Monday, August 10, 2009

விழுங்குதல்...

"கண்ணை மூடிக் கொண்டு
ஒரே மடக்கில் விழுங்கிவிடு"
முதன் முதலாய்
மாத்திரை விழுங்கியபோது
கிடைத்த அறிவுரை.

அன்று தொடங்கி
மாத்திரை மட்டுமன்றி
மற்றதும் விழுங்கக் கற்றாயிற்று.
கோபங்களை, தாபங்களை
அழுகைகளை, அவமானங்களை
இப்படி...

அதிகமாய் விழுங்குவதென்னவோ
வார்த்தைகளைத்தான்.

கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்
தாக்கிக் காயப்படுத்துகின்ற
பிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல
பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்
விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்...

சப்தமில்லாமல்,
வேதனை காட்டாமல்,
முகஞ் சுளிக்காமல்,
ஊசிகளை விழுங்கும்
வாழைப்பழம் போல்...


--கவிநயா

25 comments:

  1. கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்
    தாக்கிக் காயப்படுத்துகின்ற
    பிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல
    பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
    என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்
    விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்...

    சப்தமில்லாமல்,
    வேதனை காட்டாமல்,
    முகஞ் சுளிக்காமல்,
    ஊசிகளை விழுங்கும்
    வாழைப்பழம் போல்... ]]


    அருமை - ஆரோக்கியம்.

    ReplyDelete
  2. //பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
    என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான் /

    இங்கேதான் இடறிவிடக் கூடாதென்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ஒரே மடக்கில் விழுங்குவது சிரமமானாலும் பழகிப் போகிறது எல்லோருக்கும்.

    கவிதை நன்று கவிநயா.

    ReplyDelete
  3. /கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்
    தாக்கிக் காயப்படுத்துகின்ற
    பிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல
    பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
    என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்
    விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்...

    சப்தமில்லாமல்,
    வேதனை காட்டாமல்,
    முகஞ் சுளிக்காமல்,
    ஊசிகளை விழுங்கும்
    வாழைப்பழம் போல்... /

    அற்புதம்

    ReplyDelete
  4. #கவிஞர் கவிநயாவிற்கு,

    ப்பா... கவிதை பிரமாதம் கவிநயா!

    #தோழி கவிநயாவிற்கு

    எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டே இருக்காதீர்கள். அது ஆரோக்கியமானது அல்ல. சில விஷயங்களை உமிழ்வது தான் ஆரோக்கியமானது.

    ReplyDelete
  5. அதிகமாய் விழுங்குவதென்னவோ
    வார்த்தைகளைத்தான்

    உண்மை! உண்மை! உண்மையைத்தவிர வேறுஒன்றும் இல்லை!

    ReplyDelete
  6. உங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;))

    ReplyDelete
  7. கவிநயா,

    வார்த்தைகளை விழுங்குவதற்கு எத்தனை தியாகம் வேண்டும்.
    நாவின் நுனியில் ஆயுதமாகத் தாக்கத் தயாராக இருக்கும் வார்த்தைகளை உள்ளே ஜீரணிக்கக் கற்றவிதம் என்னவோ!!1
    அருமையான எழுத்தாக்கம்.

    ReplyDelete
  8. எப்பவும் கவிதைனா ஒரு கிலோ மீட்டர் ஓடுவேன்.. ஆனா உங்க கவிதைய படிச்சதும், ரொம்ப புடிச்சிருச்சு...

    உள்ளதை உள்ளபடி அப்படியே நயம்பட சொல்லியிருக்கீங்க...

    இனிமே அடிக்கடி வர்ரதுன்னு முடிவு பண்ணிட்டேன்....

    ReplyDelete
  9. //அருமை - ஆரோக்கியம்.//

    அப்படியா சொல்றீங்க? நன்றி ஜமால் :)

    ReplyDelete
  10. //ஒரே மடக்கில் விழுங்குவது சிரமமானாலும் பழகிப் போகிறது எல்லோருக்கும்.//

    ஆமாம், ரொம்பவே சிரமம்தான். மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  11. //அற்புதம்//

    மிக்க நன்றி திகழ்மிளிர் :)

    ReplyDelete
  12. //ப்பா... கவிதை பிரமாதம் கவிநயா!//

    ரசிகர் ரமேஷுக்கு நன்றி!

    //எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டே இருக்காதீர்கள். அது ஆரோக்கியமானது அல்ல. சில விஷயங்களை உமிழ்வது தான் ஆரோக்கியமானது.//

    உண்மைதான். பழகிக்கிட்டிருக்கேன்.... நண்பர் ரமேஷுக்கு மிக்க நன்றி!

    ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ரமேஷ் :)

    ReplyDelete
  13. //உண்மை! உண்மை! உண்மையைத்தவிர வேறுஒன்றும் இல்லை!//

    வாங்க தி.ரா.ச. ஐயா. நீங்க ஆமோதிக்கும் வேகத்தை பார்த்தால் என் அனுபவம் உங்களுக்கும் இருக்கும் போல :) இனி வரும் காலத்திலேனும் வார்த்தைகளை விழுங்கும் சந்தர்ப்பங்கள் குறையட்டும்.

    உங்களையும் வெகு நாட்கள் கழித்து பாக்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  14. //உங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;))//

    அச்சோ, கோபி! கவிதை அவ்ளோ மோசமா? :) ஹ்ம்... அப்படி இருந்தும் விழுங்கினதுக்கு நன்றி தம்பீ :)

    ReplyDelete
  15. //நாவின் நுனியில் ஆயுதமாகத் தாக்கத் தயாராக இருக்கும் வார்த்தைகளை உள்ளே ஜீரணிக்கக் கற்றவிதம் என்னவோ!!//

    ரொம்ப கஷ்டமான பாடம்தானம்மா. திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கணும்...

    //அருமையான எழுத்தாக்கம்.//

    மிக்க நன்றி வல்லிம்மா.

    ReplyDelete
  16. //இனிமே அடிக்கடி வர்ரதுன்னு முடிவு பண்ணிட்டேன்....//

    ரொம்ப மகிழ்ச்சி ஸ்வர்ணரேக்கா :) இதே போல எல்லா கவிதையும் உங்களுக்கு பிடிக்கணுமேன்னு கவலை வந்திருச்சு :) முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. /*அதிகமாய் விழுங்குவதென்னவோ
    வார்த்தைகளைத்தான்.
    */

    /*
    பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
    என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்
    விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்
    */
    அருமை

    ReplyDelete
  18. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)

    ReplyDelete
  19. //அருமை//

    மிக்க நன்றி அமுதா :)

    ReplyDelete
  20. //கபீரன்பன் said...
    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)//

    அப்படியா... ரொம்ம்ம்ம்ப நன்றி உங்களுக்கும் :)

    ReplyDelete
  21. //கபீரன்பன் said...
    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)//

    அப்படியா... ரொம்ம்ம்ம்ப நன்றி உங்களுக்கும் :)

    ReplyDelete
  22. //Excellent article.//

    மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

    ReplyDelete
  23. அருமையான படைப்பு!
    :)

    ReplyDelete
  24. வாருங்கள் மது கிருஷ்ணா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)