Wednesday, December 10, 2008

ஓராறு முகம் கொண்ட வேலா !


அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!



ஓராறு முகம் கொண்ட வேலா
ஓம்காரப் பொருள் சொன்ன பாலா
ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ்
அடிமைக்கு அருள் செய்ய வாவா!

நெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப்
பற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய்
சுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை
விட்டுத் தெறித் தோடச் செய்வாய்!

சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை
பக்திகொண் டேத்து கின்றேன் குமரா
முத்தாக வந்து தித்த உன்னை - என்
சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா!

மயில் மீது ஏறியே வருவாய் - என்
மனதிலே கோவில் கொண் டமர்வாய்
பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய்
பிறவிப் பயன் தந்து அருள்வாய்!


--கவிநயா


அம்மன் பாட்டு நூறாவது இடுகையும் இன்றுதான். வந்து அன்னையைத் தரிசித்து அருள் பெறுங்கள்!

14 comments:

  1. மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்குதுங்க அந்த வேலவனைப் போல :-) நன்றி

    ReplyDelete
  2. அழகான படம். அழகான கவிதை!

    ReplyDelete
  3. //ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ்
    அடிமைக்கு அருள் செய்ய வாவா!//

    ஆகா அருமை.

    நான் எப்போதும் உங்களிடம் சொல்வதையே இனியவள் புனிதாவும் சொல்லியிருக்காங்க இனிமையா:
    //மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்குதுங்க//

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் கவிநயா!

    ReplyDelete
  4. //பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய்
    பிறவிப் பயன் தந்து அருள்வாய்!//

    மிக அருமையான வரிகள்....ஒளியே இறை என்றும் எல்லா தெய்வங்களையும் தீபத்தில் வழிபடுவதுண்டு என்றும் நேற்று பதிவு எழுதினேன்....இன்று நீங்களும் ஞானபண்டிதனை பரிதியாய் பார்க்கிறீர்கள். :-)

    உங்களுக்கு எனது கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை
    பக்திகொண் டேத்து கின்றேன் குமரா
    முத்தாக வந்து தித்த உன்னை - என்
    சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா!//

    இது தான் ஞானம். அந்த சொத்து என்றும் மனத்தில் நிலையாய் இருக்கையில், மற்ற எந்த நிலையிலா சொத்தும் மனசை சலனப்படுத்தாது என்பது உண்மைதான்.

    நல்லதொரு மனசு தந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எளிமை இனிமை எப்போதும் போல, கார்த்திகை திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்குதுங்க அந்த வேலவனைப் போல :-)//

    வாங்க புனிதா. முதல் வருகைக்கும் இனிமையான கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  8. //அழகான படம். அழகான கவிதை!//

    அழகனின் அழகுக்குக் கேட்கணுமா? வருகைக்கு நன்றி திவா.

    ReplyDelete
  9. //ஆகா அருமை.

    நான் எப்போதும் உங்களிடம் சொல்வதையே இனியவள் புனிதாவும் சொல்லியிருக்காங்க இனிமையா://

    ஆம் ராமலக்ஷ்மி :) ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. //மிக அருமையான வரிகள்....ஒளியே இறை என்றும் எல்லா தெய்வங்களையும் தீபத்தில் வழிபடுவதுண்டு என்றும் நேற்று பதிவு எழுதினேன்....இன்று நீங்களும் ஞானபண்டிதனை பரிதியாய் பார்க்கிறீர்கள். :-)//

    எழுதும்போது இயல்பாக வந்தது, பொருத்தமாக அமைந்து விட்டது குறித்து மகிழ்ச்சி மௌலி :) நீங்கள் சுட்டிக் காட்டிய பின் தான் தெரிந்தது.

    உங்கள் திருக்கார்த்திகைப் பதிவு மிக அருமை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. //இது தான் ஞானம். அந்த சொத்து என்றும் மனத்தில் நிலையாய் இருக்கையில், மற்ற எந்த நிலையிலா சொத்தும் மனசை சலனப்படுத்தாது என்பது உண்மைதான்.

    நல்லதொரு மனசு தந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

    உங்கள் அன்பான வார்த்தைகள் மனதை நெகிழச் செய்தன ஜீவி ஐயா. வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //எளிமை இனிமை எப்போதும் போல, கார்த்திகை திரு நாள் நல் வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  13. வழக்கம் போல அசத்திட்டீங்க...

    //சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை
    பக்திகொண் டேத்து கின்றேன் குமரா
    முத்தாக வந்து தித்த உன்னை - என்
    சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா!//

    இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சது. என்னுடைய 'to do' list ல சேத்துக்கலாமா? :-)

    -மீனாக்ஷி

    ReplyDelete
  14. //இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சது. என்னுடைய 'to do' list ல சேத்துக்கலாமா? :-)//

    கேட்கணுமா? தாராளமா சேர்த்துக்கலாம் :) வருகைக்கு நன்றி மீனா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)