Sunday, September 20, 2009

ஓம் ஓம் ஓம் !

நவராத்திரி சிறப்பு பதிவு.



சிம்ம வாஹினி காந்த ரூபிணி சத்ய ஜோதிநீ
ஓம் ஓம் ஓம்!
சண்டி காளி நீ கமல வாசினி கர்ம நாசினி
ஓம் ஓம் ஓம்!

நெற்றிக் கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி
நீலியாக வந்து நின்றவளே!
பற்றிக் கொண்டவரின் துயரம் போக்கவே
சூலமேந்தி பகை வென்றவளே!

பகைவர் நடுங்கவே பதினெண் கரங்களில்
படைக்கலம் தாங்கி வந்தவளே!
உலகம் உய்யவே ஊழிக்காற்று போல்
உக்கிர வேகம் கொண்டவளே!

கொடிய அசுரரைக் குத்தி கிழித்து அவர்
உதிரம் உறிஞ்சியே களிப்பவளே!
பணியும் அடியவர் பாவந் தொலையவே
கனிந்த அன்பினை அளிப்பவளே!

அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
அரனுடன் திருநடம் இடுபவளே!
கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
கயிலை நாதனுடன் திகழ்பவளே!

உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!
வெள்ளம் போலப்பொங்கி பெருகும் கருணையினால்
விரைந்து ஓடிவந்து அருள்பவளே!

துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
பாதம் பணிகின்றோம் பூமகளே!!


--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரலில் - நன்றி தாத்தா!

15 comments:

  1. படத்துக்கேத்த பாட்டு; பாட்டுக்கேத்த படம். :-)

    ReplyDelete
  2. பக்கம் நின்று நம்மைக் காப்பாள் எனும் பரிபூரண நம்பிக்கையைத் தரும் பாடல்.

    //அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
    அரனுடன் திருநடம் இடுபவளே!
    கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
    கயிலை நாதனுடன் திகழ்பவளே!//

    அழகு வரிகள்! வாழ்த்துக்கள் கவிநயா!

    ReplyDelete
  3. எதுகை மோனைகளோடு பாட்டு நல்லா வந்திருக்கு கவியக்கா!

    ReplyDelete
  4. //படத்துக்கேத்த பாட்டு; பாட்டுக்கேத்த படம். :-)//

    நன்றி குமரா :)

    ReplyDelete
  5. //அழகு வரிகள்! வாழ்த்துக்கள் கவிநயா!//

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  6. //எதுகை மோனைகளோடு பாட்டு நல்லா வந்திருக்கு கவியக்கா!//

    ரொம்ப நன்றி ஜீவா :)

    ReplyDelete
  7. படமும், அதற்கேற்ற பாடலும் மிக அருமை கவிநயா...

    பெயருக்கேற்ற கவிதை அருவி...

    நல்லா எழுதி இருக்கீங்க கவிநயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. http://www.youtube.com/watch?v=GVDicPWB44w

    a scholarly masterpiece indeed from your pen !
    All the Best.

    subbu rathinam

    ReplyDelete
  9. //படமும், அதற்கேற்ற பாடலும் மிக அருமை கவிநயா...//

    பாடலும் அதற்கேற்ற படமும் :) பாடல் எழுதிட்டுதான் படம் தேடினேன், அதனால சொன்னேன். வேறொண்ணுமில்ல :)

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி கோபி :)

    ReplyDelete
  10. //a scholarly masterpiece indeed from your pen !
    All the Best.//

    ஆசிகளுக்கு நன்றி தாத்தா. எப்போதாவது எனக்கே பிடிக்கிற மாதிரி அமைகிற பாடல்களில் ஒண்ணு.

    //http://www.youtube.com/watch?v=GVDicPWB44w//

    கேட்டேன், மிக அருமை. கேட்டு முடிச்ச பிறகும் ஓடிக்கிட்டே இருந்தது :) மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  11. //உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
    ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!//

    அருமைக்கா....நாமப்பிரியா, நாதப்பிரியா எல்லாம் இதுதான் :)

    ReplyDelete
  12. தாத்தா, நீங்க பாடித் தந்ததை இடுகையில் சேர்த்துட்டேன். மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  13. //அருமைக்கா....நாமப்பிரியா, நாதப்பிரியா எல்லாம் இதுதான் :)//

    மிக்க நன்றி மௌலி. அம்மாவை பார்க்கவேனும் வந்தீங்களே... வழி மறந்து போச்சோன்னு நினைச்சேன் :)

    ReplyDelete
  14. //துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
    தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
    பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
    பாதம் பணிகின்றோம் பூமகளே!//

    தாயே அனைவரையும் காப்பாற்று அம்மா!

    அருமையான பாடல் கவிக்கோ கவிநயா. சுப்பு ஐயாவின் பாடலும் அருமை.

    ReplyDelete
  15. //அருமையான பாடல் கவிக்கோ கவிநயா. சுப்பு ஐயாவின் பாடலும் அருமை.//

    வாங்க கைலாஷி. மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)