Sunday, July 26, 2009

கற்பக கணபதியே!



கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!

ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!

கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!

உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!

வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!


--கவிநயா

பிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.

சுப்பு தாத்தா இந்த பாடலை  மீண்டும் அழகுற கானடா ராகத்தில் அமைத்துத் தந்திருக்கிறார்.  மிகவும் நன்றி தாத்தா!

21 comments:

  1. படிக்க படிக்க
    பிள்ளையாரை
    வணங்கியது போன்ற
    உணர்வு

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தாத்தா என என்னை அன்புடன் அழைக்கும் கவிதாயினி கவி நயா அவர்கள்
    பிள்ளையார்பட்டி பிள்ளையாரைப் போற்றிப் பாடல் இது.

    என்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.
    http://vazhvuneri.blogspot.com


    அவர்களுடன் சேர்ந்து அந்த
    ஆறுமுகத்தோன் அண்ணனை
    துதித்து எல்லா நலமும் பெறவும்.

    subbu thatha.

    ReplyDelete
  3. //எம்மை இமையென காப்பவனே!
    குறைகளை தீர்ப்பவனே
    எங்கள் சுமைகளை ஏற்பவனே!//

    குரல் வளம் மிக்கவர்கள் பாடுகையில்
    தனியொரு உணர்வினைத் தோற்றுவிக்கும் என்பது திண்ணம்.
    அந்த உணர்வு காப்பது, திர்ப்பது, ஏற்பது ஆகிய எதிர்பார்ப்புகளும் நிறைவேறி விட்ட நிம்மதியையும் ஏற்படுத்தும்.

    எளிமையாக எழுதுவது கடினமான காரியம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

    நன்றி...

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு..;)

    நான் இன்னிக்கு தான் விநாயகர் சதுர்த்தி போலன்னு நினைச்சிட்டேன். நல்லவேளை டிஸ்கி போட்டிங்க.

    ம்ம்ம் இங்க வந்ததில் இருந்து ஒரு மண்ணும் தெரிய மாட்டேன்கிது. ;))

    ReplyDelete
  6. //படிக்க படிக்க
    பிள்ளையாரை
    வணங்கியது போன்ற
    உணர்வு//

    நன்றி திகழ்மிளிர்!

    ReplyDelete
  7. அருமை.

    உங்களுடன் "சுவாரசிய பதிவு" விருதைப் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
    http://nandhu-yazh.blogspot.com/2009/07/blog-post_26.html

    ReplyDelete
  8. //என்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.
    http://vazhvuneri.blogspot.com//

    எனக்கு தோன்றிய மெட்டிலேயே அமைந்தது குறித்து சந்தோஷமா இருக்கு தாத்தா. உங்க பதிவில் விநாயகரைப் பற்றி அவர் மீதான பல பாடல்களையும் எடுத்துக் காட்டி அருமையாகப் பதிவிட்டிருக்கிறீங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //அருமை கவிக்கா...//

    நன்றி மௌலி!

    ReplyDelete
  10. //எளிமையாக எழுதுவது கடினமான காரியம். வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஜீவி ஐயா!

    ReplyDelete
  11. //கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.//

    முதல் வருகைக்கு நன்றி ஜகதீஸ்வரன். உங்க தளத்தையும் விரைவிலேயே வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. //நல்லாயிருக்கு..;)//

    நன்றி கோபி!

    //ம்ம்ம் இங்க வந்ததில் இருந்து ஒரு மண்ணும் தெரிய மாட்டேன்கிது. ;))//

    எனக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான் :) இப்ப வலை உலகம்தான் கொஞ்சம் கை கொடுக்குது. உங்களை குழப்பினதுக்கு ஸாரிப்பா :)

    ReplyDelete
  13. //உங்களுடன் "சுவாரசிய பதிவு" விருதைப் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
    http://nandhu-yazh.blogspot.com/2009/07/blog-post_26.html//

    ஆஹா, அன்புக்கு மிகவும் நன்றி அமுதா. விரைவில் ஆவன செய்கிறேன் :)

    ReplyDelete
  14. சொந்த ஊரில் இருக்கையில் உங்களது இந்தப் பாடலைப் படிக்க நேர்ந்த நேரம், எங்களுக்கும் வாய்த்தது பிள்ளையார் பட்டி கற்பகக் கணபதியின் தரிசனம்.

    //ஆறடி உயரத்திலே
    அதி யற்புத வடிவத்திலே//
    பார்த்ததும் சிலிர்ந்தோம்.

    நன்றி கவிநயா!

    ReplyDelete
  15. படமும், பாடலும் அற்புதம் கவிதாயினி

    ReplyDelete
  16. //சொந்த ஊரில் இருக்கையில் உங்களது இந்தப் பாடலைப் படிக்க நேர்ந்த நேரம், எங்களுக்கும் வாய்த்தது பிள்ளையார் பட்டி கற்பகக் கணபதியின் தரிசனம்.//

    மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி :) வருகைக்கு நன்றியும்.

    ReplyDelete
  17. //படமும், பாடலும் அற்புதம் கவிதாயினி//

    மிக்க நன்றி கைலாஷி. ரொம்ப நாளுக்கப்புறம் உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியும் :)

    ReplyDelete
  18. அழகிய நடையிலே

    அற்புதமான வரிகள்

    வாழ்த்துக்கள்

    "பக்தி யுகம் "

    ReplyDelete
  19. மிகவும் நன்றி, பக்தி யுகம். உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  20. சுப்பு தாத்தா, நீங்க மறுபடியும் கானடா ராகத்தில் பாடித் தந்ததை இடுகையில் சேர்த்திருக்கேன். மிகவும் நன்றி தாத்தா! பேரனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)