Friday, May 22, 2009

என்னைக் கொஞ்சம் கவனிங்களேன்!

வணக்கம். நல்லா இருக்கீங்களா? ஹ்ம்... யாருடா இதுன்னு நீங்க புருவம் ஒசத்தி யோசிக்கிறது புரியுதுங்க. நான் வேற யாருமில்லை, நம்மூர்ல அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைஞ்சிருக்கிற குப்பைதான்! என்னைய வைக்கிற எடத்துல வச்சாதானே நீங்கள்லாம் நல்லா இருக்க முடியும்? அதுக்குதான் அந்தக் கேள்வி. நீங்க கூட "போட்டு வாங்கறது"ன்னு சொல்வீங்களே, அந்த ரகம்!

நம்ம ஊர்க்காரங்க அதிபுத்திசாலிங்கன்னு நமக்கெல்லாம் ரொம்பத்தான் பெருமை! ஆனா அதுக்குத் தகுந்தாப்ல நடந்துக்கதான் காணோம்.

மேல் நாடுகள்ல இப்பதான் புதுசா கண்டுபிடிச்ச மாதிரி "Reuse and Recycle" னு சொல்லி பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்காங்களே! ஆனா, நம்ம ஊர்லதான் ஆரம்பத்துல இருந்தே சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கிற வகையில இப்படில்லாம் பெயர் வைக்காமலேயே எல்லாத்தையும் reuse-ம், recycle-ம், பண்ணிக்கிட்டிருந்தீங்க.

காய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க, இதுக்கெல்லாம் கையோட பையோ, கூடையோ எடுத்துக்கிட்டு போவீங்களே, நினைவிருக்கா? திரும்பத் திரும்ப பயன்படுத்தற பாத்திரம் பண்டங்கள், விருந்தாளி வந்தா வாழை இலையில சாப்பாடு, இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களை இப்ப மறந்துட்டீங்க! அப்பல்லாம் பூ வாங்கினாக் கூட, வாழை இலையில வச்சு நார்ல கட்டித்தான் தருவாங்க. இப்ப? எங்க பாத்தாலும் "carry bag"-ன் ஆட்சிதான்.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா, எதை எதைத்தான் மேல் நாட்டுக்காரங்ககிட்ட இருந்து காப்பி அடிக்கிறதுன்னு வரைமுறையே இல்லாம போச்சு. எங்கே போனாலும் ப்ளாஸ்டிக் டம்ளர்களும், தட்டுகளும், பைகளும், மற்ற குப்பைகளும் ரோடெல்லாம் இறைஞ்சு கிடக்கு.

குறைஞ்சது என்னை எனக்குரிய இடத்திலாவது வைங்க. குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துங்க. பல சமயங்கள்ல என்னை சரியான இடத்துல போடணும்னு நினைக்கிறவங்க கூட, குப்பைத் தொட்டி இல்லாததால, கண்ட இடத்துலதான் எறியறாங்க.

சில சின்ன கிராமங்கள்ல கூட "மக்கும் குப்பை", "மக்காத குப்பை"ன்னு போட்டு, தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டிகள் இருக்கு. மக்கள் அப்படில்லாம் பிரிச்சு போடறாங்களோ இல்லையோ, அப்படி ஒரு இடமாச்சும் இருக்கு. ஆனா சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல நிறைய பகுதிகள்ல அதுகூட இல்ல. பெரும்பாலும் காலி மனைகள்தான் குப்பைத் தொட்டிகளா இருக்கு. அந்த இடத்துல வீடு வந்தாச்சுன்னா அதுவும் போச்சு.

மேல் நாட்டிலிருந்து பல விஷயங்களையும் காப்பி அடிக்கிறவங்க, அவங்க குட்டிப் பிள்ளைங்க கூட குப்பைகளை உரிய இடத்துல எப்படி போடறாங்கன்னு மட்டும் ஏன் இன்னும் கத்துக்கல? அங்க, ஒரே ஒரு முறை மட்டும் பயன்படற "disposable" நிறைய பயன்படுத்தினாலும், அதை மாத்தற விதமா இப்ப பல முறைகளை கையாள்றாங்க; அப்படி இயலாத சமயம் அந்த பொருட்களை முறையா "recycle" பண்றாங்க. இந்த மாதிரி நல்ல விஷயங்களையும் நீங்க கத்துக்கலாமே?

பெரிய பெரிய விஷயமெல்லாம் செய்ய வேண்டியதுதான். ஆனா இதைப் போல அடிப்படை விஷயங்கள் முக்கியமில்லையா? இதைக் கவனிப்பார் யார்???

20 comments:

  1. அடிப்படை விடயங்கள் சரியானால் ...

    முதல்ல ஆகட்டும் ...

    ReplyDelete
  2. //அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைஞ்சிருக்கிற குப்பை//
    யாவும் சேர்ந்து இப்படிக் குரல் கொடுத்து எழுப்பட்டும் எல்லோரையும்.

    மிக நல்ல பதிவு கவிநயா.

    ReplyDelete
  3. சரிதான், புரியுது. ஆனா நான் எல்லாம் இதுக்காக மெனக்கிடறதுதான் இல்லை.:(

    ReplyDelete
  4. //அப்பல்லாம் பூ வாங்கினாக் கூட, வாழை இலையில வச்சு நார்ல கட்டித்தான் தருவாங்க. இப்ப? எங்க பாத்தாலும் "carry bag"-ன் ஆட்சிதான்.//

    இப்போவும் பிடிவாதம் பிடிக்கிறது உண்டு. வாழைநாரில் கட்டிய பூ தான் வேணும்னும், வாழை இலையில் கட்டித் தரச் சொல்லியும். அதுக்குன்னே தெரிஞ்ச சில பூக்காரங்க என் தலையைக் கண்டதும் வேறே வழியில்லாமல் தருவாங்க. ஆனாலும் ப்ளாஸ்டிக்கின் ஆட்சிதான்! :(((((( சொல்லிப் பார்த்தாச்சு.

