட் பண்ணிட்டேனாக்கும்!

உங்க எல்லாருடைய வலைப்பூ வந்த அனுபவமும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கதால தொடர் பதிவுக்கு யாரையும் குறிப்பிட்டு கூப்பிடல. இந்த பதிவை வாசிச்சவங்க எல்லாம் இதனையே அன்பான அழைப்பா எடுத்துக்கிட்டு, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்!அன்புடன்
கவிநயா

16 comments:

 1. //எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம்.//

  ஆமாங்க.

  //அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம்! //

  அதேதாங்க.

  உங்களோடு உலவிய நேரம் இதம். இனி உலவப் போகும் நேரமும் எப்போதும் போல அப்படியேதான்:)! நல்வாழ்த்துக்கள் கவிநயா!

  ReplyDelete
 2. //எனக்கு இதுவும் எழுதணும், அதுவும் எழுதணும், எல்லாம் எழுதணும்னு இருந்தது :)//

  பட்டை தீட்டத் தீட்டத்தானே வைரம் பளபளக்கும்? கிடைத்த பயிற்சி (பிறர்) கண்ணுக்கு தெரிகிற மாதிரி வளர்ச்சியைத் தந்திருப்பது உண்மை. அது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. தமிழ் எழுதுவது படிப்பது கேட்பது எல்லாமே சுகம். உங்க அம்மா போட்ட சிறு விதை செழித்த மரமாய் வளர்ந்திருக்கு. நிறைய பேர் தண்ணி ஊற்றி உரம் போட்டு பராமரித்து இருக்காங்க (இன்னமும்)
  நிறைய எழுதுங்கள். அப்பதான் நாங்க நிறைய படிக்க முடியும்.

  ReplyDelete
 4. நல்லாயிருக்குங்க....இனிமையான உலா தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பல பழைய கவிதைகளை எதிர்நோக்கி இருந்து ஏமாற்றம் தான் மிச்சம்.

  இருந்த பொழுதும் இந்த மாதிரி சங்கிலிப்பதிவின் வாயிலாக உங்களின் எழுத்துகளை வலைப்பதிவில் பார்க்க முடிகிறதே என்பதே மகிழ்ச்சி தான்.

  /இத்தனைக்கும் உங்க மேல இரக்கப்பட்டு நிறைய்ய்ய்யவே கட் பண்ணிட்டேனாக்கும்!
  /

  உங்களின் கருணையால் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்தக் கவிதை வாசகன் தான்

  நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் எழுதுங்கள்.
  வாசிக்க காத்திருக்கின்றோம்.

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 6. //உங்களோடு உலவிய நேரம் இதம்.//

  நெசமாத்தானா? எனக்கே எப்படா முடிப்போம்னு ஆயிருச்சு :(

  கூட வருவதற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 7. //பட்டை தீட்டத் தீட்டத்தானே வைரம் பளபளக்கும்? கிடைத்த பயிற்சி (பிறர்) கண்ணுக்கு தெரிகிற மாதிரி வளர்ச்சியைத் தந்திருப்பது உண்மை. அது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.//

  ஆசிகளுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா!

  ReplyDelete
 8. //தமிழ் எழுதுவது படிப்பது கேட்பது எல்லாமே சுகம்.//

  உண்மைதான்.

  //உங்க அம்மா போட்ட சிறு விதை செழித்த மரமாய் வளர்ந்திருக்கு. நிறைய பேர் தண்ணி ஊற்றி உரம் போட்டு பராமரித்து இருக்காங்க (இன்னமும்)
  நிறைய எழுதுங்கள். அப்பதான் நாங்க நிறைய படிக்க முடியும்.//

  ஆகா, படிக்க நீங்களெல்லாம் இருக்கும்போது எழுதுவதற்கென்ன? எழுதித் தள்ளிடுவோம் :)

  வருகைக்கு மிக்க நன்றி ஹேமலதா.

  ReplyDelete
 9. //நல்லாயிருக்குங்க....இனிமையான உலா தொடர வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துகளுக்கு நன்றிங்க மௌலி :)

  ReplyDelete
 10. //உங்களின் கருணையால் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்தக் கவிதை வாசகன் தான்//

  அச்சோ! அவ்ளோ ஏமாற்றமா திகழ்? :( ரொம்ப ஸாரி. ஆனா டீனேஜ்ல எழுதின கவிதையெல்லாம் ரசிக்கும்படி இருக்குமான்னு தெரியலையே... (இப்ப மட்டும் என்னன்னு கேட்கறீங்களா... :)

  //நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம்.//

  உங்களுக்காகவே முந்தி எழுதினதுல சுமாரான ஒண்ணு ரெண்டாச்சும் போட்டு தாக்கிர வேண்டியதுதான்! விரைவில் எதிர்பாருங்கள்...! (தேடி எடுக்கணுமே :)

  வாசிப்பிற்கு மிக்க நன்றி திகழ்.

