Tuesday, December 1, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 2

(போன வாரத் தொடர்ச்சி...)


‘அன்புடனி’ல் எழுதிய நாட்கள் இனிமையானவை. அங்கே நிஜமாவே எல்லாரும் அன்பா இருந்தாங்க!

கவிதையை இட்டதும் உடனுக்குடன் கிடைச்ச கருத்துப் பரிமாறல்கள் திருப்தியைத் தந்தது. நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. அன்புடன் புகாரி, சேதுக்கரசி, தி.சுந்தர், கவிஞர் ரமணன், ஆனந்த், காந்தி, வாணி, திரு.ஜெயபாரதன், திரு. சக்தி சக்திதாசன், சுரேஷ் பாபு, என்.சுரேஷ், ப்ரியன், முஜிப், ரிஷான், பூங்குழலி, இப்படி நிறைய பேர். சிலருடைய பெயர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு, அவங்க என்னை மன்னிக்கணும். இவங்கல்லாம் என் கவிதைகளை தொடர்ந்து படிச்சவங்க, இவங்க எழுத்துகளையும் இன்னும் பலரின் எழுத்துகளையும் நானும் விரும்பி படிச்சேன்.

தி.சுந்தரின் இழைகளைப் படிச்சா வாய் விட்டு சிரிக்காம இருக்க முடியாது! அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை, அவர் எழுத்தில். கவிதைகளும் அற்புதமா எழுதுவார். அவருடைய சிந்தனைகளே வித்தியாசமா இருக்கும். இவர் அறியாத விஷயமே இல்லை.

கவிஞர் ரமணன் அண்ணா போல கவிதைகள் எழுத முடியாது! தங்கு தடையில்லாம அவருக்கு வார்த்தைகள் வந்து விழும் விதத்தைப் பார்த்தால் பிரமிப்பா இருக்கும்.

திரு. ஜெயபாரதன் பல மொழி பெயர்ப்புக் கவிதைகளை எழுதியிருக்கார். அவர் ஒரு விஞ்ஞானியும் என்பதால் விஞ்ஞான புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கார். இவர் எனக்கு ‘எமிலி டிக்கின்ஸன்’ என்று பெயர் சூட்டியிருந்தார்!

திரு. சக்தி சக்திதாசன் இயல்பான எளிமையான கவிதைகள் சரளமா எழுதுவார். நல்ல பண்பாளர். தவறாமல் அனைவரையும் ஊக்குவிப்பதில் மிக்க அன்பானவர்.

சுரேஷ் பாபு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்கிற அளவிற்கு கணினியிலிருந்து அரசியல் வரை எல்லாவற்றையும் ஆழ்ந்த விஷய ஞானத்துடன் அலசுவார்.

அன்புடன் புகாரி அநாயாசமா கவிதைகள் எழுதுவார். புத்தகங்கள் வெளியிட்டிருக்கார். காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட்! முதல் யூனி தமிழ் குழுமமான அன்புடனை ஆரம்பித்த பெருமை இவருக்கே உரியது!

சேதுக்கரசி எத்தனை இழை இருந்தாலும் அத்தனையும் தவறாமல் படிச்சு விவரமா பின்னூட்ட வேற செய்வாங்க! அத்தி பூத்தாப்ல கவிதை எழுதினாலும், எழுதறப்ப அசத்திருவாங்க.

ரிஷு என்கிற ரிஷானைப் பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும்.

இப்படி ஒவ்வொருத்தரையும் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம், ஆனா நீங்களும் எழுந்து போயிருவீங்க! அதனால இப்போதைக்கு நிறுத்திக்கிறேன் :)

அன்புடனில் இருந்த அந்த சில வருஷங்களில்தான் நான் அதிக பட்ச கவிதைகள் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்.

சுவாரஸ்யமான பல இழைகள், கருத்தாடல்கள், கவியரங்கங்கள், ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள், கவிதை, கதைப் போட்டிகள், இப்படி பலப்பல நிகழ்ச்சிகள் நடந்தன, அன்புடனில்.

கவிதைப் போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு ஒண்ணும் வாங்கல. (இங்க குலோப்ஜாமூன் கதை மாதிரி இல்லப்பா! எக்கச்சக்க பேர், அதுவும் பெரீய்ய்ய கவிஞர்கள் கலந்துகிட்டாங்க!). எப்பவும் எங்கேயும் பரிசு வாங்கும் ஷைலஜாக்கா இங்கேயும் பரிசு வாங்கினது நினைவிருக்கு! ஒரு (வீடியோ)படக் கவிதைக்கு, நயாகரா அருவி பற்றியது, ஆறுதல் பரிசு வாங்கினேன். அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலா இருந்தது!

