Monday, May 18, 2009

அம்மாவின் கல்யாணம், ஆனந்த வைபோகம்!


நலந்தானே?

வந்தாச்! ஒரு மாசம் நம்மூர் வெயில் வீணாகாம சுத்திட்டு!

புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைப் பயணம், சில மூத்த பதிவர்/அறிஞர்/களின் தரிசனம் கிடைச்சது, இதெல்லாம் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

எல்லாத்துக்கும் மேலா, என் அம்மாவுடைய கல்யாணம் பார்க்கக் கிடைச்சது! நான் மதுரை போன சமயம் சித்திரைத் திருவிழா நடந்துக்கிட்டிருந்தது. நமக்கெல்லாம் மீனாக்ஷி திருக்கல்யாணம் பார்க்கக் கிடைக்குமா என்ன, அப்படிங்கிற பெருமூச்சுதான் மனசுக்குள்ள. அது அவளுக்கு கேட்டிருச்சு போல. கொஞ்சமும் எதிர்பாரா விதமா திருக்கல்யாணம் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு தானா வந்தது. அவ்வளவு பெரிய மேடையை முழுக்க முழுக்கப் பூவாலேயே அலங்கரிச்சிருந்தாங்க. திருமணத்துக்கு வருகை தந்த அவளோட அண்ணன், தம்பதி சமேதரா திருப்பரங்குன்றத்திலிருந்து வந்திருந்த குமரன், மற்றும் பொண்ணு, மாப்பிள்ளை அலங்காரங்களும், பார்க்கப் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி! பொண்ணுங்க ஒவ்வொருத்தருடைய கூந்தல் அலங்காரத்தையும் பார்க்கணுமே :)

இது 'உள்ளேன் ஐயா' பதிவுதான். வலையில முழுசா சிக்கறதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்னு நினைக்கிறேன். அன்பர்கள்/நண்பர்கள் பதிவெல்லாம் உடனே படிக்கலைன்னா கோச்சுக்காதீங்க! மெதுவா வர்றேன்...

அன்புடன்
கவிநயா

20 comments:

  1. ஹைய்யோ..... கொஞ்சம் பொறாமையா இருக்கு!!!!!

    சீக்கிரம் விரிவா எழுதுங்க.

    வரவரக்கூட்டமுன்னாவே பயமா இருக்கு. எப்படி அந்தத் தள்ளுமுள்ளுலே
    போய்ப் பார்த்தீங்க??????

    ம்ம்ம்..சொல்லமறந்துட்டேனே......

    நல்வரவு.

    ReplyDelete
  2. வாங்க அக்கா வாங்க வாங்க.

    ReplyDelete
  3. வலையில முழுசா சிக்கறதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்னு நினைக்கிறேன்.//
    spelling mistake!
    சி க்கறதுக்கு ri is missing!
    :-))

    ReplyDelete
  4. வாங்க வாங்க கவிநயா:)! தரிசன மற்றும் பயண அனுபவங்கள் எல்லாம் படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

    //பொண்ணுங்க ஒவ்வொருத்தருடைய கூந்தல் அலங்காரத்தையும் பார்க்கணுமே :)//

    'பின்னல்' என ரசித்துக் கவி படைத்த உங்கள் கண்களுக்கு அந்த அலங்காரப் பின்னல்கள் தப்பாதுதான்:)!

    ReplyDelete
  5. யக்கா வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சே! :)

    //திருமணத்துக்கு வருகை தந்த அவளோட அண்ணன்//

    ஓ...நானும் அங்கிட்டு வந்திருந்தேனாக்கா? :))

    சரி சரி, சட்டு பொட்டு-ன்னு சூட்கேசை unpack பண்ணி, அந்த அதிரசம், தேன்குழல், மிளகுவடை எல்லாம் நியூயார்க்-க்கு பார்சல் அனுப்பிட்டு, அப்புறம் மெள்ளமா பதிவு போட்டா போதும்-க்கா! :)

    ReplyDelete
  6. வாங்க... வரவு நல்வரவாகுக..
    பிறந்த நாடு வந்து நிறைய புண்ணியம் சேர்த்துக்கிட்டீங்க போலிருக்கு..
    பார்க்க வேண்டிய 'பெண்டிங்' கோப்புகள் நிறைய இருக்கு போலிருக்கு.. நிதானமா பார்த்து முடிங்க..

    ReplyDelete
  7. வருக..வருக..;)))

    விரைவில் பதிவுகளை தருக..தருக ;))

    ReplyDelete
  8. வாங்க துளசிம்மா.

    உண்மையில் இந்த பதிவோட என் 'பயணக் கட்டுரை'யை முடிச்சிக்கலாம்னு பார்த்தேன் :) நீங்கதான் அதுலல்லாம் பெஸ்ட்டு!

    வருகைக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  9. நல்வரவு குமரா.

    பலமான வரவேற்புக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  10. வாங்க திவா.

    வலையில சிக்கினப்புறம் எங்க சிரிக்கிறது? :)

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ராமலக்ஷ்மி.

    நான் பொண்ணுங்கன்னு சொன்னது கல்யாண மேடையில் இருந்த தெய்வானை, சோமாஸ்கந்தருடன் எழுந்தருளிய அம்பிகை, அப்புறம் கல்யாணப் பொண்ணு, இவங்களதான்... :) நீங்க சரியான புரிதல்லதான் எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஆனாலும் விளக்கறதுக்கு ஒரு வாய்ப்பா எடுத்துகிட்டேன் :)

    வருகைக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  12. வருக கண்ணா.

    ஆகா, நீங்க இல்லாமயா? :)

    நீங்க குடுத்திருக்கிற லிஸ்டு சூப்பர். இருந்தா இங்கிட்டு கொஞ்சம் அனுப்பி வைங்க :)

    ReplyDelete
  13. வாங்க ஜீவி ஐயா.

    ஆமாம், நிறைய கோவில் போயாச்சு இந்த முறை :) படிக்கிறதுக்கா... அது இருக்கு எக்கச்சக்கமா ... :(

    வருகைக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  14. வாங்க கோபி :)

    உங்க ஆவல் கண்டு மிக்க மகிழ்ச்சி :)

    வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  15. நல்வரவு நாகேந்திர பாரதி.

    நீங்க சொல்வது உண்மைதான் :)

    முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. வாங்க கவிநயா. ஊர் எப்படி இருந்தது. சீக்கிரம் உங்க பயணத்த பத்தி விரிவா எழுதுங்க..

    ReplyDelete
  17. அட நாகு. உங்க காத்து இந்தப் பக்கம் கூட அடிக்குதே :)

    வருகைக்கு நன்றி நட்சத்திரப் பதிவரே.

    ReplyDelete
  18. புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைப் பயணம், சில மூத்த பதிவர்/அறிஞர்/களின் தரிசனம் கிடைச்சது, இதெல்லாம் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.
    அம்மாவின் கல்யாணம், ஆனந்த வைபோகம்!"//

    அருமையான வருகைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)