Sunday, October 11, 2009

பரீட்சை



விடிய விடிய விழித்தாலும்
விழி சிவக்கப் படித்தாலும்
பரீட்சை என்றாலே எனக்கு
பதட்டம் வந்து விடும்

பென்சில் களைச் சீவுவதும்
பேனாக் களை நிரப்புவதும்
ரப்பர் களைத் தேடுவதும்
ரிவிஷன் கள் செய்வதுமாய்
காலை எழுந்த நேரம் முதல்
கால் பாவாமல் பரபரத்தேன்

அதிகாலை அவதியிலும்
அடி வயிறு கலங்கையிலும்
கற்ற தெல்லாம் கருத்தில் நிற்க
படித்தது மட்டும் பரீட்சையில் வர
கண்கள் மூடி ஒரு நிமிடம்
கடவுளிடம் பேரம் செய்தேன்

ஷூவுக்குள் கால் திணித்து
புத்தகப் பை தூக்கி
சாப்பாடு சகிதமாக
ஸ்கூல் பஸ்ஸில் ஏறுகையில்...
"படித்த தெல்லாம் மறக்காதே
பார்த்து கவனமாய் எழுது
பெஸ்ட் ஆஃப் லக்"
என்று பரீட்சை எழுதும் பிள்ளையினை
வாழ்த்தி வழி அனுப்பி வைத்தேன்!!


--கவிநயா


பி.கு. முன்னொரு காலத்தில் எழுதிய கவிதை :) 'திண்ணை'யில் வந்ததோ... நினைவில்லை.

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/kelvinlee/2984508104/

24 comments:

  1. ஹா ஹா..பரீட்சை எப்போதும் பெற்றோருக்குத்தான். பிள்ளைகள் கூலோ கூல்தான்:))! நல்ல கவிதை கவிநயா!

    ReplyDelete
  2. இப்போது கூட எனக்கு பரீட்சையில் பதில் தெரியாமல் விழிப்பது போல் கனவுகள் வரும். நல்ல கவிதை

    ReplyDelete
  3. //விடிய விடிய விழித்தாலும்
    விழி சிவக்கப் படித்தாலும்
    பரீட்சை என்றாலே எனக்கு
    பதட்டம் வந்து விடும்//

    இது இய‌ல்புதானே

    //பென்சில் களைச் சீவுவதும்
    பேனாக் களை நிரப்புவதும்
    ரப்பர் களைத் தேடுவதும்
    ரிவிஷன் கள் செய்வதுமாய்
    காலை எழுந்த நேரம் முதல்
    கால் பாவாமல் பரபரத்தேன்//

    இதுவும் ப‌த‌ட்ட‌த்தில் வ‌ருவ‌து... கூடுமான‌வ‌ரை எல்லோருக்கும்...

    //அதிகாலை அவதியிலும்
    அடி வயிறு கலங்கையிலும்
    கற்ற தெல்லாம் கருத்தில் நிற்க
    படித்தது மட்டும் பரீட்சையில் வர
    கண்கள் மூடி ஒரு நிமிடம்
    கடவுளிடம் பேரம் செய்தேன்//

    க‌ட‌வுளிட‌ம் பேர‌ம்.... ந‌ன்கு ர‌சித்தேன் கவிந‌யா...

    //ஷூவுக்குள் கால் திணித்து
    புத்தகப் பை தூக்கி
    சாப்பாடு சகிதமாக
    ஸ்கூல் பஸ்ஸில் ஏறுகையில்...
    "படித்த தெல்லாம் மறக்காதே
    பார்த்து கவனமாய் எழுது
    பெஸ்ட் ஆஃப் லக்"
    என்று பரீட்சை எழுதும் பிள்ளையினை
    வாழ்த்தி வழி அனுப்பி வைத்தேன்!!//

    சூப்ப‌ர் ..... எதிர்பாராத‌ முடிவு... ஏற‌க்குறைய‌ என்னுடைய‌ "தோப்பும்....புங்கை ம‌ர‌மும்.... பின்னே ஞானும்" வ‌கையான‌ அட்ட‌காச‌மான‌ முடிவு....

    இதே போன்ற‌ என் ப‌திவையும் பாருங்க‌ளேன் க‌விந‌யா.... பார்த்து விட்டு சொல்லுங்க‌ளேன் உங்க‌ளின் மேலான‌ க‌ருத்தை...

    (தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்
    http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post_17.html)

    அருமையான‌ ப‌திவிற்கு என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்...

    ReplyDelete
  4. இப்போது பிள்ளைகள், அப்புறம் பேரன் பேத்தின்னு தொடரும் ;)

    ReplyDelete
  5. நன்றாக வந்திருக்கிறது கவிநயா. உண்மைதான். பிள்ளைகளுக்குப் பரீட்சை என்றால் பதறுவது நாங்கள் தானே!

    ReplyDelete
  6. ஒரு உண்மையை உங்ககிட்ட சொல்லறேன் கவிநயா. என் பெண் பரீட்சைக்கு கண் விழித்து கஷ்டப்பட்டு படிப்பதை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய முதல் நினைப்பு - "ஹையா நான் இதெல்லாம் முடிச்சுட்டேனே" என்பது தான். அப்புறமா நானும் அவ கூட சேர்ந்து நிறைய கவலைப்படுவேன். நல்ல கவிதை.