இன்னும் கொஞ்சூண்டு (காட் ப்ராமிஸ்!) இருக்கு; நாளைக்கு முடிச்சிடறேன்...

அன்புடன்
கவிநயா

10 comments:

  1. இனிமையான நாட்களை நினைவு கூறுகையில் தெரிகின்ற உங்கள் குதூகலமானது குழந்தையின் துள்ளலைப் போல அழகு.

    //இன்னும் கொஞ்சூண்டு (காட் ப்ராமிஸ்!)//

    இவ்வரியே அதற்கு சான்று:)!

    //நயாகரா அருவி பற்றியது, ஆறுதல் பரிசு வாங்கினேன். //

    வாழ்த்துக்கள். அந்த அருவியைப் போலவே உங்கள் எழுத்தும் பொங்கிப் பிரவாகமாக தங்கு தடையின்றி பயணிக்க என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆமா, இப்ப எழுதக் கூடாதுன்னு யாராவது உங்களுக்கு தடை விதிச்சிருக்காங்களா என்ன ...?

    ReplyDelete
  3. //இனிமையான நாட்களை நினைவு கூறுகையில் தெரிகின்ற உங்கள் குதூகலமானது குழந்தையின் துள்ளலைப் போல//

    உண்மைதான் ராமலக்ஷ்மி. சரியா சொன்னீங்க :)

    //அந்த அருவியைப் போலவே உங்கள் எழுத்தும் பொங்கிப் பிரவாகமாக தங்கு தடையின்றி பயணிக்க என் வாழ்த்துக்கள்!//

    என்ன ஆச்சர்யம். நேற்றுதான் என் அம்மா முருகன் பதிவை படிச்சிட்டு இதே உவமை சொல்லி வாழ்த்தினாங்க!

    உங்க அன்பிற்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  4. பூங்குழலி! உங்களை எதிர்பார்க்கவே இல்லை :) இன்ப அதிர்ச்சிதான் போங்க!

    //ஆமா, இப்ப எழுதக் கூடாதுன்னு யாராவது உங்களுக்கு தடை விதிச்சிருக்காங்களா என்ன ...?//

    ஆனா சிரிப்பான் போடாததால கொஞ்சமே கொஞ்சம் கோவமாயிட்டீங்களோன்னு தோணிச்சு :) இல்லைதானே?

    எழுத வேண்டாம்னு யாரும் சொல்வாங்களா என்ன...:) எனக்குதான் வலையில் ஒரு பக்கம் உலாவினா இன்னொரு பக்கம் உலாவ முடியறதில்லை, ஆசை இருந்தாலும்(நேரமின்மை). முன்னே முழுக்க முழுக்க குழுமம், இப்போ முழுக்க முழுக்க ப்ளாக்னு ஆயிருச்சு. அடுத்து என்னவோ, யாருக்குத் தெரியும்? :)

    உங்களை பார்த்ததில் பரம சந்தோஷம்! வருகைக்கு மிக்க நன்றி பூங்குழலி!

    ReplyDelete
  5. ஆஹா நானுமா?
    மகிழ்வாக உணர்கிறேன்.. :)
    நன்றி சகோதரி !

    ReplyDelete
  6. கொசுவர்த்தியில் பலரையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...நன்றி. :)

    ReplyDelete
  7. //ஆஹா நானுமா?//

    அதென்ன அப்படிக் கேட்டுட்டீங்க? :(

    //மகிழ்வாக உணர்கிறேன்.. :)//

    மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சி ரிஷு :)

    ReplyDelete
  8. //கொசுவர்த்தியில் பலரையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...நன்றி. :)//

    வாங்க மௌலி. வாசிச்சதுக்கு உங்களுக்குத்தான் நன்றி :)

    ReplyDelete
  9. உங்க உற்சாகத்த பார்த்து ரொம்ப சந்தோசம் கவிநயா ..கோபம் ஒண்ணும் இல்லை ..அன்புடன கடந்த காலம் ஆக்கிட்டீங்களே ன்னு வருத்தம் தான் :)))))))))))))))

    ReplyDelete
  10. கோபமில்லைன்னு சொன்னதில் இன்னும் மகிழ்ச்சி, பூங்குழலி :)

    வருத்தம் எனக்கும் இருக்கு. ஆனால் இன்னும் கடந்த காலம் ஆகலை :) இப்பவும் (அமைதிப் படை) உறுப்பினர்தான். அவ்வப்போது எட்டியும் பார்க்கிறேன் :) நல்லதா ஏதாச்சும் கவிதை எழுதினா எடுத்துக்கிட்டு வந்துடறேன் :)

    மீள் வருகைக்கு மிக்க நன்றி மருத்துவரே! :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)