Sunday, April 5, 2009

பச்சைக் கிளியிடம் பழகுபவள்!

அன்னை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகக் கொண்டாட்டம் இங்கெல்லாம் நடந்துகிட்டிருக்கு -

அம்மன் பாட்டு
மதுரையம்பதி
மதுரை மாநகரம்
மாதவிப்பந்தல்

இப்போ இங்கேயும்... :)




அங்கயற் கண்ணியே அருமருந்தே
பங்கய வடிவே மீனாட்சி!
திங்களும் நாணிடும் மதிமுகத்தவளே
பொங்கிடும் கருணைக்கு நீ சாட்சி!

பச்சைக் கிளியிடம் பழகுபவள் - நம்
இச்சைகள் தீர்க்கும் தாயுமவள்!
பித்தனை மணந்த பிச்சியவள் - அந்த
சொக்கனிடம் மனம் சொக்கியவள்!

கடம்பவனத்தினில் வசிப்பவளே - கடும்
வினை களையும் வேரறுப்பவளே!
கொடிமலர் எழிலுடன் திகழ்பவளே - பூந்
திருவடி பணிந்திட மகிழ்பவளே!

வைரங்கள் முடிதனில் ஜொலித்திடவே
மாணிக்கம் சிலம்பினில் ஒலித்திடவே
'ஓம் ஓம் ஓம்' என்று ஜெபித்திடவே
உள்ளத்தில் உன்னொளி உதித்திடவே!

அம்மா உன்னைத் தேடிவந்தோம்
உன்னருள் வேண்டி ஓடிவந்தோம்
சரணம் நீயென அடிபணிந்தோம்
வரணும் நீயென வணங்கி நின்றோம்!


--கவிநயா

ஒரு அறிவிப்பு: இந்த வாரத்திற்கு பிறகு இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகப் பக்கம் வர்றது கஷ்டம். ஆனா அதுக்குன்னு ரொம்ப சந்தோஷப் படவேணாம். உங்களோட இந்த நிம்மதி தற்காலிகமானதுதான், அதைக் கெடுக்க மறுபடியும் வருவேன் என்று சொல்லிக் கொண்டு வணக்கம் கூறி விடை பெறுவது...

...நாந்தான்!



22 comments:

  1. மரகத மீனாட்சி பற்றிய கவிதை நல்லா இருக்கு, நாங்களும் கிறுக்கறோமில்ல, மீனாளைப் பற்றி! அதெல்லாம் கண்ணிலே படலையாக்கும்? :)))))))))http://marudhai.blogspot.com/2009/04/4.html

    ReplyDelete
  2. மீ த ஃபர்ஷ்டு?????

    ReplyDelete
  3. வாங்க கீதாம்மா. நீங்கதான் ஃபர்ஷ்டு :)

    உங்களோட 'கிறுக்கலை' (நான் சொல்லல்லப்பா :) நம்பிக்கையில பார்த்தேன், அப்புறம் உங்க வலைப்பூவூக்கு வந்து பார்த்தேன், அங்கே இல்லை; பிறகு வேற எங்கே போட்டிருக்கீங்கன்னு தேட நேரமில்லாம போயிடுச்சு. மன்னிச்சுக்கோங்க. இப்ப சேர்த்துட்டேன் பாருங்க :)

    கவிதை ரசிச்சதுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  4. //பச்சைக் கிளியிடம் பழகுபவள் - நம்
    இச்சைகள் தீர்க்கும் தாயுமவள்
    பித்தனை மணந்த பிச்சியவள் - அந்த
    சொக்கனிடம் மனம் சொக்கியவள்!//

    பச்சைக் கிளியிடம் பழகுபவளை நீங்கள் பாடியிருக்கும் விதத்தில் நாங்களும் மனம் சொக்கித்தான் போனோம்.

    வாழ்த்துக்கள் கவிநயா, சீக்கிரமே சிறுவிடுப்பு முடிந்து திரும்பி வரவும், மறுபடி எம்மை சந்தோஷப் படுத்த பதிவுகள் தரவும்!

    பை:)!