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா!
    நீங்க பரீட்சை எழுதினப்போ, உங்க வீட்டுல என்ன என்னவெல்லாம் தாம் தூம் பண்ணி இருப்பீங்க! அதான்-க்கா இப்போ ஒங்கள துரத்துது! :)))

    ReplyDelete
  8. //பரீட்சை எப்போதும் பெற்றோருக்குத்தான். பிள்ளைகள் கூலோ கூல்தான்:))!//

    கஷ்டப்பட்டு இவ்ளோ பெரீய்ய கவிதை எழுதினா, நீங்க ஒரே வரில சொல்லிட்டீங்களே, இது நியாயமா? :)

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  9. //இப்போது கூட எனக்கு பரீட்சையில் பதில் தெரியாமல் விழிப்பது போல் கனவுகள் வரும். நல்ல கவிதை//

    ரசித்தமைக்கு மிக்க நன்றி சின்ன அம்மிணி :)

    ReplyDelete
  10. //சூப்ப‌ர் ..... எதிர்பாராத‌ முடிவு... ஏற‌க்குறைய‌ என்னுடைய‌ "தோப்பும்....புங்கை ம‌ர‌மும்.... பின்னே ஞானும்" வ‌கையான‌ அட்ட‌காச‌மான‌ முடிவு....//

    இவ்வளவு ரசிச்சுப் படிச்சதுக்கு மிக்க நன்றி கோபி! :)

    /இதே போன்ற‌ என் ப‌திவையும் பாருங்க‌ளேன் க‌விந‌யா.... பார்த்து விட்டு சொல்லுங்க‌ளேன் உங்க‌ளின் மேலான‌ க‌ருத்தை...//

    கண்டிப்பா! சீக்கிரமே பார்த்து சொல்றேன்!

    ReplyDelete
  11. //இப்போது பிள்ளைகள், அப்புறம் பேரன் பேத்தின்னு தொடரும் ;)//

    ஆசீர்வாதத்திற்கு நன்றி கோபி தாத்தா! :)

    ReplyDelete
  12. //பிள்ளைகளுக்குப் பரீட்சை என்றால் பதறுவது நாங்கள் தானே!//

    ஆம் ஜெஸ்வந்தி :) வருகைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  13. //அப்புறமா நானும் அவ கூட சேர்ந்து நிறைய கவலைப்படுவேன்.//

    அச்சோ, அவ கவலைப்படுவாளா? ஹ்ம்.. ஒரு வேளை ஆண் பிள்ளைகள்தான் 'டோண்ட் கேர்' ரகம் போல :)

    ரசனைக்கு நன்றி மீனா!

    ReplyDelete
  14. //நீங்க பரீட்சை எழுதினப்போ, உங்க வீட்டுல என்ன என்னவெல்லாம் தாம் தூம் பண்ணி இருப்பீங்க! அதான்-க்கா இப்போ ஒங்கள துரத்துது! :)))//

    அப்டில்லாம் இல்ல கண்ணா. நான் அப்பவும் இப்பவும் எப்பவும் ரொம்ம்ம்ம்ப சமர்த்தாக்கும்! :)

    வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  15. இயல்பாக‌
    இனிமையாக‌
    இருக்கிறது

    பழைய நினைவுகளைக் கிளம்பி விட்டு விட்டீர்கள்




    (ஆங்கிலம் கலந்து இருப்பதைத் தவிர)

    ReplyDelete
  16. //very interesting ending. :)//

    வாங்க ராதா. மிக்க நன்றி :)

    ReplyDelete
  17. //(ஆங்கிலம் கலந்து இருப்பதைத் தவிர)//

    வாங்க திகழ். இந்த கவிதையை பதிந்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம் உங்களுக்கு எப்படி தெரிந்தது? :) இப்போது இருப்பது போல் தமிழிலேயே எழுதணும் என்கிற பிடிவாதம் இதை எழுதின காலத்தில் இருக்கலை, அதான் :)

    வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  18. //நன்று.. நன்று..//

    நன்றி ஸ்வர்ணரேக்கா. உங்களுடைய பரிசு பதிவில் கூட உங்களை காணுமே? :) பார்த்துட்டீங்களா?

    http://kavinaya.blogspot.com/2009/09/blog-post_14.html

    ReplyDelete
  19. நல்லாயிருக்குங்க உங்க பரிச்சை.

    ReplyDelete
  20. //சி. கருணாகரசு said...

    நல்லாயிருக்குங்க உங்க பரிச்சை.//

    பரீட்சை படிச்சதுக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி கருணாகரசு :)

    ReplyDelete
  21. பாத்துட்டேன் கவி.....
    அன்னைக்கே பார்த்தேன்... ஆனால் அட்டனஸ் போட நேரமின்றி ஓடிவிட்டேன்.... சாரி....

    ReplyDelete
  22. //பாத்துட்டேன் கவி.....
    அன்னைக்கே பார்த்தேன்... ஆனால் அட்டனஸ் போட நேரமின்றி ஓடிவிட்டேன்.... சாரி....//

    அப்படியா... பரவாயில்லை. மீள்வருகைக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)