  ReplyDelete
 11. //ஆனால் எழுத்துக்கு இதெல்லாம் அவசியமில்லை! எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம்! //

  சத்தியமான வாக்கியம். உங்கள் சேவையை தொடர வேண்டூகிறேன்.

  ReplyDelete
 12. //சத்தியமான வாக்கியம். உங்கள் சேவையை தொடர வேண்டூகிறேன்.//

  அச்சோ. பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்களே... அன்புக்கு மிக்க நன்றி கைலாஷி!

  ReplyDelete
 13. /உங்களுக்காகவே முந்தி எழுதினதுல சுமாரான ஒண்ணு ரெண்டாச்சும் போட்டு தாக்கிர வேண்டியதுதான்! விரைவில் எதிர்பாருங்கள்...! (தேடி எடுக்கணுமே :)/

  உங்களின் கவிதையைக் கூட தேடி தான் படிக்க வேண்டி இருக்கிறது.


  :)))))))))))))))))

  அதாவது இளமை விகடனில் வந்த "தொலைக்க முடியாமல்"
  கவிதையைச் சொன்னேன்.


  வாழ்த்துகள்

  எங்கே சென்றாலும்
  விடாக் கண்டனாய்
  கூடவே வந்து தொலைக்கிறது மனசு..
  கவிதை தொலைக்க முடியாமல்..!

  ReplyDelete
 14. ஏவ்வ்வ்வ்வ்வ் ;))))

  லேட்டுக்கு ஒரு சாரி ;))

  சூப்பரு....ம்ம்ம்..நீங்க பெரிய பெரிய இடத்துக்கு எல்லாம் போயி பெரிய பெரிய ஆளுங்க கூட எல்லாம் பழகி தான் பதிவை ஆரம்பிச்சியிருக்கிங்க ;) குட் குட் ;))

  \\அட, இது நம்மைப் போல சோம்பேறி + அறிவிலிக்கு சுலபமா இருக்கேன்னு தோணிச்சு :)\\

  இதை படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியல ;))

  இந்தியாவில் இருக்கேன் ;)

  ReplyDelete
 15. //உங்களின் கவிதையைக் கூட தேடி தான் படிக்க வேண்டி இருக்கிறது.

  அதாவது இளமை விகடனில் வந்த "தொலைக்க முடியாமல்" கவிதையைச் சொன்னேன்.//

  ஆகா, கவிதை பிரியரான நீங்க தேடிப் படிச்சதில் மிக்க மகிழ்ச்சி திகழ் :) அங்கே இடுவதையும் அப்பப்ப இங்கேயும் இடறதாகத்தான் இருக்கேன்...

  //கூடவே வந்து தொலைக்கிறது மனசு..
  கவிதை தொலைக்க முடியாமல்..!//

  நீங்க 'கவிதை'ன்னு சேர்த்திருப்பதை ரசித்தேன். அதுவும் பொருத்தமாதான் இருக்கு :)

  ReplyDelete
 16. //ஏவ்வ்வ்வ்வ்வ் ;))))//

  கோபி! இது என்ன? இந்தியால நல்ல்ல்லா சாப்பிட்டுக்கிட்டிருக்கீங்கன்னு அர்த்தமா? :)

  //லேட்டுக்கு ஒரு சாரி ;))//

  ஊருக்கு போயிருக்கறதால மன்னிச்சிட்டேன்!

  //சூப்பரு....ம்ம்ம்..நீங்க பெரிய பெரிய இடத்துக்கு எல்லாம் போயி பெரிய பெரிய ஆளுங்க கூட எல்லாம் பழகி தான் பதிவை ஆரம்பிச்சியிருக்கிங்க ;) குட் குட் ;))//

  ஆமா, உங்களையெல்லாம், அவங்களையெல்லாம் போல நல்ல மனதுடையவங்களுடன் பழக கிடைச்சது என் அதிர்ஷ்டம்தான் :)

  //\\அட, இது நம்மைப் போல சோம்பேறி + அறிவிலிக்கு சுலபமா இருக்கேன்னு தோணிச்சு :)\\

  இதை படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியல ;))//

  ஏன்னு சொல்லலையே :)

  //இந்தியாவில் இருக்கேன் ;)//

  சந்தோஷம் கோபி. நல்லா என்சாய் பண்ணுங்க! ஊருக்கு போயிருக்கும் சமயத்திலும் வாசிக்க நேரம் ஒதுக்கினதுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)