    ReplyDelete
  5. //அம்மா உன்னைத் தேடிவந்தோம்
    உன்னருள் வேண்டி ஓடிவந்தோம்
    சரணம் நீயென அடிபணிந்தோம்//

    ரிப்பீட்டே!!

    மீனாக்ஷி, நானும் ஒரு தரம் ரிப்பீட்டிக்கறேன், ஏதோ கவனிச்சுக்கோம்மா! :-)

    ReplyDelete
  6. அருமை கவிக்கா.

    இலவச விளம்பரத்துக்கும் நன்றிகள் பல :-)

    ReplyDelete
  7. ஆகா..அக்கா!! நீங்கள் கவிதையா!! அருமை..அதுவும் கலர் கூட பச்சை ;))

    \\கவிநயா
    ஒரு அறிவிப்பு:\\

    தேர்தல் நேரத்தில் வரும் எந்த அறிவிப்பையும் நாங்க நம்புவது இல்லை..;))

    ReplyDelete
  8. //பச்சைக் கிளியிடம் பழகுபவளை நீங்கள் பாடியிருக்கும் விதத்தில் நாங்களும் மனம் சொக்கித்தான் போனோம்.//

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    //மறுபடி எம்மை சந்தோஷப் படுத்த பதிவுகள் தரவும்!//

    உச்சியைக் குளிர வச்சதுக்கு மீண்டும் நன்றி :)

    ReplyDelete
  9. வாங்க மௌலி.

    //மீனாக்ஷி, நானும் ஒரு தரம் ரிப்பீட்டிக்கறேன், ஏதோ கவனிச்சுக்கோம்மா! :-)//

    சரியாப் போச்சு போங்க. சொந்த ஊர்க்காரங்களை கவனிக்காம விட்டிருவாளா என்ன? :)

    //அருமை கவிக்கா.//

    மிக்க நன்றி.

    //இலவச விளம்பரத்துக்கும் நன்றிகள் பல :-)//

    எவ்வளவு அருமையான தகவல்கள் தர்றீங்க, ஏதோ என்னாலானது.

    ReplyDelete
  10. வாங்க கோபி.

    //ஆகா..அக்கா!! நீங்கள் கவிதையா!! அருமை..//

    கவிதைதானேப்பா தெரிஞ்சது :) மிக்க நன்றி.

    //அதுவும் கலர் கூட பச்சை ;)//

    ஆமாம், மீனாள் கலர் :)

    //தேர்தல் நேரத்தில் வரும் எந்த அறிவிப்பையும் நாங்க நம்புவது இல்லை..;))//

    இது தேர்தல் சம்பந்தப் படாதது; அதனால நம்பலாம் :)

    ReplyDelete
  11. //ஒரு அறிவிப்பு: இந்த வாரத்திற்கு பிறகு இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகப் பக்கம் வர்றது கஷ்டம்//

    தெரியுமே! அதுக்காக நாங்க சும்மா இருக்க மாட்டோம்! அக்கா பேரைச் சொல்லி, அடிக்கிற கும்மியை அடிச்சிக்கிட்டுத் தான் இருப்போம்! :)

    மாதவிப் பந்தல் சுட்டியா? அடியேன் ஓரிரு பதிவு தானேக்கா போட்டேன்! தினப்படி எல்லாம் இல்லையே!

    ReplyDelete
  12. நல்வரவு கண்ணா.

    //தெரியுமே! அதுக்காக நாங்க சும்மா இருக்க மாட்டோம்! அக்கா பேரைச் சொல்லி, அடிக்கிற கும்மியை அடிச்சிக்கிட்டுத் தான் இருப்போம்! :)//

    அடிங்க, அடிங்க... என்னை அடிக்காம இருக்க வரை சரி :)

    //மாதவிப் பந்தல் சுட்டியா? அடியேன் ஓரிரு பதிவு தானேக்கா போட்டேன்! தினப்படி எல்லாம் இல்லையே!//

    அதனால என்ன. மீனாட்சி பதிவு, அதுவும் அறிவியலோட கலந்து உங்க ஷ்டைல்ல சூப்பரா எழுதியிருக்கீங்களே :) நானுமே ஒரு பதிவு மட்டும்தான்.

