Monday, January 26, 2009

100. என் தமிழ்!!

எல்லாரும் 100-க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சதும், ஏண்டா 100-ஐ நினைவு படுத்தினோம்னு ஆயிடுச்சு. "எமக்குத் தொழில் கவிதை"ன்னு பாரதி சொன்ன மாதிரி, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கவிதை தான். அதனால இந்த பதிவுக்கும் ஒரு (குட்டிக்) கவிதைதான் :)

தமிழ் பெண்ணா என்னைப் பிறக்க வச்சது மட்டுமில்லாம, தமிழை வாசிக்கவும், நேசிக்கவும், சில சமயம் எழுதவும் வெச்ச இறைவனுக்கு என் முதல் நன்றிகள். எழுத்துப் பயணத்தில் (பெரீசா ஒண்ணும் சாதிக்கலைன்னாலும் அதுல கிடைக்கிற திருப்தியை மறுக்க முடியாது) கூடவே வந்து ஊக்குவிக்கும் எல்லாரையும் பற்றி சொல்லி அவங்களுக்கும் தனித் தனியா நன்றி நவிலணும்னு ஆசைதான். ஆனா அது ரொம்ப நீண்டுடுமோ, பெரீய்ய்ய சுய புராணமாயிடுமோங்கிற பயமும் இருக்கறதால, இப்போதைக்கு தள்ளி போட்டு வைக்கிறேன். ஆனா இதை வாசிக்கிறவங்களுக்கும், ஆரம்ப காலம் முதல் இன்று வரை என் எழுத்துக்கு பலவிதமா உரமிடறவங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சுக்கறேன்.

எல்லாருக்கும் சொல்லிட்டு, முக்கியமான ஆளை மறந்துட்டா எப்படி? இதோ, அந்த முக்கியமானவருக்கு, என் இனிய தமிழன்னைக்கு, இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்....





என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!




--கவிநயா




28 comments:

  1. விட்டா கண்ணன் என் காதலன் மாதிரி தமிழ் என் காதலன்/காதலி என்று எழுதிவிடுவீர்கள் போல் இருக்கிறது.

    100வது இடுகைக்கு வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  2. /தமிழ் பெண்ணா என்னைப் பிறக்க வச்சது மட்டுமில்லாம, தமிழை வாசிக்கவும், நேசிக்கவும், சில சமயம் எழுதவும் வெச்ச இறைவனுக்கு என் முதல் நன்றிகள்./

    சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
  3. /என்தமிழ் என்கின்ற போதில்
    என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
    தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
    தீஞ்சுவை தேனாறாய் ஓடும்/

    /உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
    உயிருக்குத் தாலாட்டும் அவளே
    என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
    என்தமிழை மறப்பேனோநானே! /

    அருமை ஆனால்
    அத்தனையும் உண்மைகள்

    வாழ்த்துகள்

    மீண்டும் ஒரு
    முறை

    தங்களின் 100- ஆவது இடுகைக்கும்,
    இதை தமிழ் அன்னைக்கு
    சமர்ப்பித்திற்கும்

    ReplyDelete
  4. ஆகா அனைவரும்
    ஆவலுடன் காத்திருந்த
    தங்கள் நூறாவது பதிவு
    தமிழ் அன்னைக்கே அர்ப்பணம்.
    அதன் அத்தனை வரிகளும்
    அதி அற்புதம்.
    வாழ்த்துக்களை வைக்கிறது
    இந்தத் தமிழ் அமுதம்!
    [எனது வலைப்பூ உரலுங்க:)!]

    ReplyDelete
  5. 100வது இடுகைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நூறாவது இடுகைக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள். நூறு பதினாயிரமாகப் பல்கிப் பெருகவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. //எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கவிதை தான்.//



    கருட சேவை கவிதைக்கும் சிறப்பு நன்றி.


    இன்னும் பல கவிதைகள் எழுதி குவிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
    உயிருக்குத் தாலாட்டும் அவளே
    என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
    என்தமிழை மறப்பேனோநானே! //

    நூறாவது பதிவு, அன்னை தமிழுக்கு அர்ப்பணிப்பாக அருமையாக அமைந்து விட்டது..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. சென்சுரி அடிச்சதுக்கு பாராட்டுக்கள்! மேலும் மேலும் நல்ல படைப்புக்களை தமிழன்னை அருளட்டும்.!