    அப்புறம் குப்பைத் தொட்டி இல்லாமல்தான் குப்பையைப் போடறாங்கனு சொல்றீங்க. அப்படி எல்லாம் இல்லை. குப்பைத் தொட்டி இருந்தாலும் குப்பையைப் பக்கத்து வீட்டு வாசலிலே கொட்டுவது தான் சுகம். அது இன்னும் மாறலை. :(((((((((((((((

    ReplyDelete
  5. ஒவ்வொரு தரமும் விடுமுறைக்கு இந்தியா போகையில் அங்கங்கே தெருவில் குமிஞ்சு கிடக்கும் குப்பையை பார்த்து வருத்தப்படுவேன். நம்ம மக்கள் இப்படி செய்யறாங்களேன்னு. அழகா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  6. என்னக்கா ஆச்சு? ஊருக்குப் போய் வந்தவுடன் இப்படி ஒரு பதிவு? இது சென்னையில் அதிகமா இல்லை ஊர்ப்பக்கமா? இந்தக் குப்பைகளோடே பான் பராக் பழக்கத்தையும் சேர்த்துக்கோங்க! :)) கொடுமை!

    //அப்பல்லாம் பூ வாங்கினாக் கூட, வாழை இலையில வச்சு நார்ல கட்டித்தான் தருவாங்க//

    யாருக்கோ பூ வாங்கிட்டு போறோம்-ன்னு ஊருக்கே தெரிஞ்சிரும்! :)))

    ReplyDelete
  7. வாங்க ஜமால்.

    //முதல்ல ஆகட்டும் ...//

    ஆமாம், ஆக வேண்டும்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வாங்க மௌலி.

    //ஆனா நான் எல்லாம் இதுக்காக மெனக்கிடறதுதான் இல்லை.:(//

    அச்சோ, நீங்களே இப்படி சொன்னா எப்படி? ஒவ்வொருத்தரும் மனசு வச்சாதான் மாற்றம் தெரியும். அது சரி... பெண்களூரூம் இப்படித்தானா? :)

    ReplyDelete
  10. வாங்க கீதாம்மா. உடல்நலம் பரவாயில்லையா இப்போ?

    //இப்போவும் பிடிவாதம் பிடிக்கிறது உண்டு. வாழைநாரில் கட்டிய பூ தான் வேணும்னும், வாழை இலையில் கட்டித் தரச் சொல்லியும்.//

    அப்படியா. கேட்கவே சந்தோஷமா இருக்கே :)

    //குப்பைத் தொட்டி இருந்தாலும் குப்பையைப் பக்கத்து வீட்டு வாசலிலே கொட்டுவது தான் சுகம். அது இன்னும் மாறலை. :(((((((((((((((//

    என்னிக்காவது மாறும்னு நம்புவோம். வேறென்ன செய்ய?

    வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  11. வாங்க மீனா.

    //ஒவ்வொரு தரமும் விடுமுறைக்கு இந்தியா போகையில் அங்கங்கே தெருவில் குமிஞ்சு கிடக்கும் குப்பையை பார்த்து வருத்தப்படுவேன்.//

    ஆமாம், அந்த பாதிப்புல எழுதினதுதான்...

    வருகைக்கு நன்றி மீனா.

    ReplyDelete
  12. வாங்க கண்ணா.

    //என்னக்கா ஆச்சு? ஊருக்குப் போய் வந்தவுடன் இப்படி ஒரு பதிவு? இது சென்னையில் அதிகமா இல்லை ஊர்ப்பக்கமா?//

    ஊருக்குப் போய் வந்ததாலதான் இந்த பதிவு :)ஊர்ப்பக்கமே பரவாயில்லைன்னு இருக்கு...

    //யாருக்கோ பூ வாங்கிட்டு போறோம்-ன்னு ஊருக்கே தெரிஞ்சிரும்! :)))//

    :)))

    வருகைக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  13. ஒய் திஸ் பதிவு...ஐ டவுட்டு..பட்டு வாட் வி டூ!???

    \\ஆனா இதைப் போல அடிப்படை விஷயங்கள் முக்கியமில்லையா? இதைக் கவனிப்பார் யார்???
    \\

    குட் கெஸ்டின் பட் நோ விடை..சாரி ;))))

    ReplyDelete
  14. வாங்க கோபி. என்ன இப்படி ஒரு பின்னூட்டம்? :)

    //ஒய் திஸ் பதிவு...ஐ டவுட்டு..பட்டு வாட் வி டூ!???//

    ஊரைப் பாத்து நொந்து போய்தான் :(

    //குட் கெஸ்டின் பட் நோ விடை..சாரி ;))))//

    அது சரி... விடை யாருக்காச்சும் தெரியும்னு நம்புவோம்.

    வருகைக்கு நன்றி கோபி.

    ReplyDelete
  15. சிந்திக்க வைத்த பதிவு. எத்தனை பெயரால் தங்களைக் குப்பையின் இடத்தில் வைத்து கதை சொல்ல முடியும். கற்பனை அபாரம் கவிநயா.

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  17. வாங்க ஜெஸ்வந்தி. உங்க பெயர் அழகா இருக்கு :) முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாங்க கவின். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  19. வாங்க முத்துலெட்சுமி. மிக்க நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)