    வருகைக்கு நன்றி கண்ணா. (கவிதை படிச்சீங்களா? :)

    ReplyDelete
  13. இவள் சிலம்பில் மாணிக்கங்களா? முத்துகள் என்றல்லவா நினைத்தேன். :-)

    ஊருக்கு பத்திரமா போயிட்டு வாங்க. எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க.

    ReplyDelete
  14. //இவள் சிலம்பில் மாணிக்கங்களா? முத்துகள் என்றல்லவா நினைத்தேன். :-)//

    அது சரி... நீங்க குமரன் என்றல்லவா நான் நினைத்தேன்? :)

    //ஊருக்கு பத்திரமா போயிட்டு வாங்க. எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க.//

    அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி குமரா :)

    ReplyDelete
  15. http://www.youtube.com/watch?v=YAuc3CfBAUo


    அன்னையில் கால் கொலுசு தண்டையில் முத்துப்பரல்களா அல்லது மாணிக்கபரல்களா ?
    அங்கே மதுரையைச் சர்ர்ந்தவர் யார் யார் இருக்கிறார்கள் ?

    குமரன், மதுரையம்பதி, கண்ணபிரான், கே ஆர் எஸ் , கீதா சாம்பசிவம் எல்லோரும்
    ஒரு கமிட்டி அமைத்து மூன்று மாதங்களுக்குள் ஒரு ரிபோர்ட் தாக்கல் செய்யவும்.
    கவி நயா மேடம் திரும்பி வரும்போது பரிசீலித்து முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும்.


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  16. பாண்டிமாதேவியாரின் சிலம்பில் முத்துகள் இருந்ததாகவும் கண்ணகியின் சிலம்பில் மாணிக்கங்கள் இருந்ததாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. மீனாட்சி மதுரையின் அரசி என்பதால் இவள் சிலம்புகளிலும் முத்துகள் இருக்குமோ என்று எண்ணினேன். கண்ணகி இவள் உருவம் என்பதால் இவள் சிலம்புகளில் மாணிக்கங்களும் இருக்கலாம். :-)

    ReplyDelete
  17. வாங்க சுப்பு தாத்தா. பாடல் அருமை. நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படங்களும் வெகு அழகு. மிக்க நன்றி.

    //அன்னையில் கால் கொலுசு தண்டையில் முத்துப்பரல்களா அல்லது மாணிக்கபரல்களா ?//

    நான் பாடின அன்னிக்கு அம்மா மாணிக்கப் பரல்கள் உள்ள சிலம்புதான் போட்டிருந்தா :)

    ReplyDelete
  18. //மீனாட்சி மதுரையின் அரசி என்பதால் இவள் சிலம்புகளிலும் முத்துகள் இருக்குமோ என்று எண்ணினேன். கண்ணகி இவள் உருவம் என்பதால் இவள் சிலம்புகளில் மாணிக்கங்களும் இருக்கலாம். :-)//

    மதுரையின் மகாராணி என்ன வேணாலும் எப்ப வேணாலும் போட்டுக்குவா :) அதனால நீங்க சொன்ன ரெண்டுமே சரியாதான் வரும் குமரா :)

    ReplyDelete
  19. அருமையான மீனாட்சி பாட்டு

    ReplyDelete
  20. நீண்ட வருடங்களுக்குப் பிறகு மதுரைக்குச் செல்லும் வாய்ப்பும்,
    கும்பாபிஷேகத்தை காணும் பேறும் பெற்றேன். 55 ஆண்டுகளுக்கு முன்னால் துள்ளித்திரிந்த இடங்களின் மாறியும், மாறாமலுமிருந்த அழகு கண்டு அதிசயித்தேன்.

    எல்லாம் அன்னையின் அருள்.

    அழகாயிருக்கு கவிதை.

    ReplyDelete
  21. வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அமுதா :)

    ReplyDelete
  22. வாங்க ஜீவி ஐயா. கும்பாபிஷேகம் பார்க்கக் கிடைச்சதா உங்களுக்கு? அன்னையின் அருள் என்பது உண்மைதான் :) வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)