    ReplyDelete
  10. 100வது பதிவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;))

    கவிதை (எப்போதும் போல)சூப்பர் ;)

    ReplyDelete
  11. //தங்களின் 100- ஆவது இடுகைக்கும்,
    இதை தமிழ் அன்னைக்கு
    சமர்ப்பித்திற்கும்//

    வாங்க திகழ்மிளிர். உங்களுடைய வாழ்த்துக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //வாழ்த்துக்களை வைக்கிறது
    இந்தத் தமிழ் அமுதம்!
    [எனது வலைப்பூ உரலுங்க:)!]//

    தெரிஞ்சு போச்சு, ராமலக்ஷ்மி :) வருகைக்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    (100-வது ஏமாற்றமா அமையாத வரை சரிதான் :) அதான் கொஞ்சம் பயமா இருந்தது)

    ReplyDelete
  13. //100வது இடுகைக்கு வாழ்த்துகள்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பூர்ணிமா.

    ReplyDelete
  14. //நூறாவது இடுகைக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள். நூறு பதினாயிரமாகப் பல்கிப் பெருகவும் வாழ்த்துகள்.//

    வாங்க கீதாம்மா. வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. //கருட சேவை கவிதைக்கும் சிறப்பு நன்றி.//

    என்னைக் கேட்டதற்கு உங்களுக்குதான் நான் நன்றி சொல்லணும் :)

    //இன்னும் பல கவிதைகள் எழுதி குவிக்க வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி கைலாஷி.

    ReplyDelete
  16. //நூறாவது பதிவு, அன்னை தமிழுக்கு அர்ப்பணிப்பாக அருமையாக அமைந்து விட்டது..

    வாழ்த்துக்கள்..//

    வாங்க ஜீவி ஐயா. உங்கள் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  17. எப்படியோ உங்களை விட்டுட்டு போயிட்டேன்.. மன்னிச்சுக்கோங்க :(

    //விட்டா கண்ணன் என் காதலன் மாதிரி தமிழ் என் காதலன்/காதலி என்று எழுதிவிடுவீர்கள் போல் இருக்கிறது.//

    எழுதலாமே :)

    //100வது இடுகைக்கு வாழ்த்துகள் அக்கா.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமரா.

    ReplyDelete
  18. //சென்சுரி அடிச்சதுக்கு பாராட்டுக்கள்! மேலும் மேலும் நல்ல படைப்புக்களை தமிழன்னை அருளட்டும்.!//

    ஆசிக்கு மிக்க நன்றி திவா :)

    ReplyDelete
  19. //100வது பதிவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;))//

    மிக்க நன்றி கோபி.

    //கவிதை (எப்போதும் போல)சூப்பர் ;)//

    அப்படின்னா அடிக்கடி படிக்கிறீங்கன்னு அர்த்தமா? மிக்க மகிழ்ச்சி கோபி :)

    ReplyDelete
  20. மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிக்கா...

    இன்னும் பல்லாயிரம் இடுகைகள் இட அன்னை அருள்வாள்.

    ReplyDelete
  21. //மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிக்கா...

    இன்னும் பல்லாயிரம் இடுகைகள் இட அன்னை அருள்வாள்.//

    அம்மா வாக்கா எடுத்துக்கறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மௌலி :)

    ReplyDelete
  22. அழகிய வரிகளால் தமிழுக்கு மகுடம் சூட்டியிருக்கிறீர்கள் கவிநயா..

    //காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
    பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
    உள்ளங்கவர் கள்வன்போலே - என்
    உதிரத்தி லேகலந்து நிறைந்தாள் //

    அருமை சகோதரி !

    ReplyDelete
  23. //அழகிய வரிகளால் தமிழுக்கு மகுடம் சூட்டியிருக்கிறீர்கள் கவிநயா..//

    வாங்க ரிஷு. வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  24. /உங்கள் தொடர்பதிவுக்கான அழைப்பை பார்த்தேன். ஆனா விவரம் ஒன்றும் கண்டு பிடிக்க முடியலை. /

    நல்ல தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டதால் மனத்திற்கு வருத்தம்
    அளிக்கிறது. சிறு வயதில் பயன்படுத்திய
    சொற்களை எத்தனை இன்று இழந்திருப்போம். அதைப் பற்றி ஒரு பதிவு தான் இந்த வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் என்னும் தொடர் பதிவு

    ReplyDelete
  25. நூறுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. நன்றி சதங்கா.

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் கவிநயா..
    இன்னும் நெறைய நெறைய எழுதுங்க..
    :)

    ReplyDelete
  28. வாங்க சரவணகுமார். மிக்க நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)