Tuesday, January 13, 2009

பொங்கலோ பொங்கல்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!



பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


--கவிநயா

10 comments:

  1. பொங்கலோ பொங்கல்!!

    !!! பொங்கள் நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  2. எல்லோரும் நலம் வாழ பொங்கிய வாழ்த்துப்பா அருமை.

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
    மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
    பொங்கலோ பொங்கல்!!//

    --- கவிநயா.

    மிக்க நன்றி.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சதங்கா, ராமலக்ஷ்மி, ஜீவி ஐயா, பூர்ணிமாசரண், திகழ்மிளிர், அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    சுப்பு தாத்தா இந்த வாழ்த்துக்கு இசையமைத்து பாடியிருக்கிறார். நேரம் கிடைக்கையில் கேட்டு மகிழுங்கள் -

    http://uk.youtube.com/watch?v=dXy4xvOjo80

    ReplyDelete
  7. //நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
    மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!//

    அதே அதே
    பொங்கலோ பொங்கல்!!

    பொங்கல் வாழ்த்துக்கள்-க்கா!
    சரி, மாட்டுப் பொங்கல்-க்கு, பூசைக்கு மாடு இல்லை-ன்னா சொல்லுங்க! நான் ஓ(ட்)டியாரேன்! :)

    ReplyDelete
  8. //சரி, மாட்டுப் பொங்கல்-க்கு, பூசைக்கு மாடு இல்லை-ன்னா சொல்லுங்க! நான் ஓ(ட்)டியாரேன்! :)//

    ஆஹா, ஆவினம் ஓட்டி வர கண்ணனை விடப் பொருத்தமானவர் யார்? :)

    ReplyDelete
  9. தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. நன்றி சரவணகுமார்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)